ஞாயிறு, மார்ச் 27, 2011

திமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை இயக்கும் 'ராகுல் காந்தி'


முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது தேர்தல் ஆனணயம். 1950ம் வருடம் தொடங்கப் பட்டலும் 1990-ல் டி.என். சேஷன் காலத்தில் பரவலாக வெளியே தெரியத் தொடங்கிய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது அதிகாரங்களை வளர்ந்துக் கொண்டு இன்று அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக, தடை கல்லாக மாறியுள்ளது. " இந்த ....சனியனை என்ன செய்யலாம்?" என்று அரசியல் கட்சிகள் குமுறும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.



தற்போது தமிழகம், புதுச்சேரி,கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமே தேர்தல் ஆணையத்தல் மிக உண்ணிப்பாக கண்காணிக்கப் படுகிறது.



அதுவும் தமிழக தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் திமுக அரசை சற்று அதிகமாகவே கலங்கடித்துவருகிறது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் திமுக அரசுக்கு 'செக்'வைப்பதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட முதல்வர் கலைஞர் தேர்தல் கமிஷனைப் பற்றி சற்று பகிரங்கமாகவே அறிக்கை விட்டிருந்தார். 'எதிர்கட்சியை ஆளும் கட்சியாகத் துடிக்கிறது' தேர்தல் ஆணையம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் கருணாநிதி. அதயே மனுவாக எடுத்துக் கொண்டு தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டுள்ளது நீதிமன்றம்.

பின்னணியில் பெரிய 'கை'!

அரசியல் மற்றும் அதிகாரத்தில் பழம் தின்று கொட்டை போட்ட திமுகவையே முழிபிதுங்கவைக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிதீவிர செயல்பாடுகளுக்கு பின்னணியில் ஒரு பெரிய'கை' இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கைதான் 'மாஸ்டர் ஆஃப் த பிரைனாக' திமுகாவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை இயக்கிவருகிறது. அந்த 'கை' திருவாளர் ராகுல்காந்தி?! தேர்தல் ஆணையத்தின் மூலம் பல கிடிக்கிப்பிடிகளை போட்டு திமுகவின் பாய்ச்சலை கட்டுப்படுத்தப் பார்க்கிறார் ராகுல்.


பொதுவாக தமிழகத்தின் மீது ஒருவித காழ்புணர்ச்சி ராகுல்காந்திக்கு எப்போதும் உண்டு. அதுவும் திமுக என்றால் வேப்பங்காய்தான். தமிழகத்தோடு பீகார் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை எப்போதும் ஒப்பிட்டு பார்ப்பார் ராகுல் காந்தி. அதை பல மேடைகளிலும் கூறியிருக்கிறார். அந்த மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி இருக்க தமிழகத்தின் வளர்ச்சி அவரை பொறாமைப் படவைக்கும். ஏனென்றால் அந்த வட மாநிலங்களில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரசின் வசம்தான் இருந்தது.

தமிழகத்தின் மீது வெறுப்பு!

கூடவே தமிழக மக்கள் காங்கிரசை புறக்கணித்து 60 ஆண்டுகளாகிவிட்டதும் ஒரு காரணம். இங்கு தொடர்ந்து திராவிட கட்சிகளே ஆண்டு வருவதாலும் மக்கள் காங்கிரசை ஏற்று கொள்ளாததாலும் ஒரு வித வெறுப்பு அவர் மனதில் கனன்றுக் கொண்டே இருக்கிறது. 'உனக்கு எப்படி தெரியும்...?' என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கு ராகுல்காந்தியின் சமீபத்திய செயல்பாடுகளையே உதாரணமாக சொல்லலாம். காங்கிரசின் அடிப்படை நிலையை வலுவாக்க அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். இனி வரும் தேர்தல்களில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் தனியா நிற்க கட்சியை வலுப்படுத்துவது. அதற்காக அடிக்கடி தமிழகம் வந்தது. வரும்போது மரியாதை நிமித்தமாகக் கூட தமிழக முதல்வரை சந்திக்காதது. காங்கிரசில் பெரும் எண்ணிகையிலான உறுப்பினர்களை சேர்த்தது. அதில் முக்கியமாக இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தியது. அதற்கு தலைவரக யுவராஜை தேர்தேடுத்தது. அதற்காக ஒரு இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை தமிழகத்தில் நடத்தியது. என்று பட்டியலை நீட்டலாம்.

அலைகற்றையாக ஊழல்

'வராது வந்த மாமணிபோல் வந்த' ஸ்பெக்ட்ரம்' 2ஜி அலைகற்றை ஊழலின் பழியை சாமர்த்தியாமாக திமுகவின் மீது போட்டது. அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வட இந்திய ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பியது . அதற்கு முத்தாய்பாக தொலைதொடர்பு துறை மத்திய அமைச்சர் ஆ.ராசாவை அப்பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து... அவரை விசாரணை கைதியாக தில்லி திகார் ஜெயிலில் அடைத்து திமுகவின் இமேஜை பதம்பார்த்தது. தேர்தல் கூட்டணியை சாக்காக வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டது, கூட்டணி பேச்சி வார்த்தைக்காக சோனியாவை சந்திக்க தில்லி சென்ற திமுக தலைமையை நெடுநேரம் காக்காவைத்தது. திமுகாவிற்கு தண்ணிர் காட்டி சாமர்த்தியமாக 63 தொகுதிகளை பெற்றது. என்று அனைத்திலும் 'நீக்கமற நிறைந்திருக்கிறார் ராகுல் காந்தி'.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் சீட்டுக்காக அவரது காலில் விழும் காங்கிரஸ் தமிழகத்தில் கருணாநிதியின் தலையில் ஏறி 63 இடங்களை பெற்று அமர்ந்திருக்கிறது. இது காங்கிரஸின் வளர்ச்சியல்ல, திமுகாவின் தளர்ச்சி என்கிறார் அரசியில் பார்வையாளர் தமிழருவி மணியன்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி!

இந்த விளையாட்டில் அடுத்த அஸ்திராமாக ராகுல் காந்தி எடுத்திருக்கும் ஆயுதம்தான் 'தேர்தல் ஆணையம்'.

திமுகாவின் சக்ஸஸ்புல் வெற்றிக்கு காரணம் 'திருமங்கலம் பாணி தேர்தல்' இந்த பார்முலாவை இந்த தேர்தலில் திமுக பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்தில்தான் தமிழகம் முழுவதும் வாகனங்களில் சோதனை முடுக்கிவிடப்பட்டது. தினம்தோறும் தமிழகத்தின் பல ஊர்களில் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சகங்கள்

கைப்பற்றப் பட்டன. இது அதிகப்படியாக போய் வியாபரத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட பெரு தொகைகள் கூட பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது தேர்தல் ஆணையம்.

ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்துவிடுவார்களோ என்ற பயத்தில் சிவில் மற்றும் காவல் துறையிலும் 'கை' வைத்தது தேர்தல் ஆணையம். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 11 பேரை, அதிரடியாக மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதில் தங்கள் சொந்த ஊர்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் என பலரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் உள்ளிட்ட சிலரை மாற்றக் கோரி, அ.தி.மு.க. சார்பில், தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழகத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

தமிழக டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரண் மாற்றப்பட்டு, புதிய டி.ஜி.பி.யாக போலோநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை புறநகர் ஆணையாளர் ஜாங்கிட் மாற்றப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. கரண்சின்ஹா புறநகர் ஆணையாளராகவும், தென் மண்டல ஐ.ஜி. பாலசுப்ரமணியன் மாற்றப்பட்டு மஞ்சுநாதா புதிய ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சி வைத்தியம் செய்துக் கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ராகுலின் கணக்கு!
தேர்தல் ஆணையாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் திமுகாவை கலங்கடிக்கவே செய்கிறது. நமது கூட்டணியில்தானே காங்கிரஸும் இருக்கிறது 'பின்... ஏன் இப்படி?' என்ற கேள்வி திமுகாவினரிடம் மட்டுமல்லாமல் கூட்டணிகட்சியான பா.ம.க., மற்றும் வி.சி.களிடமும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் எல்லாம் திமுகாவிற்கு எதிராக இருக்க, அவையெல்லம் அதிமுகாவிற்கு சாதகமாக மாறிவருகிறது.

இப்படி திமுக மீது பன்முனை தாக்குதல் தொடுக்கும் ராகுல் காந்தி, திமுக மீதி கலங்கத்தை சுமத்த... கிடைக்கும் சந்தர்ப்பத்தை யெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். இதற்கு அவரது அன்னையின் ஆதரவும் உண்டு. அவரது ஒரே இலக்கு தமிழகத்தில் காங்கிரஸை மீண்டும் தன்னிச்சையாக அறியனையில் அமர்த்துவதுதான். அதற்கு முதலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு கூடயிருந்தே குழுபறித்தால்தான் உண்டு. 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை திமுகாவிற்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்' என்ற மன நிலையில் இருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுலின் கணக்கு எதில் கொண்டு போய் முடியும்...?


*******

5 கருத்துகள்:

RVS சொன்னது…

நல்ல அலசல். ;-)

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்களது வாழ்த்திற்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு ....இது சத்தியமான உண்மை ...திமுக விற்கு கெட்ட காலம்...அரம்பிட்சிடுட்சி .....

பெயரில்லா சொன்னது…

nalla pethal karpanai

Jayadev Das சொன்னது…

\\அவரது ஒரே இலக்கு தமிழகத்தில் காங்கிரஸை மீண்டும் தன்னிச்சையாக அறியனையில் அமர்த்துவதுதான். அதற்கு முதலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு கூடயிருந்தே குழுபறித்தால்தான் உண்டு. \\எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா !! யார் கண்டது, இது நெசமாக் கூட இருக்கும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...