சனி, டிசம்பர் 14, 2013

ஆனந்த விகடனில் 'குமுதம்' டைப் கதைகள்...!?



                   இந்த வார விகடனில் (18/12/13) ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதிய 'இது காதல் இல்லாத கதை' தான் அப்படி நினைக்க வைத்தது.

அந்த கதையில் வரும் ஒரு சம்பவம்.

//தான் ஒரு பெண் என்பதற்கான  அடையாளங்களை அவள் பிடிவாதமாக மறுத்திருந்தாள். ஆனால், ஒரு ஓவியன் அவளை படமாக வரைந்தால், கழுத்துக்கு கீழே பிரஷை வெளி நோக்கிப் பெரிதாக வளைக்க வேண்டியிருக்கும்.

"ரொம்ப தப்பு....." என்றாள் வந்தனா, மிதுனை நோக்கி.

"என்ன...?"

"இப்ப நீங்க பார்த்த இடம்". //


என்று சற்றே மிகைப்படுத்தியே எழுதியிருந்தார்கள். இதைபோன்ற குமுதம் டைப் கதைகள் இதற்கு முன்னர் ஆவியில் படித்ததில்லை. வேறொரு தளத்தில் இயங்க வேண்டும் என்று நினைத்து இப்படி மாற்றிவிட்டார்களா என்று தெரியவில்லை...?

அதோடு அந்த 3D சமாச்சாரமும் எரிச்சலைதான் கிளப்புகிறது.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர்களும் மாறி விட்டார்களோ...?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

காலம் மாற்றிவிட்டது!.
நன்றி திதா.

இராய செல்லப்பா சொன்னது…

மாணவப் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சேர்பவர்கள், தமது பத்திரிக்கை சம்பந்தப்பட்ட ரகசியங்களை இன்னொரு பத்திரிகைக்கு கசியவிடுகிறார்கள் என்ற சந்தேகம் இவ்விரு பத்திரிகைகளிலும் நிலவுகிறதாம். எனவே ஒருவரை முந்திக்கொண்டு இன்னொருவர் அதே பாணியில் பேட்டிகளையும் கட்டுரைகளையும் கதைகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் போல...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆனந்த விகடன் மாறாமல் இருக்க வேண்டும் தொடரவேண்டும்

Unknown சொன்னது…

குமுதம் ,ஆனந்தவிகடன் இரண்டின் நிர்வாகமும் அண்ணன் ,தம்பி கையில்தான் என்பது எல்லோரும் அறியவேண்டிய உண்மை!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...