வியாழன், அக்டோபர் 31, 2013

"நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க...?!"




கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தினமணி துணை கட்டுரைப் பகுதியில்  'சமூக வலைத் தளங்ளிலுமா சாதி....?'  என்ற எனது கட்டுரை வெளிவந்தது. இன்று இணைய தேடு பொறியில் ஏதோ ஒன்றை தேடும்போது  அக் கட்டுரைக்கு இணையத்தில் வந்த பின்னோட்டங்களை பார்க்க நேர்ந்தது.

அந்த பின்னோட்டமே உங்கள் பார்வைக்கு....

முந்தைய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(http://www.tamilanveethi.blogspot.in/2013/08/blog-post.html)

கருத்துகள்(4) 

வெங்கடேசன் 

நமது கலை பண்பாடு போன்றே சாதியும் பல நுற்றாண்டு தொன்மையுடையது. குருதியுடன் கலந்துவிட்டது. சாதியை  ஒஷிக்காமல் சாதியின் செல்வாக்கை தடுக்கமுடியாது.
பதிவுசெய்தவர்  08/12/2013 05:00.


பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல பிரச்சினையை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் .மிகப்பிரம்மாண்டமான வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பை திறந்துள்ள முகனூல் அல்லது இணையதளம் மலம் போன்ற கழிவுகளையும் ஆபத்தான வெடிகுண்டுகளையும் போடும் இடமாகவும் கொண்டுள்ளது .இதை கண்காணிக்க வேண்டியுள்ளது அவசியம் .ஒரு காலத்தில் அல்லது இப்போதும் திரைப்படங்களில் வானொலியில் ஊடகங்களில் தணிக்கை இருந்தது.ஒரு முத்தக்காட்சி போன்றவை கூட பெரிய கூக்குரலை எழுப்பும்.ஆனால் இப்போது 24 மணி நேரமும் வக்கிரமான உடலுறவுக்காட்சிகளை எந்த தடையுமின்றி பார்க்கும் வாய்ப்பு உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .ஆனால் இது குறித்து கடும் கண்டனம் எழாதது கண்டிக்கத்தக்கது.மேலும் அரசுகள் டாஸ்மாக் போலவே தங்கள் ஆட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விமர்சனகள் வராமல் தடுக்க உதவுகிறதுபோல் தெரிகிறது .எனவே அரசே இவற்றை வெளியிடுகின்றன என்றே கொள்வோம்.
பதிவுசெய்தவர்  08/12/2013 07:20



 


தமிழ் பேசும் ஒரே மொழிப்பிரிவினரிடையே, பல்வேறு சாதிக்குழுக்கள், தத்தம் அளவில் சிறுபான்மைக் குழுக்களாக மாறிப்போனது, உண்மையில் வருந்தத்தக்கது! ஒவ்வொரு முறையும், 'சாதி ஒழிப்பில் தமிழகம் பரவாயில்லை' எனத்தான், நாம் கருதிக்கொள்கிறோம்! ஆனால், உண்மை அதுவன்று என்பது, பிற மாநிலங்கள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது அல்லது பிற மாநிலத்தவர்கள் இங்கு வந்து சொல்லும்போதுதான் புரிகிறது! பிற மாநிலங்களில் வாழும் குடிமக்கள், சாதியைத் தங்கள் பெயரில் மட்டுமே சுமக்கிறார்கள்; இங்குள்ளதுபோல், தங்கள் நெஞ்சில் அன்று! ஒருவரின் சிந்தனையே, முதலில் பேச்சாகி, தொடர்ந்து எழுத்தாகிப் பின் முகநூலில் வெளியானதும் கலவரமாகிறது! இவை போன்ற நிகழ்வுகள், அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றன என்பது, உண்மையில் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியவை!
பதிவுசெய்தவர்  08/12/2013 16:13


 


தமிழகத்தில் யாருக்கு இல்லை சாதி? எதில் இல்லை சாதி?அரசியலில்,இலக்கியத்தில்,சமயத்தில், ஊடகங்களில்,அரசுத்துறைகளில்...ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதி இருக்கும் போது,முகநூலில் மட்டும் சாதி இருப்பதை குறைகுறுவது நியாயம்தானா?
பதிவுசெய்தவர்  08/12/2013 18:14


 


6 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் பதிவு சென்று படித்தேன். அங்கே தந்த எனது கருத்துரை.
///
// மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது. //

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஒரு நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட பேஸ்புக்கை, இன்று குழு குழுவாக சாதியை அடையாளங் கண்டு கொள்ளவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று. ///

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை ...

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ தி.தமிழ் இளங்கோதங்கள வருகைக்கு நன்றி அய்யா!.

கண்ணுக்குத் தெரியாத சாதியை கைகளில் தூக்கி பிடிக்கும் இன்றைய தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு இருக்கிறது.

நாம் நல்லதொரு சமூகம் அமைய தொடர்ந்து போராடுவோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தித.

சமுக நல்லினக்கத்திற்காக நாம் இணையத் தளத்தை பயன்படுத்த வேண்டும். நமது எழுத்துகள் மூலம் நல்லதொரு தமிழகம் அமையவேண்டும் என்பதே எனது அவா.

இராய செல்லப்பா சொன்னது…

நம்மைச் சுற்றிலும் நல்லதும் கேட்டதும் கலந்தே இருக்கும். அது இயற்கை. கெட்டதைக் கண்டால் சட்டென விலகிவிடுவதே நாம் செய்யக்கூடியது.ஆதரவு காட்டி like போட்டால் தானே அவர்கள் அடுத்த பதிவுக்கு ஆயத்தமாவார்கள்? புறக்கணித்துவிடுங்கள் அவர்களை. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஒரு நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட பேஸ்புக்கை, இன்று குழு குழுவாக சாதியை அடையாளங் கண்டு கொள்ளவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று.
எங்கெங்கு காணினும் சாதியடா என்னும் நிலை தொடர்ந்தால், எப்படி நம் நாடு முன்னேறும்.
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...