செவ்வாய், நவம்பர் 04, 2008








எனக்கும் பத்திரிகைக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. அந்த தொடர்பு சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டில் சாண்டில்யன், கல்கி என்று ஈகப்பட் நாவல்கள், அதுபோக நூலகங்களிலிருந்து எடுத்துவந்த நாவல்கள் என்று அப்போதல்லாம் அந்நாளைய நிறைய இருந்தன.


பள்ளி நாட்களில் குமுதத்தை மறைத்து , மறைத்து படிப்பேன். நான தமிழை எழுத்துகூட்டி வாசிக்கதொடங்கியதே குமுதத்தில்தான். அபோழுதெல்லாம் குமுதம் வெள்ளி தோறும் வந்துவிடும். என்அப்பா ஆபீஸ் விட்டு வந்த உடனேயே குமுதத்திற்காக எனக்கும் எனது அம்மாவிற்கும் ஒரு அடிதடியீ நடக்கும். இந்த சண்டை பத்தாதென்று பக்கத்துவீட்டு அக்கா குணசுந்தரி வேறு குமுதம் வாங்க வந்துவிடும். (கடுப்பு!)


நான் சிறுவன் என்பதால் குமுதத்தை எடுத்து கொண்டு பின் புறத்தில் உள்ள எங்கள் வீட்டு புளிய மரத்தில் ஏறிவிடுவேன். அப்புறம் என்ன குரங்கு கதை தன், முழுவது படித்து விடு தான் இறங்குவேன்!!!!. புளியமரம் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் கூறுகிறேன்.....


பிர்ர்பாடு கல்லூரி முடிந்து சென்னை வந்து, குமுதம் அலுவலகத்தை தேடி அலைந்தது தனி கதை. 151 புரசை வாக்கம் நெடுஞ்சாலை, இது தான் குமுதம் அட்ரஸ். நமக்கு மெட்ராஸ் புதுசு என்பதால் தட்டு தடுமாறித்தான் பத்திரிகைகள் கண்டுபிடிக்க அவங்க. கையில் காசும் இல்லை. எல்லாம் நடராஜ சர்வீஸ் தான். வந்து பார்த்தால் பழைய தாலுகா ஆபீஸ் போல் இருந்தது. ஒரு பழய கால கட்டிடம். எனது கற்பனயில் இருந்த குமுதம் வேறு, நிஜத்தில் குமுதம் வேறு.

அப்போதெல்லாம் குமுதத்தில் சாண்டில்யனின் சரித்திர கதைகள் தொடராக வெளிவரும், கடல்புறா, சீன மோகினி, யவன ராணி என்று ஏகப்பட்ட கதைகள் தொடராக வந்தவண்ணம் இருக்கும். அப்பப்பா... அந்த நீண்ட நெடிய வர்ணனைகள், காலத்தால் அழியாத காவியங்கள். மனதை கட்டிபோடும் அந்த கதைகள் இன்றும் படித்தவரின் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்.
அப்புறம் ரா. கீ. ரங்கராஜனின் தமிழாக்கம் சையப்பட்ட கதைகள், அது தனி ருசி!!
புகழ் பெற்ற ஆங்கில நாவல்கள் தமிழனுக்குகிடைத்ததில் ரா. கி. ர. இக்கு தனி பங்கு உண்டு. மயிர்கூசொரியும் அந்த கதைகள் தமிழாக்கம் செயப்படதுபோலவே இருக்காது. அதுதான் ரா. கி. ரங்கராஜன்.
-தோழன் ம பா

















கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...