ஞாயிறு, நவம்பர் 13, 2011

தி ஹிண்டுவை வம்பிக்கிழுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரம்.






 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியீட்ட  விளம்பரம் 'தி இந்து' நாளிதழை பகிரங்கமாக சண்டைக்கு இழுத்துள்ளது. 

சமீப காலமாக தமிழ் நாட்டில்  ஆங்கில பத்திரிகைகளிடையே 'யார் பெரியவன்' என்ற போட்டி கடுமையாக எழுந்துள்ளது.

அது நாள் வரையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிண்டு ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே தமிழ் நாட்டில்  கோலோச்சிவந்தன.  2005ம் ஆண்டு டெக்கான் கிரானிக்கலும்,  2008ம் ஆண்டு ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்பு அன்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவும்' சென்னையில் தொடங்கப்பட்டன.  அன்றிலிருந்து சென்னை பத்திரிகை உலகில் பரப்பரப்புத் தொற்றிக் கொண்டது.


சென்னையோடு மும்பையை ஒப்பிடும் போது, மும்பையில் நாளிதழ்கள் அதிகம். ஆனால் சென்னையில் அப்படி அல்ல. இங்கு ஆங்கில காலை நாளிதழ்கள் நான்கும்,  தமிழில் காலை நாளிதழ்கள் நான்கும், மொத்தம் 8 நாளிதழ்கள் மட்டுமே முக்கிய இடத்தில் உள்ளன.  சென்னையிலிருந்து இருந்து வெளியாகும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து நாளிதழ்கள் தமிழர் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டே செய்திகளை வழங்கி வருகின்றன.


நகரின் பல பாகங்களில் ஐடி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, கடந்த 10 வருடத்தில் சென்னை பல்வேறு துறைகளில் வியப்புக்குறிய வகையில் முன்னேறி வருகிறது.  ஆங்கில கலாச்சாரத்தின் தாக்கம், தமிழக மண்ணில் அதி விரைவாக பரவிவருகிறது. இதன் அளப்பரிய வியாபார வாய்ப்பு சென்னையின் கதவுகளை சர்வதேச அளவில் திறந்துவிட்டுள்ளது.

இந்த காலக் கட்டத்தில் சென்னையில் காலுன்றிய தி டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்கள்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்துவை ஓரங்கட்டிவிடலாம் என்று எளிதாக கணக்கு போட்டன,   அவைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் நமக்கும் அப்படித்தான் தோன்றியது.

தி டெக்கான் கிரானிகல் சொல்லிக் கொள்ளும் அளவில் விற்பனை ஆனாலும், அதன் விளம்பர வாய்ப்புகள் அப்படி ஒன்றும் பெரிதாக  இல்லை.

ஆனால் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிலையோ வேறு. இந்தியா முழுவதும் பலமான நெட்வொர்க் உள்ள அந்த பத்திரிகை யாரையும் எதையும் வலைக்கும் ஆற்றல் படைத்தது. விளம்பரம் மற்றும் விற்பனைக்காக எந்த ஒரு நிலைக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக் கூடியது.

 எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து நாளிதழ்கள் நினைத்துப் பார்க்காத பரீச்சார்த்திரமான முயற்சிகளை கையாள்வதில் டைம்ஸ் எப்போதுமே முன்னனியில் இருக்கிறது. சென்னையில் லான்ச் ஆனபோதே தமிழில் விளம்பரம் வெளியீட்டு ஆங்கில பத்திரிகைக்கு தமிழில் விளம்பரமா? என்று புருவம் உயரச்செய்தது.

இன் நிலையில் இந்த (நவம்பர்)  மாதத் தொடக்கத்தில் டைம்ஸ் வெளியீட்ட விளம்பரம், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு ஆள் வேஷ்ட்டி  சட்டை அணிந்துக் கொண்டு, கையில் ஒரு நாளிதழை வைத்துக் கொண்டு பார்க்கும் இடத்தில் எல்லாம் தூங்கிக்கொண்டு இருக்கிறான்.
    
ஒரு கட்டிடத் திறப்பு விழாவின் போது, விருந்தினர் ரிப்பன் வெட்ட, அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறான். விளம்பரத்தைக் காண இங்கே சொடுக்கவும்

பளுதூக்கும் வீரர்கள் இருக்கும் சபையில் தூங்கிக்கொண்டு இருப்பான்.

மக்கள் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கு அமர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

காவல் துறை அணிவகுப்பின் போதும்...ஓட்டு சேகரிக்கும்  போதும்.... என்று பார்க்கும் இடத்தில் எல்லாம் அவனது தூக்கம் தொடர்கிறது.

இந்த விளம்பரங்கள் ஓடும் போது பின்னணியில் ஒரு பெண் குரல் கிழ்கண்டவாறு பாடுகிறது.

ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே  ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு.  (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு.....   (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு


பின்பு இறுதியில்

STUCK WITH NEWS 

THAT PUTS YOU 

TO SLEEP? 

என்ற வாசகத்தோடு அந்த விளம்பரம் முடிகிறது.


இதில் எங்கே பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்?.  அந்த தூங்கும் மனிதன் தனது கையில் தி இந்து நாளிதழைதான்  மடித்து  வைத்திருக்கிறான், என்பது கடைசி காட்சியில் மிகத் தெளிவாக தெரிகிறது.  

'சவ சவன்னு தூக்கம் வரவழைக்கும் செய்திகளைத் தரும் இந்து நாளிதழ்,  இனி ஒரேடியாகத் தூங்கட்டும்' என்ற பொருள் வரும்படி, அந்த விளம்பரம் உள்ளதாக விளம்பர நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறனர். 

இதற்கு இந்துவின் பதில் என்ன....?





3 கருத்துகள்:

துரைடேனியல் சொன்னது…

Nalla pathivu. The Hindu ku thaan en vote. But Times of India ku Nalla Future irukirathu.

Tamilmanam vote potachi.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ துரைடேனியல்.
கருத்திட்டமைக்கும் வாக்களித்ததற்கும் எனது நன்றிகள்!

ஜீவ கரிகாலன் சொன்னது…

பத்திரிக்கைகளிடைய நல்ல போட்டி நிலவினால் லாபம் பொது மக்களுக்குத்(ரீடர்ஸ்) தான்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...