வெள்ளி, ஜூன் 14, 2013

வேறுமாதிரியாக இருக்கும் அரசியல்வாதிகள்?!



                 மைச்சருக்கு ஒப்பான பதவி வகிக்கும் அரசியல்வாதி அவர்.  சைரன் வைத்த இன்னோவா அரசுக் காரில்தான் வந்தார். அதற்கு முன்பே என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, "தம்பி நான் கேஷ் எடுத்துட்டு வரேன். நீங்கள் ஆபிஸ் வாசலில் நில்லுங்கள்" என்றார். அவர் சைரன் வைத்த காரில் வந்ததால் கொஞ்சம் பேர் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.


இரண்டு நாளுக்கு முன்பு போட்ட விளம்பரத்திற்கான பணம் அது. வந்தவர் ரூ 15 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டு தம்பி இந்த  15 ஆயிரத்தை வச்சிக்கிங்க மீதி பணம் 10 ஆயிரத்தை இரண்டு நாளைக்குள்ள கொடுத்திடுறேன் என்றார்.  அதை  சொல்லும்போது தயங்கி தயங்கி சொன்னார்.  இவரிடம் பணம் இல்லையா என்று மனதிற்குள் ஒரு ஷாக் அடித்தாலும், அதை முகத்தில் காட்டாமல் இருக்க நிறையவே சிரமப் பட்டேன்.


அவர் எதுவும் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக "பரவாயில்ல சார், நீங்க மீதி அமவுண்ட பொறுமையா கொடுங்க" என்று கூறிவிட்டு அந்த பணத்திற்கு பில் போட்டு அவரது உதவியாளரிடம் கொடுத்தேன்.

பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் பணபலம் மிக்கவர்களாகவும், கோடிகளில் புரள்பவர்களாகவும் அரசு பணத்தில் மஞ்சக் குளிப்பவர்களாகவும்தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், சில இடங்களில் உண்மை வேறுமாதிரியாக இருக்கிறது?!.  அரசியலில் எல்லோருமே சம்பாதிப்பதில்லை.  தன்னிடம் இருந்ததை விட்டவர்கள்தான் அதிகம்.

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...