இந்திய பத்திரிகை உலகில் முன்னணி நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி மற்றும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம் இணைந்து நடத்தும் சர்வதேச ரியல் எஸ்டேட் கண்காட்சி குவைத்தில் நடைபெறுகிறது. இவ்வீட்டு மனை கண்காட்சியை VGN டெவலெப்பர்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
இம் மாதம் (மார்ச்) வரும் 4 & 5ம் தேதிகளில் குவைத் சால்மியாவில் ஹோட்டல் ஹாலிடே இன், ஹல்தானா அரங்கில் இக் கண்காட்சி நடைபெறுகிறது. ( ‘India Realty Show’ in Hotel Holiday Inn, Salmiya Kuwait on 4th & 5th of March ’16) இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புராஜெட்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. இக் கண்காட்சியில் தமிழ் நாடு, கேரளா, ஹைதராபாத், பெங்களூர் முதற்கொண்டு, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன.
இந்தியாவின் பிரதான நகரங்களில், மக்கள் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வீட்டு மனை, அடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள் (வில்லாக்கள்) வாங்கக் கூடிய வாய்ப்பினை இக் கண்காட்சி வழங்குகிறது.
இக் கண்காட்சியில் உடனடி வீட்டுக் கடன் வசதியையும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம் வழங்கிறது. குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு .
அன்போடு அழைக்கிறோம், அனைவரும் வருக!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக