சனி, ஆகஸ்ட் 03, 2013

ஆடிப் பெருக்கில் திருச்சியை தாண்டாத காவிரி.


வேதனையில் தஞ்சை நாகை மற்றும்  திருவாரூர் மாவட்ட மக்கள்!

இது அகண்ட காவிரி!


                      சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்பது போல் காவிரி கரை புரண்டு ஓடினாலும் தண்ணி திருச்சியை தாண்டி இந்த வருடமும்  வரவில்லை.

 ஆடி பெருக்கு என்பது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மவட்டங்களில் முக்கியமான ஒரு திருவிழா.  விவசாய பூமியான இம்மாவட்டங்களில் ஆடி பெருக்கு என்பது அனைத்து  தரப்பு மக்களும் கொண்டாடக் கூடிய விழா. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம்
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மேட்டூர் 100 அடியை தொட்டுவிட்டது.  அப்படி இருக்க அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, மேட்டூர் அணையை முன்பே திறந்து இருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இன்னேரத்திற்கு காவிரியின் கடைமடை பகுதியான கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் பூம்பூகார் பகுதிவரை காவிரியில் நீர் எட்டியிருக்கும்.
இது வறண்ட காவிரி !

வழக்கம்போல் அரசும்  மாவட்ட நிர்வாகமும் மெத்தனமாய் இருந்துவிட்டதன் விளைவு, கடைமடை விவசாயிகள் இந்த வருடமும் ஆடி பெருக்கில் விரக்தி பெருமூச்சுதான் விடமுடிந்தது.

காவிரி தண்ணீர் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் நனைத்தால் போதும் என்று நினைத்துவிட்டர்களோ என்னவோ.....?!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆற்று மணல் எடுப்புகளும் நீரின் போக்கை மாற்றி விரயமாக்க வல்லது. அத்தோடு தூர் வாறப்படாத கால்வாய்களும் பிரச்சனை தரும்.

நனைத்து என்பதை நணைத்து என தவறாக எழுதியுள்ளீர்கள், திருத்திக் கொள்க..

நன்றிகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


நன்றி நிரஞ்சன் தம்பி!. தங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும்.

ஆங்கிலம் வழி தமிழில் யூனிகோட் முறையில் டைப் செய்வதால் இது போல் தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றது. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...