ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வதையே சாதனையாக நினைக்கும் இந்திய வீரர்கள்.

          


இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர் என்றார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்

பதக்கம் பெறும் என்று மிகுந்த எதிர்ப்பார்போடு சென்ற இந்திய ஹாக்கி ஆணி 3 தொடர் தோல்விகளை சந்தித்து,  அரையிறுதிக்கு  தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டனர். இந்திய ஹாக்கி வீரர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக உள்ளதே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்கின்றார், பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர்.   இப்போது உள்ள சூழ்நிலையில் கடுமையான போராட்ட குணத்துடன் களத்தில் இறங்கினால் மட்டுமே ஹாக்கியில் வெற்றி பெற முடியும்.  நாட்டின் கொளரவத்தை மனதில் கொண்டு முழு திறனுடன் சவால்களை எதிர்கொள்ளும் வீரர்களே அணிக்குத் தேவை.   இந்திய மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதை  மனதில்வைத்து வீரர்கள் சவால்களை எதிர்கொள்ளவேண்டும். என்று சற்று கடுமையாகவே சாடியுள்ளார் ஆஸ்திரேலியரான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய ஹாக்கி அணி பற்றி அதன் பயிற்சியாளர்  கூறிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 கருத்து:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்புடையீர் வணக்கம்! திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள எனக்கு லிப்ஸ்டர் விருது (LIEBSTAR AWARD) அளித்துள்ளார். அதனை வலைப்பதிவு நண்பர்கள் (நீங்கள் உட்பட) ஐந்து பேருக்கு பகிர்ந்துள்ளேன். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!
– தி.தமிழ் இளங்கோ ( எனது எண்ணங்கள் )
http://tthamizhelango.blogspot.com/2012/08/liebstar-award.html



'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...