வியாழன், ஆகஸ்ட் 20, 2009

"தமிழ் விக்கிபீடியாவில் -68வது இடத்தில் தமிழ்



இன்று ஊடங்களும், இனையத் தளங்களும் பெருகி விட்டப் பிறகு தேடுதல் எண்பது மிகுந்த சுக அனுபவமாக மாறிவிட்டது என்றால் அது மிகையன்று.
பத்திரிகை அலுவலகங்களில் ... ஒரு நூலகம் எப்பொதும் இயங்கிக்கொண்டு இருக்கும். அதில், தங்களது படைப்புகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தொகுப்புகள் , இதுநாள் வரையில் வந்த நாளிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காகவே பல லட்சங்களை செலவு செய்வார்கள். ஏதாவது பழைய நாளிதழ் வேண்டும் என்றால் கூட, அது எத்தனை வருடம் ஆகி இருக்கிறதோஅத்தனை வருடத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.


நூலகத்திற்கென்றே மிகப் பெரிய கட்டிடத்தை பராமரித்தார்கள் எக்ஸ்பிரஸ் குழுமத்தினர். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலமையகம், சென்னை மவுண்ட் ரோடில் இயங்கிக் கொண்டு இருந்த பொது, நான் நூலகத்தைப் பார்த்திருக்கின்றேன்.



கிளப் ஹவுஸ்


ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் அங்கு தங்கி இருந்ததால், அதற்கு 'கிளப் ஹவுஸ்' என்ற பெயர். இன்றும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில் கிளப் ஹவுஸ் ரோடு இருக்கிறது. அந்த கிளப் ஹவுஸ்ஸில் தான் எக்ஸ்பிரஸ் குழுமம் இயங்கிக்கொண்டுஇருந்தது. அங்கு உள்ள நீச்சல் குளத்தை நாளிதழ்கள் சேமித்துவைக்கும் கிடங்காக மாற்றி இருந்தார்கள். ஒரு நாள் 80 தாவது வருட தினமணி தேவைப்பட்டதால் அதை எடுக்கச் சென்றேன்.


உள்ளே ஒரே இருட்டு, இரும்பு கிராதிகள் வானுயரத்திற்கு நிறுத்தி இருந்தது. ஒரு 40 வால்ட் குண்டு பல்ப் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது. அந்த இடமே பார்க்க பயம் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது. நீச்சல் குளத்தின் ஆழத்திலிருந்து மர ராக்குகளை கூறை வரை அமைத்து இருந்தனர். பேப்பர் தேடவேண்டும் என்றால், நீச்சல் குளத்தின் கீழே இறங்கித் தான் தேடவேண்டும். அந்தக் கட்டிடத்தின் உச்சி வரை மர ராக் நீண்டு இருக்கும். வரலாற்றின் வாசனையோடு நாளிதழ்கள் மர ராக்குகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும். வரிசை, வரிசையாக மர ராக்குகளை பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். முழுவதும் பேப்பர் வாசனை, அப்போதுதான் நினைத்துகொண்டென், இதை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று!
அந்த காலத்தில் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, வரலாற்று ஆவணங்களை சேமித்து வைத்தார்கள்.


அனால் இன்று அந்த நிலை இல்லை. தினசரிகள் எல்லாம் 'ஸகேன்' செய்யப்பட்டு குறுந்தகடுகளாக மாற்றப் பட்டு சேமிக்கப்படுகிறது. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்...



தமிழ்க் கலைக்களஞ்சியம்.


அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. இனையத்திள் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக 'விக்கிபீடியா' திகழ்கிறது.
விக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு" என்று பெயர். விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளேபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.



68வது இடத்தில் தமிழ்



2001 ம் ஆண்டு விக்கிபீடியா ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டு, பின்னர் பல மொழிகளில் விரிவுப்படுத்தப் பட்டது. இன்று 267 மொழிகளில் விக்கிபீடியா செய்திகளைத் தருகிறது. இதில் 28,97,231 கட்டுரைகளைத் தாங்கி ஆங்கிலம் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு 68-வது இடத்தில் உள்ளது.



தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். 2003 முதல் இலங்கை யழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரைஆண்டுகள் தன்னந்தனியே 2760 கட்டுரைகள் உருவாக்கி உள்ளார், என்ற தகவலைத் தருகிறார் மு. இளங்கோ. (விரிவான செய்திகளுக்குப் பார்க்க...பக்கம் 6, தினமணி கட்டுரை 18/08/09)



நமது கடைமை



விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஒரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகரிப்பர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள்,மனக்கணக்குகள், தமிழில் அறிவியல் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறைகள், வீரம், வணிகம் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது தமிழர்களாகிய நமது தலையாயக் கடமை.



இது தொடர்பான பயிலரங்கங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.



எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் 'விக்கிபீடியாவில்' தமிழ் கட்டுரைகளை வரைந்து தமிழின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன்.
***************************

7 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்படுத்தி பங்களிக்க வேண்டியமைக்கு மிகவும் நன்றி.

thozhan maba சொன்னது…

நன்றி ரவிசங்கர்...

பதிவுலக தமிழர்கள் விக்கிப்பீடியா பற்றி தெரிந்து, புரிந்து பல கட்டுரைகள் படைக்கவேண்டும் என்பது என் அவா...

அன்புடன்
தோழன் மபா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

பதிவுலக தமிழர்கள் விக்கிப்பீடியாப் பற்றி தெரிந்து, புரிந்து பல கட்டுரைகள் படைக்கவேண்டும் என்பது என் அவா...


அன்புடன்
தோழன் மபா

மா தமிழ்ப்பரிதி சொன்னது…

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழர்கள் பெரும்பான்மையாகப் பங்கேற்க வேண்டும்.பல இடங்களில் பிழையான தரவுகள் உள்ளிடப்பெற்றுள்ளன; அவற்றினைத் திருத்த வேண்டியது நமது கடமை.
மா.தமிழ்ப்பரிதி
www.thamizhagam.net

பத்மா சுவாமிநாதன் சொன்னது…

இச்செய்தியை வெளியிட்ட தினமணி தலையங்க குழுவுக்கும்...
மறு பதிப்பு செய்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

பெயரில்லா சொன்னது…

விக்கிபீடியாவில் அனைத்தும் நன்றாகவே உள்ளது.ஆனால் ஜாதியைப்பற்றிய கட்டுரைகள் குறிப்பாக செங்குந்தர் தலைப்பில் நரசிங்கமுனையரையர்.மெய்ப்பொருள் நாயனார் இருவரையும் செங்குந்தர்குலம் என கூறியுள்ளனர்.இது மிகப்பெரிய தவறு இவ்விரு அரசர்களும் மலையமான்கள்ளர்கள்.சேதிராயர் என்ன பட்டம் உடையவர்கள் பார்கவகுலம் கள்ளர்கள் அரசமரபினர்.தற்போதும் பார்கவகுலம் மூப்பனார்.உடையார்.நயினார் என மலையமானின் வம்சமாக அறியப்படுகின்றனர்.கல்வெட்டுக்களில் காணவும்.ஆங்கில விக்கிபீடியாவிலும் மேற்கண்ட இரு அரசர்களும் பார்கவகுல அரசர்கள் என்றே உள்ளது. இதை திருத்தி தரவுகளை சரிபார்த்து வெளியிட இயலுமா?நன்றி

Selvaa_mani சொன்னது…

என்ன கள்ளன் னு சொல்றிங்க மலையமான் உடையார், நத்தமன் உடையார், சுருதிமான் மூப்பனார், இந்த மூன்று பிரிவும் பார்கவ குலம், கள்ள கம்நேட்டி இல்லை

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...