செவ்வாய், அக்டோபர் 14, 2008

ஈழ தமிழர் வாழ்வில் புது நம்பிக்கை


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆதிரடி சர்வே....

ஈழ தமிழர்கள் பற்றி பேசவே பயந்தார்கள், ஆதரித்தால் தடா பாயும் என்றார்கள். தமிழனுக்கு குரல் கொடுக்க தமிழனே தயங்கினான், அட்சி பீடத்தில் இருப்பவர்கள் அரவணைக்க தயங்கினார்கள், இதனால் ராஜபக்சே தனி ராஜ்ஜியம் நடத்தி தமிழர்களை கொன்று குவிக்கிறார்.
இவர்களுக்கு ஆதரவு எவருமில்லை என்ற வேளையில், எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு அக்டோபர் பதினோராம் தேதி அன்று ஒரு துணிச்சலான கருத்து கணிப்பு ஒன்றை வெளி யிட்டது.

ராணுவத்தின் கடுமையான தாக்குதலைஇச் சந்தித்துவரும் இலங்கை தமிழர்களின் இன்னலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் கவனம் செலுத்தவேண்டும். ராணுவத்தின் தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும், தாக்குதலுக்கு உள்ளன தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற அத்யாவசியமான பொருட்களை உடனடியாகா அனுப்பி உதவ வேண்டும். இதற்கு தடங்கல் வருமானால் மத்திய அரசிலிருந்து தி மு கா விலக வேண்டும்.

என்று தமிழ்நாட்டின் பத்து பெரிய நகரங்களில்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.



  1. இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை இந்திய அரசு வழங்க கூடாது.

  2. அப்படி, இலங்கை ராணுவத்துக்கு ஆதரவு தொடர்ந்தால் மத்திய அரசிலிருந்து தி மு கா விலக வேண்டும்.

  3. தலைவர் பிரபாகரன் சுற்றி வளைக்க படும் நிலை ஏற்படுமானால் தமிழர்களுக்கு உதவ இந்திய இராணுவம் இலங்கை செல்லவேண்டும்.

  4. விடுதலை புலிகள் அமைப்பு என்பது ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு அமைப்பு, விடுதலை புலிகள் இல்லாமல் ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடுதலை இல்லை.

  5. ஈழத் தமிழர்களின் ஒரே உண்மையான பிரதிநிதி விடுதலை புலிகள் அமைப்பு மட்டும் தான்.

என்று தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாற்பது சதவித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


பிரபாகரனை கைது செய்ய கூடாது என்று பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இந்த கருத்துக் கணிப்பு காலத்திற்கேற்ற ஒரு நல் மருந்து.


-தோழன் மபா


கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...