வெள்ளி, ஜனவரி 27, 2012

உற்சாகமாகத் தொடங்கியது திருப்பூர் புத்தகத் திருவிழா!







அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்




                திருப்பூர் மாநகரின் பண்பாட்டுத் திருவிழாவாக 9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 புதனன்று உற்சாகமாகத் தொடங்கியது. மாநில இந்து சமய அறநிலை துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் பிப்ரவரி 5ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் செ.முத்துக்கண்ணன் வரவேற்றார். இதில் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன், சைமா பொதுச் செயலாளர் எம்பரர் வீ.பொன்னுசாமி, கபாடி அறக்கட்டளை சக்தி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   


புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கானுயிர் காப்போம் என்ற கண்காட்சியை மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி திறந்து வைத்தார். ஏஇபிசி அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்க, துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஏராளமானோர் பங்கேற்றனர். மேடை நிகழ்ச்சிக்கு முன்னதாக திருப்பூர் சிறுவர் கலைக்குழுவின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இக்கண்காட்சியில் மொத்தம் 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடைபெறும் இக்கண்காட்சியில் அங்கு புதிதாக வெளியிடப்பட்ட புதிய புத்தகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வழக்கம் போல் திருப்பூர் நகர மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெருமளவு இக்கண்காட்சியைக் காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



-----------------------------------------

முதல் படம் கண்காட்சியை அமைச்சர் திறந்து வைப்பது

இரண்டாவது படம் புத்தக விற்பனையைத் தொடங்கி வைப்பது





1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துகள்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...