இனி எல்லா இழவுகளும், சென்னையில் நடைபெறுமோ என்று அச்சமாக இருக்கிறது. வட இந்தியாவில் அவ்வப்போது நிகழும் குண்டு வெடிப்புகள் நமக்கு செய்தியாகத்தான் தரப்பட்டது. அனுபவ ரீதியான பாதிப்புகள் என்பது சென்னையில் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அமைதிப் பூங்காவாக சென்னை இருந்து வருகிறது. இன்று நடந்த குண்டு வெடிப்பு நமக்குள் பெரிதும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் ரீதியாக சென்னையின் முகம் சற்று மாறத் தொடங்கியதுமே இந்த வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியலாக இருந்தாலும் சரி மதம் சார்பான அனுகுமுறையாக இருந்தாலும் சரி நடு நிலைப்போக்கையே இது நாள் வரையில் நாம் கடைபிடித்து வருகிறோம். நாட்டின் பிற நகரங்களில் நிகழும் மத ரீதியான தீவிரச் செயல்கள் கூட, சென்னையைவிட்டு தூரத்தில்தான் இருக்கும். இங்கு அனைத்து மதத்தினரும் நடு நிலை கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.
சென்னை சென்ரலில் திட்டமிட்டே இந்த குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. இதில் ஆந்திராவை சேர்ந்த அப்பாவி சுவாதி என்ற இளம் பெண் தனது இன்னுயிரை துறந்திருக்கிறாள். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சார்ந்தவர்கள். பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலே இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. சென்னையில் வெடிக்கும் வகையில் இந்த வெடி குண்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீது அப்படி என்ன வன்மம் என்று தெரியவில்லை?.
சென்னை எப்போதுமே, எல்லோரையுமே சுய சுதந்திரத்துடன் வாழ வைக்கும் ஒரு நகரம். இங்கு நமக்கான உழைப்பின் பலனை, எவரது குறிக்கீடும் இல்லாமல் நாம் அனுபவிக்கலாம். இந்த நகரத்தின் மீதான அன்பு என்பது, இங்கு குடிபெயர்ந்த மனிதர்களிடம் வாஞ்சையில்லாமல் விரவிக் கிடக்கிறது. பிற மாநிலத்தவர்கள் கூட தனக்கான தனியோரு Gated Community குடியிருப்புகளை சர்வ சுதந்திரமாய் அமைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் ஒரு மாபெரும் பரந்த இதயம் கொண்ட நகரம். வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் மார்வாரி மற்றும் ஜெயின் சமூகத்தினர் தங்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். வந்தாரை வாழ வைப்பதில் சென்னைக்கு என்றுமே முதல் இடம்.
பெண்களிடம் பேசுவதில் சென்னை இளைஞர்களுக்கு இன்றும் தயக்கம் இருக்கிறது என்கிறார் நேகா குப்தா என்ற கல்லூரி மாணவி. இவர் வட இந்தியாவிலிருந்து சென்னையில் தங்கி கல்வி பயிலுகிறார். அந்தளவிற்கு தனி மனித ஒழுக்கம் இன்னும் சென்னையில் கடைபிடிக்கப்படுகிறது. மும்பை பெங்களூரு போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு எல்லைக்குள்ளேதான் நாம் வைத்திருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் சில பாலியல் சீண்டல்களைவைத்து நாம் மொத்தமாய் எடை போட்டுவிடக் கூடாது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் விபச்சார விடுதிகள் அரசின் துணைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் 80களில் சென்னையிலும் அப்படி ஒரு 'ரெட்லைட் ஏரியாவை' ஏற்படுத்த சர்வதேச தாதாக்கள் முயன்றபோது.... அதை முளையிலேயே கிள்ளி எறிந்தது தமிழக காவல் துறை. இரவு எந்த நேரமானாலும் சென்னையின் பிரதான பகுதிகளில் எந்தவித அச்சமுமின்றி நாம் பயணிக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் அன்று!. அனுபவத்தில் கண்ட ஒன்று. சென்னை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் நகரம் எப்போதும் பாதுகாப்பாய் இருக்கிறது. காவல் துறையினருக்கு அரசியல் குறிக்கீடு இல்லையென்றால், இவர்களது பணி இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
முன்பெல்லாம் சென்னை சாலையில் ஒரு மனிதன் அடிப்பட்டு விழுந்தால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது. சாலையில் ஒரு விபத்து என்றால் ஆயிரம் கைகள் உதவிக்கு வருகிறது. பைக்கில் சறுக்கி விழுந்தால் கூட, உடனே நாலு பேர் பைக்கை நிறுத்தி உதவிக்கு ஓடி வருகிறார்கள். அந்தளவிற்கு இங்கு மனித நேயம் காப்பாற்றப்படுகிறது. மனிதனுக்கு மனிதன் உதவி செய்யக் கூடிய மன நிலையில் சென்னை மக்கள் வாழ்கிறார்கள்.
சென்னையை பாதுகாப்பதில் காவல் துறைக்கு மட்டும்தான் கவலையா, நமக்கு இல்லையா.....?. என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது. சென்னையில் கிட்டதட்ட 9 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஆனால் காவல் துறையினரின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் இல்லை. 413 பேருக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் இங்கு பணியாற்றுகின்றனர். இன்னிலையில் முழுமையான பாதுகாப்பு என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
பெற்ற அன்னைக்குப் பிறகு நம்மை காப்பாற்றும் சென்னையை நாமும் காப்பாற்றுவோம். எல்லோரும் அச்சமின்றி வாழ நமக்கான பாதுகாப்பை நாம் முன்னிறுத்துவோம். சென்னையில் மத தீவிரவாதத்தை வேரறுப்போம். மதங்களை கடந்து, சாதி இனம் கடந்து நமக்கான சென்னையை பாதுகாப்பதில் நாம் நமது பங்களிப்பைத் தருவோம். மத சாயத்தை சென்னையின் மீது பூசுவதை நாம் அனுமதிக்க வேண்டாம். மத ரீதியிலான தாக்குதல்களை நாம் முறியடிப்போம். இனி ஒரு குண்டு வெடிப்பு சென்னைக்கு வேண்டாம். மத தீவிரவாதத்தை ஒழித்து மனிதநேயம் காப்போம். கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்.
"ஒன்றிணைவோம் உறுதிபடுவோம்!"
-தோழன் மபா.
19 கருத்துகள்:
ஒரு ஜர்னலிஸ்ட் பார்வையில் நன்றாகவே சொன்னீர்கள்! எல்லோருடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கும் மதவேறுபாடு களைந்து "ஒன்றிணைவோம் உறுதிபடுவோம்!"
அன்பரே! செனைனை மட்டுமல்ல தமிழ்நாடே அவ்வாறு ஆக வேண்டும்! என்பதே என் ஆசை!
மதத் தீவிரவாதம் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் ஐயா.
ஒன்றினைவோம், கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
வலையிப் முகப்பு அருமை ஐயா
சென்னை குண்டு வெடிப்பு: பின்னணியில் முன்னணியா? –
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (01/05/2014) காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவில் அவ்வப்போது மனித குல விரோதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதும், 1998 – ன் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில், இத்தகைய கோர நிகழ்வுகள் ஏதும் நடந்திராதது நமக்கு ஆறுதலை அளித்தது. ஆனால் இன்றைய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் இலாபம்
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது.
அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
மோடிVs லேடி
தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பின்னணியில் முன்னணியா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம்.
பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.
அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.
ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.
நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?
அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்!
முஹம்மது ஷாஃபிஈ
- See more at: http://www.thoothuonline.com/archives/65451#sthash.LkkhZFHZ.dpuf
அரசியல் ரீதியாக சென்னையின் முகம் சற்று மாறத் தொடங்கியதுமே இந்த வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ##மிக முக்கியமான கருத்து..தாங்கள் பத்திரிக்கையாளர் எனில் இது குறித்து விரிவான பதிவை தர வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள் .
சொல்வீர்களா?
'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.
ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது?
காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?
ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.
அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.
எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மைநிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?
ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.
சொல்வீர்களா? - ஆளூர் ஷாநவாஸ்.
SOURCE: https://www.facebook.com/aloor.shanavas?fref=ts
மத இரத்தத்தை சென்னையின் மீது பூச வேண்டாம்.
தோழன் மபா, தமிழன் வீதி அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி தோழன் மபா, தமிழன் வீதி
@ தி.தமிழ் இளங்கோ!
சார், நான் ஜர்னலிஸ்ட் இல்லை. பிரபல பத்திரிகையில் வர்த்தக மேளாலராக பணிபுரிகிறேன்.
பத்திரிகை துறையில் 19 வருட அனுபவம் என்பதால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நமது ஒற்றுமையால்தான் இத்தகைய மத தீவிரவாதத்தை தடுக்க முடியும். தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி!.
@ புலவர் இராமாநுசம்.
நன்றி அய்யா!. நமது முயற்சி நமது நாட்டை காப்பாற்றும். மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அத்தகையோரை புறக்கணிப்பதே நமது கடமை.
@கரந்தை ஜெயக்குமார்.
தங்களது கருத்திற்கு மிக்க அன்றி அய்யா!. எனது வலைத் தளத்தின் முகப்பை நானே டிசைன் செய்தேன்.
@UNMAIKAL
1)
நீங்கள் கூறுவதின் சாராம்சம், தங்களை கூட்டணிக்கு அழைக்காத அதிமுக அரசின் நற்பெயரை கெடுக்க பாஜகவே குண்டு வைத்திருக்கிறது என்பதாகும் சரியா.....?.
வெண்ணை திரண்டு வரும் இன் நேரத்தில் அப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்து, உள்ளதும் போச்சுடா நொல்லக் கண்ணா என்ற நிலைக்கு அவர்கள் வரமாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.
குண்டு வைத்தது சங்பரிவரா அல்லது இஸ்லாமிய தீவிரவாத இயக்கமா என்பதை நாம் அரிதியிட்டு கூற முடியாது. இந்த கொடுஞ் செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்கள். அவர்களை காயடித்து கழுவில் ஏற்ற வேண்டும் என்பதே என்னை போன்ற 'மதம் பிடிக்காத மனிதர்களின் ஆசை!'.
2)
இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து தனது ஆதரவையும் பாதுகாப்பையும் திமுக வழங்கி வருகிறது. திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமியர்களை ஆதரிப்பதில் கருணாநிதி என்றும் பின்வாங்கியதில்லை. அப்படி இருக்க அவரை குற்றம் சொல்வது சரியானதன்று. இரண்டு நாளுக்கு முன்னர் பிடிபட்ட தீவிரவாதியிடம் இன்னும் ஆழமாக விசாரித்து இருக்கலாம் என்றுதான் அவர் கூறினார். இவர்தான் குற்றவாளி என்று கூறவில்லை. தமிழகத்தில் இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து திமுக நழுவியதில்லை.
அருமையான தேவையான சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை. என் இனிய பாராட்டுகள். (அது என்னவோ முன்னரே வலைப்பதிவுத் தொடர்வோரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, எனது வலையில் இணைப்புப் பட்டியலில் மட்டும் இட்டிருப்பதை இப்போதுதான் பார்த்து இணைந்தேன்) நன்றி தொடர்வோம.. தொடருங்கள்.
@நா.முத்துநிலவன்.
தங்களது கருத்திற்கும் எனது வலைத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!.
@Rathnavel Natarajan.
தங்களது தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!
@சதீஷ் செல்லதுரை.
முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை செய்தமைக்கு நன்றி.
நான் பத்திரிகையாளன்தான் ஆனால் ஜர்னலிஸ்ட் இல்லை. ஒரு பிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராக இருக்கிறேன். எனது பதிவின் முக்கியமான ஒரு இடத்தை சுட்டிக் காட்டியிருக்கிறீர், அது தொடர்பான பதிவொன்றை பிரிதொரு நாளில் இடுகிறேன். நன்றி!.
தங்களது தளம் பார்த்தேன். மிகச் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.
@சதீஷ் செல்லதுரை.
முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை செய்தமைக்கு நன்றி.
நான் பத்திரிகையாளன்தான் ஆனால் ஜர்னலிஸ்ட் இல்லை. ஒரு பிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராக இருக்கிறேன். எனது பதிவின் முக்கியமான ஒரு இடத்தை சுட்டிக் காட்டியிருக்கிறீர், அது தொடர்பான பதிவொன்றை பிரிதொரு நாளில் இடுகிறேன். நன்றி!.
தங்களது தளம் பார்த்தேன். மிகச் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.
மத ரத்தத்தை சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பூசவேண்டாம் என்பதே எமது ஆசை நண்பரே.....
Killergee
www.killergee.blogspot.com
மத ரத்தத்தை சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பூசவேண்டாம் என்பதே எமது ஆசை நண்பரே.....
Killergee
www.killergee.blogspot.com
கருத்துரையிடுக