எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மறைவு!
ரா.கி. ரங்கராஜன் |
பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முக திறன் கொண்ட ரா.கி. ரங்கராஜன் தனது 85ம் வயதில் சனிக்கிழமை சென்னையில் காலமானார்.
கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்த ரா.கி. தனது 16 வயதினேலேயே எழுதத் தொடங்கிவிட்டார். சக்தி காரியாலயம், காலச்சக்கரம் போன்றவற்றில் தனது இதழியல் பணியை தொடங்கியவர், பிற்பாடு 1947ல் குமுதத்தில் சேர்ந்தார். கிட்டத்தட்ட 42 வருடங்கள் குமுதத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். ரா.கி இருந்த காலம்தான் குமுதத்தின் உச்சம் என்று சொல்லாம்!.
ஹென்றி ஷாரியரின் 'பாப்பிலான்' கதையை குமுதத்தில் 'பட்டாம் பூச்சி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். ஏகோபித்த பாராட்டை பெற்ற அக் கதை மீண்டும் வராதா என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு. ஜெனிபர், கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான் போன்ற ரா.கி.யின் மொழி பெயர்ப்பு கதைகள் அன்றைய குமுதத்தில் பரபரப்பான பக்கங்கள். உலக புகழ் பெற்ற ஆங்கில நாவல்களை தமிழர்களுக்கு தமிழில் படிக்கக் கொடுத்த பெருமை ரா.கி.யைதான் சாரும்.
அவரது எழுத்தில் நான் கடைசியாக படித்தது 'நான் கிருஷ்ண தேவராயன்'. வரலாற்று நாவலான நா.கி.தே. வழக்கமான வரலாற்று நாவல்களின் சாயல்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியிருந்தார். கிருஷ்ண தேவராயரைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தியது ரா.கியின் எழுத்துகள்.
எழுத்துகளில் உயிர் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இறப்பு என்பது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!.
- தோழன் மபா.

ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை ரூ.220/-
2 கருத்துகள்:
உண்மை தான்... பலர் நெஞ்சங்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
பகிர்வுக்கு நன்றி...
தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!
கருத்துரையிடுக