"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை"
சமீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்!. புதுச்சேரி அரசில் Gazetted Officer ஆக பணியாற்றும் முனைவர் இராஜ. தியாகராஜன் அவர்களின் பிறந்த நாளுக்கு (5th May) ஏராளமான முக நூல் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதற்கு அவர் மிக அழகாக.... தூய தமிழில் நன்றியும் வாழ்த்துகளையும் சொல்லியிருந்தார்.
கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தபோதுதான் ஒரு வித்தியசத்தை காணமுடிந்தது. அதில் ஒவ்வொரு நன்றிக்கும் வாழ்த்திற்கும் வித விதமான தூய தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார். அவை நாம் அதிகம் அறியப் படாத தமிழ் சொற்கள். அதில் ஒவ்வொரு வாழ்த்தையும்... விடாமல் படித்துவிட்டேன். ஒவ்வொன்றையும் தனித்தனிமையுடன் வழங்கியிருந்தார் இராஜ. தியாகராஜன். அவரின் பணி போற்றத்தக்கது!
அதை... இந்த தமிழ்கூறும் நல்லுலகமும் பயன்பெறவேண்டும் எடுத்து சேமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொகுப்பு.
இனி வாழ்த்து கூறியவர்களுக்கு....அவர் தந்த நன்றியும் வாழ்த்துகளும்.....!
- என்னுடைய உளமார்ந்த நன்றி ஒண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நற்றமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பைந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அறுகெனவே நலம்விளைக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி வான்மழையாய் இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி செந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பத் தமிழ் போன்றே இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நட்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தெங்கிளநீராய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தீந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய் வளங்கூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பமிகு செந்தமிழின் சுவையூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி கற்கண்டாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பண்ணார் தமிழெனவே நாமணக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி கன்னலின் சாறனைய உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பூந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தூயநற்றமிழ்ப் பண்ணிசையாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென வருடுகின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தமிழ் அமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- வாழ்தல் இனிது; அதனினும் இனிது உங்களைப் போல் அடுத்தவர்க்காய் வாழ்தல்.
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி ஆரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தெள்ளமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி சீரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி விண்ணமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- மிக்க நன்றி வைகறையின் தண்ணொளியாய் மிளிர்கின்ற உங்கள் வாழ்த்துரைக்கு.
- என்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பரிவூறிய உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அமிழ்தெனவே தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- ன்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பசுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி செங்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி இந்தளமாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அலைபாயும் கானடாவாய் கட்டியிழுக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்னையின் அன்பெனவே இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பூமணமாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனின் சுவையூறி தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி கனிச்சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி மலையிழியும் சுனைச் சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பனித்துளியாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தேந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி மாருதமாய் மனம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு
- என்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென உளம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பார்க்கும் அருமைமிகு உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி எந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியின் சாறெடுத்த முப்பாலாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி ஆடகமாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி பாவன்பரே... வான்மதியாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் இனிப்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- கொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் அன்பினுக்கு கட்டுண்ட கவிஞனென்றன் கவிவரியால் நன்றிகள்!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தெளிதமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நிவி பூந்தேனாய்த் தித்திக்கும் உன்னுடைய இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தமிழார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதைப் போல இத்தனை வாழ்த்துகளா! மனம் நெகிழ்கிறது நண்பரே!
- என்னுடைய உளமார்ந்த நன்றி நட்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- என்னுடைய உளமார்ந்த நன்றி தூயநற் பண்ணிசையாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
- தேர்ந்தெடுத்த சொல்கொண்டு செறிவான வாழ்த்துகளை ஆர்வமுடன் அன்பாய்நீர் அளித்துவிட்டீர்! மனமகிழ்ச்சி; வேர்வரையில் தான்பாய்ந்து மேதினியில் மேன்மேலும் நேர்மையுடன் நீணிலத்தில் நானுழைக்க மருந்திதுவே!
- வாழ்த்துரைக்கும் வாலிபமே! வாழ்கவென செந்தமிழில் ஊழ்த்துவரும் உயர்தமிழால் உளமார வாழ்த்துகிறேன்!
அப்பப்பா.....தமிழ் இங்கு நதியாய் உருக்கொண்டு....தாவி தவழ்ந்து நம்மை வருடிச் செல்கிறது. பொதுவாகவே... திரு இராஜ. தியாகராஜனின் தமிழ் நம்மை பிரமிக்கவைக்கிறது. அவரது முகநூல் தமிழின் தொன்மங்களை அகழ்ந்தெடுக்கும் நற்பணிகளை செய்துவருகிறது. தமிழுக்கும் தமிழருக்கும் அவர் செய்யும் பணி அளப்பறியது.
வாழ்க அவரது தமிழ்ப் பணி!
வளர்க அவரது தமிழ் தொண்டு!!
7 கருத்துகள்:
மிக்க மகிழ்ச்சி...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி.
தோழமையே! ஒருபோல அனைவருக்கும் நன்றி சொல்வது, ஒற்றி ஒட்டுதல் என்றாகிவிடும் என்பதால், இயன்றவரை, உளபூர்வமான, 1493 எண்ணிக்கையிலான, முகநூல், யாகூ, ஜிமெயில், ஹாட்மெயில், புதுச்சேரி, மற்றும் தனி மடல்களுக்கு, தனிதனியாக நன்றியுரைத்தேன். அது அந்த நல்லுள்ளங்களுக்கு நான் சொல்லும் சிறு நன்றி. அவர்கள் வாழ்த்தியது என் அகவைக்கன்று. என்னில் உறைந்து என்னை வளர்க்கும் எந்தமிழை அன்றோ? இன்று நீங்கள் இதனைத் தொகுத்து வலைப்பூவில் வெளியிட்டதும், பண்ணார் தமிழன்னைக்காக அன்றோ. வாழ்க நும்தமிழ் உணர்வும் தொண்டும்.
கண்கள் பனிக்க நன்றியுறைகிறேன் அய்யா. உம் தமிழ் எம்மை ஆட்கொள்கிறது.
மரபின் மீதேறி 'கவி' சாட்டை சொடுக்கும் உம்மால், நான் புகழப்பட்டேன் என்றானபோது
தமிழ் என்னுள் மின்னெல பாய்கிறது.
வானளவு உயர்ந்த கவிதை.
வானளவு உயர்ந்த கவிதை.
உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அய்யா
கருத்துரையிடுக