ஞாயிறு, அக்டோபர் 07, 2012

"சசிகுமாரு......என்னப்பு இப்டி பண்ணிப்புட்டியே.....???"





 
"அண்ணே வணக்கம்னே.... !"

"நேத்துதான் நம்ம அம்பத்தூர் ராக்கி தியேட்டர்ல சுந்தரபாண்டியன் படத்த பார்த்தேன்னே. பொண்டாட்டி புள்ளக்குட்டியோட படம் பாக்க போயிருந்தேன்னே. சும்ம சொல்லக் கூடாதுன்னே...அந்த போஸ்டர் ஒட்டுற சீன்லயே புரிஞ்சிடுச்சின்னே,  ஓ....இவிங்க... அவிங்கலான்னு?!". 

"நல்லவேளையின்னே, உள்ளாற போறப்ப யாரும் கேக்கல. "நீ எங்கிட்டேருந்து வர்றன்னு. இல்லேன்னா சூது வாது புரியாம நானும் தஞ்சாவூர்காரன்னுட்டு சொல்லிப்புட்டேன்னு வச்சிகீங்க, கொண்டே புடுவாய்ங்கள்ல.  அப்படி இருந்தன்னே தியேட்டரு.   பூரா உசிலம்பட்டிகாரயிங்க போலயிருக்கு...சசிகுமாரு வர்றப்பயெல்லாம் சும்மா  'விசிலு' தூள் பறக்குது.  சசிகுமாருக்கு அரசியல் ஆசை வந்திடிச்சின்னே. பாட்டு பில்டப்பும் படம் பில்டப்பும் அததான் சொல்லுது. பிரேமுக்கு பிரேமு அண்ணனோட அரசியல் ஆசை தெரியுதன்னே....?!".

"இப்படிதான்னே இரண்டு மூனு வருஷத்துக்கு முன்னாற, காமடி நடிகர் கருனாஸ், முத்துராமலிங்க தேவரோட இருக்குறாப்புல போஸ்டர் அடிச்சி ஒட்டினாருன்னே. அப்புறம் எஸ்.ஜே.சூர்யா வந்தாருன்னே. இப்போ நம்ம சசிகுமாரும் சொல்லிபுட்டாரும்னே". 

"இப்பாதான்னே பயலுவ, அக்கம்பக்கம் பக மறந்து, வேலு கம்பு, வீச்சரிவாள தூக்கி எரிஞ்சி, தாயாபுள்ளயா பழகிகிட்டு இருக்காங்க... இப்பம்போயி மறுபடியும் முதல்லேருந்தான்னே....? நல்லதா நாலு கருத்த சொல்லலாம்னே....?  அத விட்டுட்டு இப்படி சாதி பெரும ஏன்னே....? ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க,   கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே...?  நல்லா வெளங்கும்னே ....??" 

 "சசிகுமாரு அண்ணே... எல்லாம் நம்ம பயங்கதான்னு, பொத்தாம் பொதுவா படம் எடுங்க....?  இப்படி வேணாம்டியேய்!?"
.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படியே தொடர்ந்து படம் தந்தால் அவர் நண்பனே இல்லை...

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன். உண்மைதான் தோழரே. மிகவும் மோசமான ஒரு உதாரணப் படம். தற்போதுள்ள சூழ் நிலையில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இத்தகைய முயற்சி தேவையில்லாத ஒன்று.

Unknown சொன்னது…

இவனுங்கதான் பிறந்தங்களா இந்தியாவுல? நாம எல்லாம் தேவை இல்லாம அனாவசியமா பிறந்திட்டமா?

உபயம்
கவுண்டமணி

பெயரில்லா சொன்னது…

I enjoy reading write-up. Hope i can discover a lot more articles like this one. Thanks for posting.

சேக்காளி சொன்னது…

படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது எனக்கிருந்த அதே மனநிலையில் வெளி வந்திருக்கும் பதிவு.
// ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க, கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே//
நீங்க நல்லவரா? கெட்டவரா?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சோக்காளி. நடிகனுக்கு எதற்கு சாதி...?
சாதியைப் பார்த்தா இவனுங்களுக்கு கூட்டம் வருகிறது. சாதி பாசம் இருந்தால் ஒரு டாகுமென்றி எடுத்து சாதிகாரங்களுக்கு போட்டு காட்டலாமே...? அதைவிட்டு சினிமா எடுத்து பொது ஜனங்களின் பர்ஸை பதம் பார்க்கவேண்டும்....?
சமீபகாலமாக சாதி வன்மம் மீண்டும் தலை தூக்குவதாகவே எனக்கு படுகிறது.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...