ஞாயிறுகளில் வெளிவரும் நாளிதழ்களின் இலவச இணைப்புகளை நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடுவேன். அதில் வரும் நிறைய விஷயங்கள் எப்போதும் சுவராஸ்யம் மிக்கதாக இருக்கும். அதுவும் குறிப்பாக 'வாசக அனுபவங்கள்' நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன் உள்ளதாக இருக்கும்.
இந்தவாரம் வந்த தினத்தந்தியின் குடும்பமலரில் 'நெகிழ வைக்கும் நிஜங்கள்' பகுதியில் வந்திருந்த செய்தி என்னை கவர்ந்ததால் உங்களுக்காக தந்திருகின்றேன்.
நூலகங்களில் நாளிதழ்களும், வாரயிதழ்களும் மேஜை மீது எப்போதும் சிதறியே கிடக்கும். படித்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு போய்விடுவர். படிக்க வருபவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்வர்.
ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மேஜையில் கிடந்த நாளிதழ்களை முறையாக அடிக்கிவைத்துவிட்டு, புத்தங்களை எப்படி பராமரிக்கவேண்டும் என்று கூறி அங்கு வருபவர்களிடம் துண்டு பிரசுரம் ஒன்றை விநியோகம் செய்துள்ளார்.
அதில்...சில வரிகள்:
பிள்ளை பேறுபோல் எந்தன் பிறப்பு
பொன்போல் கையாளுங்கள்!
பக்கங்கள் எனது அங்கங்கள்
மென்மையாக புரட்டுங்கள்!
அச்சிட்ட அத்தனையும் வடித்திட்ட கருத்துகள்'
இச்சையுடன் படித்து இன்புறுங்கள்!
பளிச்சிடும் படங்கள் எனக்கு மெருகூட்டும்
அலங்காரம் பார்த்து ரசித்து பரவசப்படுங்கள்....!
அவரின் தன்னலமற்ற தொண்டு என்னை கவர்ந்ததால்தான் இந்த பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக