ஞாயிறு, மார்ச் 29, 2026

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

 
அழகான ஈரான் தேசத்தவர்கள்.படம்: கூகுள்.

 ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீட்டிய புருவம், எடுப்பான நாசி, உயர்ந்து பார்க்கும் உயரம், உறுத்தாத வெண்ணிரம் என்று... ஈரான்: அழகன்களும் அழகிகளும் நிறைந்த நாடு!!
 
உலகில் மிகவும் அழகானவர்கள் பாரசீகர்கள். அவர்களுக்கும் இந்தியர்களுக்குமான உறவு என்பது தொன்று தொட்டது, தொன்மையானது, கலாச்சார பரிவர்த்தனை நிறைந்தது.
 
பண்டைய காலத்திலிருந்தே இந்தியா மற்றும் பாரசீகம் (இன்றைய ஈரான்) இடையே ஆழமான வரலாறு மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்தன. இரு பகுதிகளும் இன்டோ-இரானிய நாகரிகத்தின் பகுதிகளாக இருந்ததால் வர்த்தகம் மற்றும் மக்கள் இடம்பெயர்வு தொடர்ந்து நடைபெற்றது.
பாரசீகர்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது கூடவே குதிரைகளையும், பருத்தித் துணிகளையும், முத்துக்களையும் கொண்டு வந்தனர். அவர்களின் வருகை ஒரு நீண்ட நெடிய புதிய கலாச்சாரத்தை இந்தியாவிற்குள் அறிமுகம் செய்தது.
 
இந்தியர்களின் விருப்ப உணவான பிரியாணி, கபாப், சமோசா, புலாவ், நான், ஃபலுடா என்று உணவிலும்... சல்வார் கமீஸ், சுடிதார், பைஜாமா, ஷெர்வானி என்று ஆடையிலும்,  பஜார்,கஸானா, தோஸ்த் என்று பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் வரை பாரசீகத்திடமிருந்து (ஈரான்) நாம் பெற்றது அதிகம்.
 
இந்தோ பாரசீக (Indo Persian) கட்டிடக் கலை இந்தியாவில் பிரசித்திபெற்ற கட்டிடக்கலையாகும். தாஜ்மஹால், குதுப்மினார், செங்கோட்டை என்று இந்தியாவின் முக்கிய அடையாளங்களையும் நாம் பட்டியலிடலாம்.
இந்தியாவுக்கும் பாரசீகத்திற்கும் இடையிலான கலாச்சாரத் தொடர்புகள் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானவை என்று வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ போன்ற நகரங்களை ஈரானியப் பீடபூமிப் பகுதிகளுடன் வர்த்தக வலைப்பின்னல்கள் இணைத்திருந்தன. இத்தகைய பரிமாற்றங்கள், இந்தோ-ஈரானிய உலகிற்கு இடையே தொடக்ககால கலாச்சாரப் பாலங்களை உருவாக்க உதவின.
 
 
பாரசீகப் பாலம்: ஈரான் தலைநகரில் உள்ள ஈரான் மாலில் இந்த பாலத்தில் பண்டைய பாரசீக வீரர்களை குதிரையில் சவாரி செய்வதை சித்தரிக்கும் பிரமாண்டமான சிலைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன, இது ஈரானின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
படம்: கூகுள்.

ஒரே வேரிலிருந்து வந்த சொற்கள்:
மாதா (Mata) – Sanskrit
மாதர் (Madar) – Persian
அர்த்தம்: தாய்
பிதா (Pita) – Sanskrit
பெதர் (Pedar) – Persian
அர்த்தம்: தந்தை
ப்ராதா (Bhrata) – Sanskrit
பராதர் (Baradar) – Persian
அர்த்தம்: சகோதரன்
நாம (Nama) – Sanskrit
நாம் (Nam) – Persian
அர்த்தம்: பெயர்
துவார் (Dvara) – Sanskrit
தர் / தார் (Dar) – Persian
அர்த்தம்: கதவு
 
அழகான ஈரான் தேசத்தவர்கள்.படம்: கூகுள்.

சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் காணப்படும் பல சொற்கள் ஒரே மாதிரி காணப்படுகிறன. இந்தியா மற்றும் பாரசீக மக்களுக்கு பழங்கால Indo-Iranian கலாசார வேர்கள் இருந்ததை மொழியியல் ஆய்வுகள் மூலம் காட்டுகின்றன. இதில் சில சொற்களை தமிழர்களாகிய நாமும் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாரசீகத்தில் (ஈரான்) இருந்து 6 ம் மற்றும் 8 ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பார்ஸிக்கள் (Parsis) இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு வியாபார சமூகமாகும். கல்வி, சுகாதாரம், எஃகு, சாலை, விமான போக்குவரத்து, கப்பல், கணிணி நீதி என்று டாடா குழுமம் ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கும் ' டாடா' என்ற சொல் ஈரானில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். 
 
இந்தியர்களிடையே பிரபலமாக கோத்ரேஜ் நிறுவனமும் பார்ஸிகளின் நிறுவனம்தான். இங்குள்ள போரா முஸ்லீம்கள் ஈரானை பூர்விகமாக கொண்டவர்கள்தான்.  
 
பார்ஸிக்கள் தங்களது Zoroastrianism மரபுகளை காத்து இந்திய சமூகத்தில் இன்றும் முக்கிய சமூகமாக பங்காற்றி வருகின்றனர். 
 
இப்படியான செழுமையான கலாச்சார வேர்களை கொண்ட பாரசீக (ஈரானை) மண்ணைதான் டிரம்ப்பும் நெதன்யாகும் அழித்து வருகின்றனர். பாரசீகத்தோடு நீண்ட நெடிய உறவு கொண்ட இந்தியர்களும் இந்திய அரசும் ஈரானை காப்பாற்ற துணை நிற்க வேண்டும். 
 
-மபா.

சென்னையில் பர்மா முனி !


 
 
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ளடங்கி இருக்கிறது இந்த பிரமாண்டமான பர்மா காலனி முனீஸ்வரர் சிலை. நிறைய சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். முறுக்கிய மீசை, முறுக்கேறிய தசையுமாக முனீஸ்வரர் படு பிரமாண்டமாக காட்சித் தருகிறார். 'ஆத்துக் கோவில் அங்காள அம்மன், ஸ்ரீ அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், பர்மா காலனி முனீஸ்வரர்' என்று பல்வேறு பெயர்களில் இக் கோவில் அழைக்கப்படுகிறது. 
 
ஆனால், அந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவிட முடியாது. ஒரு சிக்கலான நிலப்பரப்பில் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருந்துதான் முனீஸ்வரர் அருள்புரிகிறார்.
 
சரியாக அசோக் நகர் காசி தியேட்டர் தாண்டி, பாலம் ஏறி இறங்கி யுடர்ன் அடித்து அடையாறு ஆற்றை ஒட்டிய சாலைகளில் வளைந்து நெளிந்து பயணித்தோமானால், இராணுவ கண்டோன்மன்டில் இருக்கிறது இந்த ஏரியா.
பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதி இது. சுற்றிலும் இராணுவத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் கட்டுப்பாடுகள் உண்டு.
கிண்டி போரூர் போகும் வழியில் போர்வீரர்கள் கல்லறை பின்பகுதி வழியாகவும் இந்த பகுதிக்கு வரலாம். நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் (CTC) எதிரே வருகிறது இந்தப் பகுதி.கோவிலுக்கு போகும் பாதை குறுகலானது என்பதால் காரில் போக முடியாது. முகப்பிலேயே போர்டு வைத்திருக்கிறார்கள். இறங்கி தெருவில் நடந்துதான் கோவிலுக்கு செல்லமுடியும்.  
 
2010ல் அங்கு போன போது இந்தளவிற்கு வளர்ச்சி இல்லை, நிறைய போட்டேக்கள் எடுத்து எனது ஃபிளிக்கர் பக்கத்திலேயும் பதிவிட்டேன். அதோடு தற்போதுதான் மீண்டும் விஜயம்.
 
முனீஸ்வரர் எதிரே சிலையை கலை நயத்தோடு பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அம்மன் சிலையும் பெரிய அளவில் இருக்கிறது . பேச்சியாயி, பெரியாயி என்று தமிழர்களின் மண் சார்ந்த நாட்டார் சிறு தெய்வங்களை காண முடிந்தது. 
 
மாலை நேரங்களில் அத்தோ, பேஜோ போன்ற பர்மிய உணவுவகைகளும் இங்கு விற்கிறார்கள்.  
 





 
 

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

  அழகான ஈரான் தேசத்தவர்கள். படம்: கூகுள்.   க ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீ...