கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தினமணி துணை கட்டுரைப் பகுதியில் 'சமூக வலைத் தளங்ளிலுமா சாதி....?' என்ற எனது கட்டுரை வெளிவந்தது. இன்று இணைய தேடு பொறியில் ஏதோ ஒன்றை தேடும்போது அக் கட்டுரைக்கு இணையத்தில் வந்த பின்னோட்டங்களை பார்க்க நேர்ந்தது.
அந்த பின்னோட்டமே உங்கள் பார்வைக்கு....
முந்தைய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(http://www.tamilanveethi.blogspot.in/2013/08/blog-post.html)
கருத்துகள்(4)
வெங்கடேசன்
நமது கலை பண்பாடு போன்றே சாதியும் பல நுற்றாண்டு
தொன்மையுடையது. குருதியுடன் கலந்துவிட்டது. சாதியை ஒஷிக்காமல் சாதியின்
செல்வாக்கை தடுக்கமுடியாது.
பதிவுசெய்தவர்
08/12/2013 05:00.
பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல பிரச்சினையை சமூகத்தின்
பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் .மிகப்பிரம்மாண்டமான
வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பை திறந்துள்ள முகனூல் அல்லது இணையதளம் மலம்
போன்ற கழிவுகளையும் ஆபத்தான வெடிகுண்டுகளையும் போடும் இடமாகவும்
கொண்டுள்ளது .இதை கண்காணிக்க வேண்டியுள்ளது அவசியம் .ஒரு காலத்தில் அல்லது
இப்போதும் திரைப்படங்களில் வானொலியில் ஊடகங்களில் தணிக்கை இருந்தது.ஒரு
முத்தக்காட்சி போன்றவை கூட பெரிய கூக்குரலை எழுப்பும்.ஆனால் இப்போது 24 மணி
நேரமும் வக்கிரமான உடலுறவுக்காட்சிகளை எந்த தடையுமின்றி பார்க்கும்
வாய்ப்பு உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம்
.ஆனால் இது குறித்து கடும் கண்டனம் எழாதது கண்டிக்கத்தக்கது.மேலும்
அரசுகள் டாஸ்மாக் போலவே தங்கள் ஆட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும்
பொதுமக்களின் விமர்சனகள் வராமல் தடுக்க உதவுகிறதுபோல் தெரிகிறது .எனவே அரசே இவற்றை வெளியிடுகின்றன என்றே கொள்வோம்.
பதிவுசெய்தவர்
08/12/2013 07:20
தமிழ் பேசும் ஒரே மொழிப்பிரிவினரிடையே, பல்வேறு
சாதிக்குழுக்கள், தத்தம் அளவில் சிறுபான்மைக் குழுக்களாக மாறிப்போனது,
உண்மையில் வருந்தத்தக்கது! ஒவ்வொரு முறையும், 'சாதி ஒழிப்பில் தமிழகம்
பரவாயில்லை' எனத்தான், நாம் கருதிக்கொள்கிறோம்! ஆனால், உண்மை அதுவன்று
என்பது, பிற மாநிலங்கள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது அல்லது பிற
மாநிலத்தவர்கள் இங்கு வந்து சொல்லும்போதுதான் புரிகிறது! பிற மாநிலங்களில்
வாழும் குடிமக்கள், சாதியைத் தங்கள் பெயரில் மட்டுமே சுமக்கிறார்கள்;
இங்குள்ளதுபோல், தங்கள் நெஞ்சில் அன்று! ஒருவரின் சிந்தனையே, முதலில்
பேச்சாகி, தொடர்ந்து எழுத்தாகிப் பின் முகநூலில் வெளியானதும் கலவரமாகிறது!
இவை போன்ற நிகழ்வுகள், அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றன என்பது,
உண்மையில் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியவை!
பதிவுசெய்தவர்
08/12/2013 16:13
தமிழகத்தில் யாருக்கு இல்லை சாதி? எதில் இல்லை
சாதி?அரசியலில்,இலக்கியத்தில்,சமயத்தில்,
ஊடகங்களில்,அரசுத்துறைகளில்...ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதி
இருக்கும் போது,முகநூலில் மட்டும் சாதி இருப்பதை குறைகுறுவது நியாயம்தானா?
பதிவுசெய்தவர்
08/12/2013 18:14