சென்ற நூற்றாண்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஏகே-47 எந்திர துப்பாக்கி குறைந்தது பல லட்சம் மனித உயிர்களையாவது பறித்திருக்கும். ரஷ்யாவிற்காக தயாரிக்கப்பட்ட ஏகே-47, அதன் எளிமை மற்றும் வளமையான தாக்கும் திறனால், இன்று உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
மனித இன அழிப்புக்கு பயன்படும் கருவிகளை வரிசைப் படுத்தினால், அதில்
ஏகே-47தான் முதலிடத்தில் இருக்கும். ஏகே-47 தேசிய ராணுவங்கள் காவல்துறை
மட்டுமல்லாமல், தீவிரவாத குழுக்கள், இன விடுதலை குழுக்கள், போராளி
அமைப்புகள், கடத்தல்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று அனைத்துத் தரப்பையும்
வசீகரித்த மாபெரும் அழிவுக் கருவி அது!. அது தயாரிக்கப்பட ஆண்டான 1947ல்
47யையும், ஆட்டோமேட்டிக் என்பதலிருந்து Aயையும் அதனை கண்டுபிடித்தவரான
கலாஷ்னிக்கோவ் என்பதிலிருந்த் K யையும் எடுத்துக் கொண்டு AK -47 என்ற
நாமகாரணத்துடன், இவ் உலகை சுட்டுத் தள்ளி வருகிறது!.
AK -47 கருவியால் எத்தனை எத்தனை மனிதர்கள் தங்களது அல்ப ஆயுசுல் மடிந்திருப்பார்கள். ஆனால், அதை கண்டுப் பிடித்த மிகையில் கலாஷ்னிக்கோவ் மட்டும் 94 வயது வரை பரிபூர்ணமாக இருந்து தனது உயிரை விட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மனித இன அழிப்புக் கருவியான ஒன்றை கண்டுபிடித்த மனிதன் 94 வயது வரை உயிரோடு இருந்தார் என்கின்றபோது, அவர் கண்டுபிடித்த கருவிமட்டும் பல உயிர்களை துள்ள துடிக்க பலி வாங்குகிறது... வாங்கிவருகிறது!.
'கெடுவான் கேடு நினைப்பான்' என்கிறது நமது நீதி நூல்கள், ஆனால் இங்கு மனித குலத்திற்கு கேடு விளைவித்த ஒரு கருவியை கண்டுபிடித்தவர் தனது 94 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
என்னே இந்த நகைமுரண்...?!.

3 கருத்துகள்:
ஒரு நாளாவது அவர் வருத்தப்பட்டு இருப்பாரா...?
நகை முரண்தான் ஐயா.
//'கெடுவான் கேடு நினைப்பான்' என்கிறது நமது நீதி நூல்கள், ஆனால் இங்கு மனித குலத்திற்கு கேடு விளைவித்த ஒரு கருவியை கண்டுபிடித்தவர் தனது 94 வயது வரை உயிர் வாழ்ந்தார். //
கெடுவான் கேடு நினைப்பான் - என்பது உண்மையே!
ஆனால், சில பல நிலைகளில் இறைவனின் ஆட்சி அதிகாரத்தில் இப்படியும் அவன் செய்வதுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
இன்னொன்று: அந்த ஆள்(!) கொலைக் கருவியைக் கண்டு பிடிக்காமலிருந்திருந்தால், அந்தாளின் ஆயுட்காலம் 100-ஐத் தாண்டியும் இருந்திருக்கலாம். கண்டுபிடித்ததால்தான் அதை 94-லுடன் குறைத்து விட்டான் இறைவன் என்றெண்ணியும் நாம் மனம் சமாதானம் அடையலாம்.
(அந்தக் கருவியைக் கண்டுபிடிக்க வைத்ததும் அதே இறைவன்தான்!!!)
கருத்துரையிடுக