புதன், அக்டோபர் 15, 2008

அரசியல் கோமாளித்தனம்.....

சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம்


இலங்கையில் இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்கத்தை சேர்ந்த அனைத்து லோக்சபா எம்., பி., களும் ராஜினாமா செய்யா நேரிடும் என்று தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் என்ன கோமாளித்தனம் இருக்கு என்று என்னலாம்...அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக,மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை.இன்று உலகில் இரண்டரை லட்சம் ஈழ தமிழர்கள் வீடிழந்து, வாசலிழந்து, அகதிகளாக உள்ளனர். தமிழர்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் போல் கட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, வைகோ, விசயகாந்த் போன்ற கோமாளிகள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.தமிழர்கள் தங்கள் கட்சி பேதம் மறந்து இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது உணர்ச்சிபூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளனர். அதோடு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.இத்தகைய உணர்ச்சிபூர்வமான கூட்டத்தில் கலந்துகொள்ளாத இவர்களை என்னவென்று சொல்வது.அதுசரி! தமிழர்களை பற்றி இவர்களுக்கு என்ன கவலை. இவர்கள் தமிழர்களாக இல்லாத பட்சத்தில்....-தோழன் மபா
Share/Bookmark

கருத்துகள் இல்லை :