"நாளையே நாம் இருக்குமிடத்தில்
புல் முளைக்கப் போகிறது
என்றால்,
நமது
பெயரைச் சொல்லும்படியாக
எதை விட்டுவிட்டுச் செல்ல
நாம் ஆசைப்படுவோம்?"
இறுதி சொற்பொழிவு என்ற தலைப்பில் பல பேராசிரியர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஓர் உரை நிகழ்த்த ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்புவார்கள் என்று கற்பனை செய்து, அதைப் பற்றிப் பேசுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். இதுதான் கடைசி வாய்ப்பு என்று அறிந்திருந்தால், உலகிற்கு நாம் எப்படிப்பட்ட ஞானத்தை விட்டுச் செல்ல விரும்புவோம்?. நாளையே நாம் இருக்குமிடத்தில் புல் முளைக்கப் போகிறது என்றால், நமது பெயரைச் சொல்லும்படியாக எதை விட்டுவிட்டுச் செல்ல நாம் ஆசைப்படுவோம்?.
இது போன்ற 'இறுதி சொற்பொழிவு' ஒன்றை வழங்குமாறு கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி பேராசிரியர் ரேன்டி பாஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது தனது கடைசி சொற்பொழிவு என்று கற்பனை செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில், குணப்படுத்த முடியாத புற்று நோய் அவருக்கு இருந்ததை அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர் கொடுத்த அந்த சொற்பொழிவு மரணத்தைப் பற்றி இருக்கவில்லை. குழந்தைபருவக் கனவுகளை உண்மையிலேயே அடைவதை பற்றியும், வாழ்வின் ஒவ்வோரு கணத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பதைப் பற்றியும் மட்டுமே அந்த உரை அமைந்திருந்தது.
போற்றுதலுக்குரிய நூல் இது வென்று முதல் 10 பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. இறுதி தேதி தெரிந்தபின் தனக்குப் பிறகான ஒரு உலகத்தை ரேன்டிபாஷ் தனது மனைவி குழந்தைகளுக்காக தனது இறுதி சொற்பொழிவில் படைக்கிறார். அந்த 'இறுதி சொற்பொழிவின் விரிவாக்காம்தான் இந்த நூல்.
இதுவரை 50 லட்சம் பிரதிகளுக்கு மேல் இப்புத்தகம் விற்பனையாகியுள்ளது. 'The Last Lecture' என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழி பெயர்த்துள்ளார்.
Manjul Publishing House Pvt ltd., New Delhi என்ற நிறுவனம்தான் இன் நூலை தயாரித்துள்ளது. ஆங்கில புத்தகத்தை மிஞ்சும் அளவிற்கு இதன் தயாரிப்பு இருக்கிறது. தமிழுக்கு நிச்சயம் புதுவரவு இந்த மஞ்சூள் பப்ளிஷிங் ஹவுஸ். இதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த அளவிற்கு ஒரு நேர்த்தி. உலக அளவில் பேசப்பட்ட பல ஆங்கில நூல்கள் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் விரிவான விமர்சனம் பிரிதொரு நாளில்.
Rs.199/-
Manjul Publishing House Pvt ltd.,
New Delhi.
www.manjulindia.com
கொசுறு...
ஆலன் மற்றும் பார்பரா பீஸ் எழுதிய 'அலுவலகத்தில் உடல் மொழி' என்ற
புத்தகத்தை கடந்த வெள்ளி அன்று 'ஹிக்கின்போத்தம்ஸில் வாங்க நேர்ந்தது.
இதுவும் மஞ்சூள் தயாரிப்புதான். முன்பெல்லாம் ஆங்கில புத்தங்களின் செய்
நேர்த்தியைக் கண்டு நாம் வாய் பிளந்து நிற்போம். அதற்கு இனி வாய்ப்பே
இருக்காது போலும். அந்தளவிற்கு மஞ்சூள் தயாரிப்புகள் நம்மை வியப்பில்
ஆழ்த்துகின்றன. சில விஷயங்கள் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் புரியும்! இப் புத்தகத்தை பற்றிய விமர்சனம் பிரிதொரு பதிவில்.
4 கருத்துகள்:
பேராசிரியர் ரேண்டி பாஷின் ‘கடைசி உரை’ மரணப்படுக்கையில் இருக்கும் எவருக்கும் உலகை எப்படி நம்பிக்கையோடு எதிர்நோக்கவேண்டும் என்ற நெறியை எடுத்துரைப்பதாகும். ‘ஜாவா’ என்ற மென்பொருள் மூலம் கிராஃபிக்ஸ் தயாரிக்கும் துறையை உருவாக்கியவர் அவர். அவருடைய இந்த நூலை ஆங்கிலத்தில், அவர் இறந்து போய் சில மாதங்களில் படிக்க நேர்ந்தது. தனது கடைசி குழந்தையுடன் அவர் இருக்கும் படம் நூலில் இடம்பெற்றிருந்த்து. ‘இவனுக்கு நான் இறந்துபோனபின் என்னைப் பற்றி எதுவுமே தெரியப்போவதில்லை’ என்று உருக்கமாக அவர் எழுதும் இடம் இன்னும் நினைவிருக்கிறது. தமிழில் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
தன்னம்பிக்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த புத்தகம். படிக்க படிக்க நமது மனது கனத்துதான் போகும். அந்தளவிற்கு இதயத்தை தொடக்கூடிய புத்தகம் இது. தங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி சர்!
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
நன்றி சார்!
ரொம்ப நாளாச்சி பார்த்து!
கருத்துரையிடுக