12/12/12 சிறப்பு தேதி என்று கூறிக் கொண்டு ஊடகங்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. 12/12/12 ல் ரஜினியின் பிறந்த நாளும் சேர்ந்த வர நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் அந்த சிறப்புக்குறிய நாளை ரஜினியின் நாளாக்கினர். எங்கு திரும்பினாலும் ரஜினி, எதை கேட்டாலும் ரஜினி என்று அது அவருக்கே போரடித்துவிடும். அந்தளவிற்கு இருந்தது ரஜினி புராணம்.
கேஷ்வல் ஸ்டைலில் |
சின்ன பத்திரிகை முதற்கொண்டு வெகு ஜன இதழ்வரை, பெரிய டிவி முதல் சின்ன டிவி வரை ரஜினியை கூட்டாக, பொறியலாக, ரசமாக, ஊறுகாயாக, சூப்பாக என்று தாளித்தெடுத்துவிட்டார்கள்.
குமுதம் இதழும் தன் பங்குக்கு 'ரஜினி ஸ்பெஷல்' என்ற புத்தகத்தை வெளியீட்டுள்ளது. 144 பக்கங்களில் ரூ120/- விலையில் தனிப்பதிப்பாக வெளிவந்துள்ளது 'ரஜினி ஸ்பெஷல்'. ரஜினி பற்றிய அரிய புகைப்படங்கள், வித்தியாசமான துணுக்குகள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் என்று ஒரு சின்னத்திரைக்கே உரிய இலக்கணத் தொகுப்பாக இம் மலர் வெளிவந்துள்ளது.
தம்பிக்கு எந்த ஊரு...? |
இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், எழுத்தாளர்கள், ரஜினிக்கு வீடு கட்டித் தரும் மேஸ்திரி என்று எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டித் தட்டியுள்ளனர். ரஜினியைப் பற்றி எல்லொரு சொல்லிவிட்டார்கள் இதில் இவுங்க என்ன பெருசா சொல்லிவிட போறாங்க...? என்று கையில் எடுத்தால் நிச்சயம் தோல்விதான். அந்த வகையில் நல்லாவே மெனக்கெட்டு இருக்கிறார்கள்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக