வியாழன், மே 31, 2012

வெள்ளரி அதுக்கும்' நல்லதாமே....?




'வெயிலுக்கு ஏற்ற வெள்ளரி'.

இந்த கடும் வெயில் சீசனில் வெள்ளரி இல்லாத நாட்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  என்னை போன்ற வெயிலில் அலையும் மார்க்கெட்டிங் பசங்களுக்கு (?) வெள்ளரி ஒரு அற்புத நிவாரணி. தினமும் இரவினில் இதை உணவில் சேர்த்துக் கொள்வேன். 

தோல் சீவிய வெள்ளரியை நைசாக (நைசாக என்றால் யாரும் பார்க்காமத்தானே....?)  வெட்டிக் கொண்டு, கூடவே அதன் பிரண்டான வெங்கயம் அல்லது கொஞ்சூண்டு கேரட் என்று மெல்லிசாக நறுக்கிக் கொள்வேன்.    




நல்ல கட்டித் தயிரில் எல்லாவற்றையும் போட்டு சும்மா ஒரு கிளறு கிளறி சிறிது நேரம் பிரிஜில் வைத்தோமானால், சில்லென்ற வெள்ளரி தயார்.  தேவைப்பட்டால் கடுகு போட்டுத் தாளித்துக் கொள்ளலாம்.

வெயிலுக்கு ஏற்ற குளு குளு உணவு இந்த வெள்ளரி.  கூடுமானவரையில்  வெள்ளரியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  வெள்ளரி எப்போதும் உடலுக்கு நல்லது.  வெளியில் அலையும் மக்களுக்கு வெயில் நோய் வராமல் காக்கும் இந்த வெள்ளரி.ஒரு தாங்க்ஸ் கிவிங்க்தான் இந்த பகிர்வு.  

"அப்புறம் ஒரு விசயம். 
வெள்ளரி,  'அதுக்கும்' நல்லதாமே....?  உண்மையாவா....?"

வெள்ளரி, கோடையிலும் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.  

அதனால ஜமாய்ங்க பாஸ்!!!

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...