நூலின் பெயர் : ஏமாறும் கலை
எழுத்தாளர் : யுவன் சந்திரசேகர்
பக்கம் : 240
வெளியீடு : காலச்சுவடு
எழுத்தாளர் : யுவன் சந்திரசேகர்
பக்கம் : 240
வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ.190/-
நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா 'பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறு கதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளை தந்து நீங்கள் கொடுத்த காசுக்கு மேலேயே உங்களுக்கு வாசிப்பனுவம் கிடைக்கிறது.
சிறுகதை தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது. அதனதன் பிணைப்பை மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர்.
உதாரணமாக ஒரு கதை: வங்கியில்தொடர்ந்து பணம் கட்டவரும் பெண்மனி, தனது
கணவருக்கு இரண்டு காலும் முடியாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு
வந்திருக்கிறேன், என்று கேஷியரிடம் சொல்லி கீயுவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும் பரிதாபப்பட்டு பர்மிஷன் தந்துவிடுகிறார்.
அப்படி இருக்க... ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர் "சை...இந்த அம்மாள் நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " எற்று குமைந்து போகிறார். நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.
இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....'அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள், அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க'. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...? என்கிறார்.
'ஏமாறும் கலை' தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம்?!.
தினமணியில் நான் எழுதிய புத்தக விமர்சனம். 13 மே 2013.
1 கருத்து:
உதாரண கதை நல்லா இருக்கு...
நூல் அறிமுகத்திற்கு நன்றி...
கருத்துரையிடுக