செவ்வாய், அக்டோபர் 07, 2008

ஒரு கிராமத்துகாரனின் டைரி குறிப்பு...

எனது ஊர், எனது வாழ்க்கைப் பற்றிய சில பதிவுகள்....


திருவாலங்காடு.

எழிற் கொஞ்சும் காவிரி கரையின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.
தஞ்சைமாவட்டத்தில், மாயவரம் தாலுகாவில் அமைந்துள்ளது. (தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது)

கடல் அலைகள் வந்து வந்து மோதுவதுபோல், எனது ஊரைப்பற்றிய நினைவுகள் மனதில் வந்து வந்தது மோதுகின்றன... இதில் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியவில்லை.

எனது ஊரை சுற்றி பல மகா இசை பெரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது.

கும்பகோணம் வழியாக வந்தால் நரசிங்கன்பேட்டை யும், மாயவரம் வழியாக வந்தால் குத்தாலம், மாதிரிமங்கலம் தாண்டித்தான் ஊருக்கு வரமுடியும்.

ஊரின் தொடக்கத்தில் ஆலமரம் உள்ளது. ஆலமரம் என்றால் காவேரி யின் இரு கரை தொட்டு ஆலம்விழுதுகளோடு மிக பிரமாண்டமாய் காட்சி தரும். காலத்தை கடந்த

அதன் கடைசி விழ்துகலோடுதன் எனக்கு பரிச்சியம்.

கூட்டம் கூட்டம் மாக இருந்த ஆலம் மரங்கள் இருந்ததால் எங்கள் ஊருக்கு திரு ஆலம் காடு என்று பெயர் இருந்தது . பின்னர் கொஞ்சம் கொஞ்சம் மாக மருகி திருவாலங்காடு என்றுஅனது.

-நினைவுகள் தொடரும்.
Share/Bookmark

கருத்துகள் இல்லை :