சென்னையில் வெயில் சதமடிக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் அன்றாட வாழ்வை சற்றே எரிச்சல்பட வைக்கிறது. அவ்வப்போது ஏற்படும் 'மின்வெட்டு, கோடை வெயிலை இன்னும் நரகமாக்குகிறது'. மக்கள் பேருந்துகளில் புழுங்கி பயணம் செய்கின்றனர். இந்த சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மழைவந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தது மனது. சரி.... மழைகாலத்தில் நான் எடுத்த புகைப்படங்களையாவது பார்க்கலாமென்று தோன்றியபோது....புகைப்படங்களின் குளிர்ச்சி பதிவாக பகிரச்செய்தது.
இந்த பதிவு முழுவதும் மழைக்காலத்தில் சென்னையில் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்திருகின்றேன். உங்களுக்கு இது சின்ன மழைச் சாரலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
இந்த பதிவு முழுவதும் மழைக்காலத்தில் சென்னையில் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்திருகின்றேன். உங்களுக்கு இது சின்ன மழைச் சாரலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
என்னதான் வார்த்தையில் வர்ணஜாலம் காட்டினாலும் படத்தில் பார்ப்பது எப்படி....?!
மழையில் நனையும் எழும்பூர் ரயில் நிலையம். |
மழை விட்டபிறகு..... |
இருக்கை எங்கும் மழைத் துளிகள். |
புறப்படப்போகும் ரயிலும் -வரப்போகும் மழையும். கோடம்பாக்கம் ரயில் நிலையம். |
|
புத்துணர்வுப் பெறப்போகும் விக்டோரியா மாளிகை |
கரு மேகங்கள் சூழ்ந்திருந்தாலும் தன் கடமையிலிருக்கும் உழைப்பாளர் சிலை. |
மெரீனா போர்த்தி இருக்கும் நீர் ஆடை! |
சிறு தூறலுக்கு சிலிர்த்துக் கிடக்கும் நாய் |
மழையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் காக்கை |
கல்லுக்குள் ஈரம்! |
அவ்வளவு தண்ணியிலும் 'ஸ்டடியா' நிற்கும் பீர் பாட்டில்? |
படங்கள் : தோழன் மபா.
5 கருத்துகள்:
சென்னையில் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தாராளமாகத்தான் இருக்கும். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை இல்லல்களையும் பொறுத்துக் கொண்டு ஜனங்கள் எப்படி காலம் தள்ளுகிறார்கள் என்பதுதான்.
எந்தக் கஷ்டமும் பழகிவிட்டால் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
சென்னையில் இடற்பாடுகளை சகித்துக் கொண்டு சுகித்துக் கொள்கிறோம். வருகைக்கு நன்றி அய்யா.
Good blog post, nice efforts. It couldn't appear to have been penned any better. Reading this article piece of writing reminds me about my old boss! He usually kept babbling about this. I will email this post to him. Pretty confident he will probably have a high-quality read. Appreciate your posting!
Wow, amazing blog layout! How long have you ever been blogging for? you made blogging look easy. The full glance of your web site is excellent, as neatly as the content!
I just signed up to your blogs rss feed. Will you post more on this subject?
கருத்துரையிடுக