வியாழன், செப்டம்பர் 08, 2011

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டி ஈழத்தமிழர்கள் பட்டினி போராட்டம்.




செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 12 ஈழத் தமிழர்கள், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கவேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிவுள்ளனர்.  நெடுங்காலமாக இந்த சிறப்பு முகாம்களில் 41 ஈழத்தமிழர்கள் எந்தவித விசாரனையுமின்றி இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
     


சிறப்பு முகாம்களுக்கும் சாதாரன முகாம்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.  சாதாரன முகாம் என்றால், நீங்கள் வழக்கமான வேலைகளை கவனிக்கலாம். வெளியே வேலைக்குச் செல்லலாம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். ஆனால், சிறப்பு முகாம் என்றால் அது ஒரு ஜெயில் வாழ்க்கை போன்றதுதான். இங்கு அடைத்துவைக்கபட்டுள்ள இவர்கள்,  வழக்கமான  முகாம் போன்று வெளியே நடமாட முடியாது.   எதுவாக இருந்தாலும் அரசின் அனுமதி பெற்றுதான் வெளியே செல்ல முடியும். 



இப்படி தொடர் இன்னல்களை அனுபவித்த வந்த இவர்கள், தங்களை இந்த சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டி,  கடந்த திங்கள் முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதை துவக்கி உள்ளனர்.   இது தொடர்பாக தங்களது கோரிக்கையை  தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊடகங்கள் என்று   அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியதாவது....! 
     

     ஐயா!
மேற்படி ஈழத்தமிழர்களாகிய நாம் செங்கற்பட்டு சிறப்புமுகாமில் மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். எமது குடும்பங்கள் எங்களைப்பிரிந்த நிலையில் ஈழத்தில் வாழமுடியாமல் இங்கு வந்து இங்கும் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வாழ்வாதாரமும் அற்ற நிலையில் பசி, பட்டினியால் வாடுகின்றனர்.

எங்களில் அனேகமானவர்கள் மீது தேவையற்ற பொய்யான வழக்குகள்
சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுபின்னர் கனம் நீதிபதி அவர்களின் ஆணைப்படி பிணையில் (ஜாமீன்) வெளியே வரும்போது சிறைவாயிலிலே வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில்  டைக்கப்பட்டுள்ளோம். சிலர் எவ்வித வழக்குகளுமில்லாமல் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமாக நாற்பத்தொரு(41) பேர் உள்ளோம்.

ஐயா!
இங்குள்ளவர்கள் யாரும் இந்திய இறையாண்மைக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களென்று சொல்வதற்கில்லை.

 நாங்கள் பலதடவைகள் கேட்டு அகிம்சையாக போராட்டங்களை நடத்தியும் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே நாம் காந்திய வழியில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களதும் எங்களின் குடும்பங்களினதும் வாழ்க்கையினை கருத்தில் கொண்டு எம்மை விடுதலை செய்யும் வரை  எதிர்வரும் 05-09-2011 திங்கட்கிழமையிலிருந்து உண்ணாவிரத்ததினை மேற்கொள்ளவுள்ளோம் என்பதையும் அத்துடன் நாங்கள் மருத்துவச்சிகிச்சைக்கோ வேறு எதுவித முதலுதவிச்சிகிச்சைக்கோ எங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிக்கமாட்டோம்.

ஒன்றில் விடுதலையாகவேண்டும் அல்லது மரணமே முடிவாகினாலும் அதற்கும் சித்தமாக இருக்கின்றோம் என்பதனையும் தங்களின் கருணை உள்ள கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

 நன்றி.
இங்கனம்
உண்மையுள்ள
செங்கற்பட்டு சிறப்புமுகாம்
உண்ணாவிரதிகள்.

05-09-2011 உண்ணாவிரதம் இருக்கும்
உண்ணாவிரதிகளின் பெயர் விபரம் கீழ்வருமாறு,

1. மோ.தேவாகரன்
2. ஏ.கே.சேக்பரித்
3. செ.நாராயணதாஸ்
4. S.அருள்குலசிங்கம் ரமேஸ்
5. கணேசலிங்கம்
6. சந்திரகாந்தன்
7. செ.கிருஷ்ணலிங்கம்
8. அ.செல்வராசா
9.ரா.செந்தூரன்
10.யோ.சிறிஜெயன்
11.பா.தர்மராசா
12.ச.கிரிதரன்

சொந்த நாட்டில் துயரம் என்றுதான், தங்களது தொப்புல் கொடி உறவான தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இங்கு வந்தும்,  மத்திய அரசின் தவறான கொள்கையால் சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்துவைத்து சித்ரவதை செய்கின்றனர். இங்கு அடைத்து வைத்துள்ளவர்களால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்ற போர்வையில் மத்திய  அரசு  இந்த தவறான முடிவை தொடர்ந்து செய்துவருகிறது.   சொந்த மண்னை பிரிந்து, சொந்தங்களை பிரிந்து, சொத்துகளை இழந்து துயரத்தின் விளிம்பில் இருக்கும் இவர்களை சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது 'தமிழன் வீதி'


கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...