புதன், ஜனவரி 22, 2014

புத்தகக் காட்சியில் இளைத்துப் போகும் பர்ஸூகள்!




                    என்னை போன்ற கிராமத்து ஆசாமிகள், பொங்கல் கொண்டாட கிராமத்துக்கு வண்டி கட்டிவிடுவதால்,  புத்தகக் காட்சிக்கு பந்தி முடியும் நேரத்தில்தான் உள்ளே நுழைய முடிகிறது. ஒரு வாரம் முழுவதும் பொங்கல் விடுமுறையை கிராமத்திலேயே கழிப்பதால், சென்னை புத்தகக் காட்சியின் முக்கிய நிகழ்வுகளை நிறையவே தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.

பபாசியோடு தினமணிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரங்கத்திலிருந்து ஆர்ச் வரை, (தினமணிக்காக)  முடிவுசெய்துவிட்டு  சரியாக புத்தகக் காட்சியின் உச்சத்தில் கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட செல்வது என்பது சற்று வேதனையான ஒன்றுதான்.

பொங்கல் விடுமுறையை உத்தேசித்தே  சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படுவதால், நமக்கு பொங்கலுக்கும் ஆசை புத்தகத்திற்கும் ஆசையாகிவிடுகிறது?!.  தமிழ் புத்தகம் வாசிப்பவர்கள்தான் தை பொங்கலை கொண்டாட கிராமத்திற்கு போகிறார்கள் என்பது எனது அவதானிப்பு. (வேற தேதிக்கு மாத்தப்படாதா.....?)

இம் முறை புத்தகக் காட்சிக்கு உள்ளே நுழையும் போது, இரவு மணி எட்டேகால்.  சென்னையின் புற நகரிலிருந்து அதன் மையத்திற்கு பீக் அவரில் வரவேண்டும் என்றால், எத்தகைய சிரமமான செவ்வாய்கிரகப் பயணம் என்பதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.  மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு புறப்பட்ட நான் (இல்லெனா குடும்பம் கோவிச்சுக்கும்) இரண்டேகால் மணி நேரம் ஜனவாச ஊர்வலமாக பவனி வந்தே  புத்தகக் காட்சியை அடைந்தேன்.

கிடைத்த முக்கால் மணி நேரத்தில் என்ன வாங்கி விடமுடியும்?. 736 அரங்குகளை பார்த்து முடிக்கவே அர்த்த ஜாமம் ஆகிவிடும். இதில் பிடித்த அரங்குகளை உள்ளே நுழைந்து, புத்தகங்களை பார்த்து (முக்கியமாக விலையை) வாங்கவேண்டும் என்றால் விடிந்துவிடும்!.

போகட்டும்...எனது பிரஸ்தாபத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சரி......வாங்கினதை சொல்லலனா நல்லா இருக்காது?

1 'மீதமிருக்கும் வாழ்வு'.
   -என்.ஸ்ரீராம்.
   பாதரசம் வெளியீடு,சென்னை.
   பக்கம் 78.  விலை ரூ80/-

2  'விமலாதித்த மாமல்லன் கதைகள்'
  -விமலாதித்த மாமல்லன்
     உயிர்மை பதிப்பகம், சென்னை.
     பக்கம் 312. விலை ரூ180/-

3 'தப்புகிறவன் குறித்த பாடல்'
   -லிபி ஆரண்யா.
   உயிர் எழுத்து, திருச்சி.
    பக்கம் 56. விலை ரூ40/-

4 'கவிதையின் கால்தடங்கள்'
    50 கவிஞர்களின்  400 கவிதைகள்
   தொகுப்பு   செல்வராஜ், ஜெகதீசன்.
    அகநாழிகை பதிப்பகம், சென்னை.
    பக்கம் 268. விலை ரூ.230/-

5 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
    -கி.ராஜநாராயணன்.
    அகரம், (அன்னம்)  தஞ்சாவூர். .
   பக்கம் 248.  விலை ரூ150/-

6 'மார்கோ போலோ பயணக்குறிப்புகள்.'
    -தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்.
    அகல், சென்னை.
   பக்கம் 312. விலை ரூ.240/-

7  'டேவிட் ஒகில்வி' (
ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்)
    கிழக்கு பதிப்பகம். விலை ரூ.125/-


8  அந்தமான் சிறை  அல்லது இருட்டு உலகம்.
     - என்.சொக்கன்.
     கிழக்கு  பதிப்பகம். விலை ரூ.100/-
   

9 லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன். (மின்னல் கதைகள்)
   - வா. மணிகண்டன்.
     யாவரும்.காம்.  விலை ரூ.90/

10  அன்ன பட்சி  
      - தேனம்மை லெக்ஷ்மணன்
       அகநாழிகை. விலை ரூ.80/-


 11  தஞ்சாவூர் - பெரிய கோவிலின் 1001-வது ஆண்டு சிறப்பு வெளியீடு.
          -டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்.
   அன்னம், தஞ்சாவூர்.
    பக்கம் 384. விலை ரூ.400/-

12  காசி ஆனந்தன் நறுக்குகள்.

    காசி ஆனந்தன் குடில். விலை ரூ.100/-

13 சேதுக் கால்வாய் தமிழர்கால்வாய்.
      காந்தளகம்.

14 திருமுறைத் திருமணம் / சைவத் திருமண தமிழ் மந்திரங்கள்.


புத்தக விமர்சனம் பிரிதொரு நாளில்.

-தோழன் மபா.

11 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான நூல்களை வாங்கியுள்ளீர்கள் ஐயா.
நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல நூல்களை வாங்கி உள்ளீர்கள்... அப்படியே ஒவ்வொரு நூலின் விமர்சனத்தையும் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் தரும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மின் நூல் பற்றி சிறிய தகவல் : உங்களுக்கு உதவலாம் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

Unknown சொன்னது…


நானும் சென்றேன் ஞாயிறு அன்று!
பயங்கரக் கூட்டம்! வாங்க நினைத்தது
பல! வாங்கியது, சில!

இராய செல்லப்பா சொன்னது…

கிராமத்தில் இருப்பவர்களை நகரத்திற்கு அழைத்துக்கொண்டு விடக்கூடாதா நண்பரே! நேற்று நிறைவு விழாவில் sponsor களுக்குக் நினைவுப் பரிசாகக் கேடயங்கள் வசன்க்ப்பட்டன. பத்ரி தான் மைக் பிடித்தார். 'தினமணி' தினமணி என்று ஏலம் விட்டார். நீங்கள் வருவீர்கள் என்று ஆவலாக இருந்தேன். ஏமாந்தேன்! (2) கி.ரா.வின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' நூலை வாங்கியிருக்கிறீர்களே, பொதுவாக 'வயது வந்த' என்றாலே பதினைந்துக்கு வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள் என்று தானே அர்த்தம்! (ஓ, குழந்தை இலக்கியம் என்று வாங்கினீர்களோ?) (3) மற்றபடி, நீங்களும் விளம்பர உச்சியில் இருந்த நூல்களைத்தான் வாங்கியிருக்கிறீர்கள். ஹும்....(பெருமூச்சு!)

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@கரந்தை ஜெயக்குமார்.

நன்றி அய்யா.
பொங்கல் சமையத்தில் தஞ்சை வந்திருந்தேன்.
வேலை பளூவால் உங்களை சந்திக்க முடியவில்லை. பிரிதொரு நாளில் தொடர்பு கொள்கிறேன் அய்யா.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன்.

நன்றி தித.

நேரம் கிடைக்கும் போது விமர்சனம் எழுதுகிறேன். மின் நூல் பற்றிய விபரம் நிச்சயம் எனக்கு உதவிகரமாக இருக்கும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@புலவர் இராமாநுசம்.

எனக்கும் அதே கதைதான். 'நினைத்தது பல....வாங்கினது சில' புத்தக அரங்கிருக்கு வந்திருந்த எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு அய்யா.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy.

புத்தகக் காட்சியின் இறுதி நாளில் விதி விளையாடிவிட்டது சார்.

மாலை 4 மணி வரைக்கும் புத்த அரங்கில்தான் இருந்தேன். சரியாக 4.15 க்கு அலுவலகத்திலிருந்து ஒரு போன் வந்தது. 5 மணிக்கு அவசர மீட்டிங் உடனே கலந்துக் கொள்ளவும் என்று. கடைசி நாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்காகத்தான் வந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.

நான் நினைத்த புத்தங்களையும் வாங்க முடியவில்லை. செல்ல நினைத்த பதிப்பகங்களுக்கும் செல்ல முடியவில்லை. வருத்தம்தான்.

விளம்பர உச்சியில் இருந்த புத்தகங்கள் என்று, எதையும் வாங்கவில்லை. சில நமது நண்பர்கள் எழுதியது, அதனால்தான்.

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' ஹீ...ஹீ... சும்மா ஜாலிக்கு!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Rathnavel Natarajan.

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

Thenammai Lakshmanan சொன்னது…

mika arumai. ennudaiya book aiyum vaangki irupatharku nandri Thozhar Ma ba. :)

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...