செவ்வாய், பிப்ரவரி 02, 2010

'பாட்சுலர் பாரடைஸில்' இனி நீங்கள் அரை டிராயரோடு சுற்ற முடியாது?


தெருவுக்கு தெரு மேன்ஷன், திரும்பிய பக்கமெல்லாம் மெஸ்ஸுகள், அரை ட்ராயரோடு இரவு முழுவதும் அலையும் இளைஞர்கள் என்று எப்போதும் திருவிழா முகம் காட்டும் திருவல்லிகேணியும் அதன் சார்பு பகுதியான அண்ணாசாலையும் தனது தனித்தண்மையை இழக்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையும் (அண்ணாசிலை)திருவல்லிக்கேணியும்,சென்னைக்கு வேலை தேடி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நுழைவு வாயில் என்றால் அது மிகையாகாது.

ஆம்! இளைஞர்களின் கனவு பிரதேசத்தை கலைக்க வருகிறது ஒமந்தூரார் தோட்டத்தில் அமையவுள்ள புதிய 'தமிழக சட்டமன்றக் கட்டிடம்'.

புதிய சட்டமன்ற கட்டிடத்தின் மாதிரி தோற்றம்.இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து சென்னையில் காலுன்றி இருக்கும் லட்சக் கணக்கான தமிழர்கள் திருவல்லிக்'கேணி'யை தாண்டாமல் வந்திருக்க முடியாது.

குறுகலான திரிவல்லிகேணி தெரு...

எல்லிஸ் ரோடு, மவுண்ட் ரோடில் உள்ள அண்ணா,தேவி, சாந்தி தியேட்டர் வளாகங்கள் கெயிட்டி - காசினோ தியேட்டர் உள்ள பிளாக்கர்ஸ் ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என்று சின்னதும் பெரிதுமாய் உணவு விடுதிகள்,மதுபான விடுதிகள் என்று இளைஞர்களின் உல்லாசபுரியாக (?) திகழ்கிறது திருவல்லிகேணியும், அண்ணாசாலையும். ('ஙே'.... னு முழிக்காதிங்க. அந்த.... உல்லாசபுரி இல்லை! (சற்றே ராஜேந்திரகுமார் நடை!!)


அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பு...

சேப்பாக்காம் கிரிக்கேட் ஸ்டேடியம் பக்கத்தில் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் நாயர் மெஸ், அக்பர் சாஹிப் சாலையில் "வாங்க சார்... யொல்லோ டோக்கன்..." என்று நம்மை கியூவில் நிற்கவைத்து நல்லதொரு (வாய்ப்புக் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்க) சாப்பாடு போடும் 'காசி விநாயகா மெஸ்' திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நம்மை சாம்பார் இட்லியில் குளிப்பாட்டும் 'ரத்னா கேப்', இரவு நேரத்தில் எல்லிஸ் ரோட்டோரத்தில் இருக்கும் இட்லி கடை அப்புறம் இருக்கவே இருக்கு மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற புகாரி, சங்கம் ஹோட்டல்கள் என்று மெட்ராஸின் தனித்தன்மையான அடையாளங்கள் எல்லாம் இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை?இன்னிலையில் தமிழ அரசு கட்டிவரும் புதிய தலைமைசெயலகத்தால் அந்த பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போதே கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு புதிய சட்டமன்றக் கட்டிடத்தை ஒமந்தூரார் தோட்டத்தில் 1லட்சத்தி 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாய் கட்டிவருகிறது . ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி என்ற சர்வதேச கட்டுமாண நிறுவனத்தினர் கடந்த ஆறு மாதமாய் மகா சுறு சுறுப்புடன் கட்டி வருகிறார்கள். வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். அதற்குள்ளாகவே இந்த பகுதி காவல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

'ஊரிலிருந்து உங்க மாமாவோ, சித்தப்பாவோ வேலை விஷயமா மெட்ராஸ் போறேன்னுட்டு வெள்ளைச் சட்டையப் போட்டுக்கிட்டு பஸ் ஏர்னார்னா நேரா இங்குவந்துதான் ரூம் போடுவார்'. இனி அதெல்லாம் முடியாது. "இங்கு 'ஃபுளோட்டிங் பாப்புலேஷன்' அதிகம். முன்புபோல் சுதந்திரமாக வந்து இங்கு யாரும் தங்கமுடியாது... " என்கின்றனர் லாட்ஜ் உரிமையாளர்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சின்னமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இக் கோட்டை வருகிறது. இது நாள்வரையில் இங்கு வாடகை குடுத்துக் கொண்டு, இயங்கி வந்த தமிழக அரசு, இனி சொந்த கட்டிடத்தில் இயங்கப்போகிறது.

புதிதாய் அமையவிருக்கும் தலைமை செயலகத்தைச் சுற்றி, நிறைய வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் குடியிருப்புகளும் உள்ளன. இனி அந்த குடியிருப்பு வாசிகளுக்கும் பிரச்சனைதான். அதோடு பலரும் இப் பகுதியில் புதிதாய் இடமோ, கட்டிடமோ வாங்க தயங்குகிறார்கள். சட்டமன்றக் கட்டிடம் இங்கு வருவதே அதற்கு காரணம்.

வீட்டை விட்டு சென்னையில் தங்கி வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இங்குதான் குறைந்த வாடகையில் ரூம்கள் கிடைக்கின்றன. இருவர் - மூவராய் சேர்ந்து அறையை பகிர்ந்துக் கொள்வதால் இங்கு மாதவாடகை மிக குறைவாகவே இருக்கும்.

பாதுகாப்பு என்ற போர்வையில் காவல் துறையினர் இவர்களது சுதந்திரத்தில் கைவைப்பார்கள். இங்கு உள்ள மேன்ஷன் மற்றும் லாட்ஜுகளில் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள், புதியதாக யார் வருகிறார்கள் என்று, D1 காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும். அதோடு இப்பகுதியில் புதியதாக லாட்ஜூகளோ மேன்ஷனோ (எந்த ஒரு கட்டிடமும்) கட்டக்கூடாது, என்று அடுக்கடுக்காய் பாதுகாப்பு என்ற போர்வையில் கிடிக்கிப்பிடி போட்டு வருகிறது தமிழக அரசு.

இரவு 8 மணிக்கு மேல் யாரும் நடமாடக் கூடாது, சட்டசபை நடைபெறும் காலங்களில் இந்த பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளிலும், உள் வட்டச் சாலைகளிலும் நடமாடத் தடை என்று காவல் துறையினரின் பிடி இருக இருக... 'பாட்சுலர் பாரடைஸிலிருந்து' இளைஞர்பட்டாளம் பறந்து போகும்.

அப்போது 'டிரிப்லிக்கேண்' வீதிகளில் அந்த இளைஞர்கள் விட்டுச் சென்ற கனவுகளும், சிரிப்பொலியும்,சுதந்திரமும் வீதியெங்கும் கேட்பாரற்று இறைந்து கிடக்கும்!.

2 கருத்துகள்:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

திருவல்லிக்கேணிவாசிகளுக்கு குறிப்பாக மேன்சன்வாசிகளுக்கு இது பெரிய இடைஞ்சல்தான். இனி புறாக்கூண்டு அறைகள் வெள்ளைச் சட்டைக்காரர்களுக்கே முன்னுரிமை தரும்.

//('ஞே'.... னு //

அது 'ஙே'

அக்ர ிாரத்தில் கழுதை பார்த்தீர்களா? எப்படியிருந்தது?

தமிழன் வீதி சொன்னது…

நன்றி சுரேஷ்,

ஆக்ராஹாரத்தில் கழுதையை காண எனக்கு அதிர்ஷடம் இல்லை. ரெமொட்டை வைத்து தேடியதுதான் மிச்சம், எங்கள் டி வி யில் பாரளுமன்டற சானல் வரவில்லை.

'ஞே' பதிலா 'ஙே' என்று திருத்திவிட்டேன்.

2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பு .

உ லகமே இந்தக் கரோனா காலத்தில் சுணங்கிக் கிடந்த போதும், சுறுசுறுப்பாக இயங்கி 2000 to 2020 ஆண்டுக்கான, தமிழ் படைப்பாளர்கள...

பிரபலமான இடுகைகள்