மயிலாடுதுறை மாவட்ட அரசு நிர்வாகம், ஓட்டு பெட்டி முதற்கொண்டு தடுப்பூசி
போடுவதுவரை இன்றளவும் நிர்வாக ரீதியாக, மாதானம், புதுப்பட்டினம் வழியாக பழையார்
வந்து அங்கிருந்து படகுகளில்தான் பிரயாணம் செய்கிறது. முப்புரமும் கடல் சூழ்ந்து
இருக்க...புன்னைவனக் காடுகளின் மத்தியில் இருக்கிறது கொடியம்பாளையம் கிராமம்.
சிதம்பரத்திலிருந்து மினி பஸ் வருகிறது. பஸ்டாண்ட என்பதற்கு அடையாளமாக இரண்டு டீ
கடைகள் இருக்கிறது.
|
கொடியம்பாளையம் கிராமம்
|
இங்கு இருக்கும் பாப்பா மெஸ்ஸில், நாம் முன்பே சொல்லி
வைத்துவிட்டால், மீன், நண்டு, இறால், கடம்பா என்று கடல் உணவுகளை மண்ணின் மனத்துடன்
சுடச்சுட சமைத்துத் தருகிறார்கள். சமீப காலமாக சிதம்பரம் நகர வாசிகள், காரில் இங்கு
வந்து கடலில் குளித்து, கடல் உணவுகளை ருசித்து வார விடுமுறையைக் கழிக்கிறார்கள்.
கடற்கரையில் எந்தவித கடைகளும் இல்லை. இரவு நேரங்களில் புன்னைவனக் காடுகளிலிருந்து
நரிகள் வெளியில் வந்து கடற்கரையில் நண்டு வேட்டை ஆடுவதைப் பார்க்க முடிகிறது. சுய
பாதுகாப்பு அவசியம்.
|
கொடியம்பாளையம் கிராமத்தில் இருக்கும் டீ கடை
|
ஒற்றையடிப்பாதை, சதுப்பு நிலம், புன்னைவனக் காடுகள், அமைதித் தவழும் நீண்ட கடற்கரை
என்று இயற்கையை விரும்பும் எவருக்கும் கொடியம்பாளையம், காசு செலவில்லாத மினி
மெரினாதான் !
#கொடியம்பாளையம்
#mabacliks
#மயிலாடுதுறைமாவட்டம்
5 கருத்துகள்:
அருமை
வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் பார்ப்பேன்
நன்றி ஐயா
அருமையான தகவல்
அருமையான கருத்துக்கள்
@கரந்தை ஜெயக்குமார்..
நன்றி ஐயா!
@www.eraaedwin.com
Thanks !
கருத்துரையிடுக