திங்கள், ஜூன் 04, 2012

'நீ நக்கித்தான் ஆகவேண்டும் !?'



எந்தவித திட்டமிடலுமின்றி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டுஇருக்கிறது.

சம்பளம் வாங்குவதும், அதை செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக காத்திருப்பதும்,
என்று வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளே சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

இதுதான் சரியான பாதையா...? என்ற கேள்வி ஒரு அலைபோல மனதிற்குள் மோதியபடியே இருக்கிறது.

எப்போதும், என்னேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாக சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப் பட்டதுதான் அதிகமாக இருக்கிறது.

"செய் ஏதேனும் செய்!" என்ற மனதின் கூக்குரலுக்கு இந்த சாமானிய சம்சாரியிடம் பதில் இல்லை!.

இந்த வாழ்க்கை நம்மை முழுமையாக தின்று தீர்க்கிறது. நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என்று நமது வாழ்வின் பாதையில் உள்ள அனைத்தயும் அது தின்று தீர்க்கிறது. வாழ்க்கை தின்று தீர்த்த 'மிச்சங்கள்' பெரும் பாறையாக உருவெடுத்து நம் கால்கள் மீது பிணைக்கப் படுகிறது.

எப்போதும், என்னேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக கை தட்ட வேண்டியிருக்கிறது. வேறொருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நமது புரங்கையின் மீது தடவப் படுகிறது. நீ வேண்டாம் என்று முகம் திருப்பினாலும் நீ நக்கித்தான் ஆகவேண்டும் என்று போதிக்கப்படுகிறது.

'இலக்கு டார்கெட்' அப்ரைசில்,  பிளான் ஆப் ஆக் க்ஷ ன்  , என்று பலவாறு, பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் 'நுகத்தடி' என்பதை மறந்துவிடவேண்டாம். அதை தூக்கி உன் கழுத்தில் வைத்து கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப்பையும் வைத்து விடுவார்கள்.

நீ நின்று திரும்பிப் பார்ப்பியா....?
இல்லை தலைதெறிக்க ஓடிவியா....?

-பிதற்றல்கள் தொடரும்.

2 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

என்றாவது ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த விரக்தியும் அலசலும் நிச்சயம் நிகழும். இலக்கு என்று ஒன்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டுச் செய்யுங்கள்; திட்டமிட்டதைச் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

Britman சொன்னது…

விகடனில் உங்கள் வலை பதிவை படிதேன் (
'நிற்ப்பாயா ஒடுவாயா '
)....!!!
ஏதோ ஒரு உத்வேகம் என்னுள்....
உடனே சென்று என் மேனேஜர் -ஐ அடிக்க வேண்டும் என்ற வெறி....
நானும் ப்ளாக் எழுதிவருகிறேன் ஆனால் என்னால் அதன் மூலம் என் நண்பர்களை அழ வைக்க மட்டுமே முடிந்தது....
Hats Off to you...!! Thanks For
'நீ நக்கித்தான் ஆகவேண்டும் !?'
எங்கள் I.T மக்களுக்கு நல்ல ஒரு கேள்வி ....!!!
-http://britmanfranco.blogspot.in/

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...