ஞாயிறு, மார்ச் 29, 2026

சென்னையில் பர்மா முனி !


 
 
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ளடங்கி இருக்கிறது இந்த பிரமாண்டமான பர்மா காலனி முனீஸ்வரர் சிலை. நிறைய சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். முறுக்கிய மீசை, முறுக்கேறிய தசையுமாக முனீஸ்வரர் படு பிரமாண்டமாக காட்சித் தருகிறார். 'ஆத்துக் கோவில் அங்காள அம்மன், ஸ்ரீ அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், பர்மா காலனி முனீஸ்வரர்' என்று பல்வேறு பெயர்களில் இக் கோவில் அழைக்கப்படுகிறது. 
 
ஆனால், அந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவிட முடியாது. ஒரு சிக்கலான நிலப்பரப்பில் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருந்துதான் முனீஸ்வரர் அருள்புரிகிறார்.
 
சரியாக அசோக் நகர் காசி தியேட்டர் தாண்டி, பாலம் ஏறி இறங்கி யுடர்ன் அடித்து அடையாறு ஆற்றை ஒட்டிய சாலைகளில் வளைந்து நெளிந்து பயணித்தோமானால், இராணுவ கண்டோன்மன்டில் இருக்கிறது இந்த ஏரியா.
பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதி இது. சுற்றிலும் இராணுவத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் கட்டுப்பாடுகள் உண்டு.
கிண்டி போரூர் போகும் வழியில் போர்வீரர்கள் கல்லறை பின்பகுதி வழியாகவும் இந்த பகுதிக்கு வரலாம். நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் (CTC) எதிரே வருகிறது இந்தப் பகுதி.கோவிலுக்கு போகும் பாதை குறுகலானது என்பதால் காரில் போக முடியாது. முகப்பிலேயே போர்டு வைத்திருக்கிறார்கள். இறங்கி தெருவில் நடந்துதான் கோவிலுக்கு செல்லமுடியும்.  
 
2010ல் அங்கு போன போது இந்தளவிற்கு வளர்ச்சி இல்லை, நிறைய போட்டேக்கள் எடுத்து எனது ஃபிளிக்கர் பக்கத்திலேயும் பதிவிட்டேன். அதோடு தற்போதுதான் மீண்டும் விஜயம்.
 
முனீஸ்வரர் எதிரே சிலையை கலை நயத்தோடு பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அம்மன் சிலையும் பெரிய அளவில் இருக்கிறது . பேச்சியாயி, பெரியாயி என்று தமிழர்களின் மண் சார்ந்த நாட்டார் சிறு தெய்வங்களை காண முடிந்தது. 
 
மாலை நேரங்களில் அத்தோ, பேஜோ போன்ற பர்மிய உணவுவகைகளும் இங்கு விற்கிறார்கள்.  
 





 
 

கருத்துகள் இல்லை:

இந்தியர்களுக்கு பிரியாணி தந்த பாரசீகம்

  அழகான ஈரான் தேசத்தவர்கள். படம்: கூகுள்.   க ருகரு கூந்தல், மீனை ஒற்றிய கண்கள், மிகையற்ற மார்பு, கையளவு இடை, வனப்பு பொருந்திய முகம், மை தீ...