'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி
தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
பக்கம் : 208
விலை: ரூ.125/-
வெளியீடு: சாகித்திய அகாதெமி
'இரவீந்திர பவன்'
35, பெரோஸ்ஷா சாலை,
புதுதில்லி-110001.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி
தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
பக்கம் : 208
விலை: ரூ.125/-
வெளியீடு: சாகித்திய அகாதெமி
'இரவீந்திர பவன்'
35, பெரோஸ்ஷா சாலை,
புதுதில்லி-110001.
காடுகள் விலங்கினத்திற்கு மட்டும் சொந்தமில்லை. மனித குலத்திற்கும் சொந்தமானது. அங்கு மனிதர்களும் வாழ்கிறார்கள். ஒளிக்கதிர் ஊடுறுவும் காடுகளின் நிழல்களாக மனிதர்கள் இருக்கின்றனர். ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் முளைத்திருக்கும் குடில்களில் மலைக் பழங்குடிகளின் ஜீவ மரண போராட்டங்கள், நாட்டுபுறத்து பெண்களின் சுய கொளரவம், சுதந்திரதிற்கு பிறகான கிராமப்புர வாழ்வியலில் வீசிய அரசியல் மாற்றங்கள் என்று 13 சிறுகதைகளை கொண்டது இத் தொகுப்பு. ஒரிசாவில் கோராபுட் பகுதியில் மலை பழங்குடிகள் வசிக்கும் காடுகளே இத் தொகுப்பின் கதைகலன்.
எறும்பு என்ற சிறுகதையில் ஒரு அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாய் தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அந்த சந்தைக்கு வருகிறான். துணைக்கு வினு என்ற உதவியாளனும், கூட நாலைந்து மலைவாசி கோந்துகளும் வருகின்றனர். இத்தகைய நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று நிலையில் மிகுந்த முனைப்புடன் செயல் ஆற்றத் துடிக்கிறான். வழி நெடுக மலைசாதி மக்களின் வாழ்வியல் தடங்களை ஊடுறிச் செல்லும் அவனது கண்கள், அந்த பஞ்சடைந்த கண்களை கடந்து செல்ல முடியாமல் தவிக்கிறது. இலையில் அந்த வெண்மையான அரிசி சோற்றைத் தவிர வேரொன்றுமில்லை என்றான போது ஒரு அதிகாரியின் மன நிலையிலிருந்து விலகி மனிதனாக தனியே நடக்கத் துவங்குகின்றான்.
'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்' எனும் இக்கதை தொகுப்பு The Bed of Arrows and other Stories என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். கோபிநாத் மொகந்தியால் ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு, சீத்தாகந்த் மகாபத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் இனிய மொழி நடையில் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்துள்ளது. நாம் அதிகம் அறியப்படாத ஒடிஷாவிலிருந்து இக் கதை தொகுப்பு வந்திருப்பது, அந்த மண்ணையும் அந்த மனிதர்களையும் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்துகிறது.
-தோழன் மபா.
() () () () () () ()
கடந்த திங்களன்று தினமணி நூல் அரங்கத்தில் நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யாத பகுதி.
1 கருத்து:
உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...
கருத்துரையிடுக