ஞாயிறு, நவம்பர் 24, 2013

'செஸ்'- 'இருவரும் பேசாம விளையாடனும்'

 ஒரு நேரடி ரிப்போட்! 

சதுரங்க பலகையில் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ். 
இதன் மூலமே விளையாட்டில் காய் நகர்த்தலை நாம் காண முடியும். துள்ளியமாக கணிக்க முடியும் Pix. Karthik.



சென்னையில் நடைபெற்ற 'உலக செஸ் சாம்பியன்' போட்டியைக் காண கடந்த 20ம் தேதிதான் செல்லமுடிந்தது. சர்வதேச  சதுரங்க  போட்டி சென்னையில் நடைபெறும் போது, அதை பார்க்கவில்லை என்றால் இந்த உலகம் நம்மை மன்னிக்காது என்று கிளம்பி விட்டேன். அதுவும் நமது எக்ஸ்பிரஸ் நாளிதழ்தான் மீடியா பார்ட்னர் என்பதால், அனுமதி சீட்டோடு உள்ளே செல்வது எளிதாக  இருந்தது. 


பின்னணியில் கண்ணாடி தடுப்பு
இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
அன்று  ஒன்பதாவது சுற்று நடைபெற்றுக் கொண்டு  இருந்தது. அன்றைய தினம் இந்திய ராஜாவுக்கு அதாவது ஆனந்துக்கு வாழ்வா சாவா போட்டி. அதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் கார்ல்ஸென்னே முன்னிலை வகித்திருந்ததால், ஆனந்த் கடும் நெருக்கடியில்  விளையாடிக் கொண்டு இருந்தார். இன்று ஜெயித்தால் மட்டுமே ஆனந்த் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் நார்வேயின் கார்ல்ஸென். மிக எளிதாக வெற்றியை முத்தமிட்டுவிடுவார். அதனால் போட்டி நடைபெற்ற ஹையாட் ஹோட்டல் முழுவதும் பதட்டம் நிலவியது.
ஹோட்டல் லாபியில் போட்டி திரையிடப்பட்டது
பார்வையாளர்களை கடும் சேதனைக்கு பிறகே போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.  மொபையில் போன்,  பை  போன்றவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதில்லை.  அதனால் அனைத்தையும் அரங்கிற்கு வெளியே வாங்கி வைத்துக் கொண்டனர். அரங்கின்  மேடை போன்ற பகுதியில் நீண்ட கண்ணாடி தடுப்புக்கு அப்பால் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்கள் பல அடுக்குகளாக உட்காரவைக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பேசுவது எதுவும் வீரர்களுக்கு கேட்காது. 

போட்டியில் கடுமையான சர்வேதேச விதிகள் கடைபிடிக்கப்பட்டது.

  • இதில் ஒரு ஆச்சரியமான தகவல், போட்டி நடைபெறும் போது இரு வீரர்களும் பேசக் கூடாது. அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் தேனீர் அருந்த செல்லக் கூடாது.
    குழந்தைகள் விளையாட பெரிய சைஸ் காய்கள்.
  • இருவருமே போட்டி நடைபெறும் ஹையாத் ஹோட்டலில்தான் தங்கி இருந்தனர். இருவருமே தனித்தனி  'லிப்ட்டுகளைத்தான்' பயன்படுத்தினர்.
  • தரைத்தளத்தில் போட்டி நடைபெற, முதல் தளத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்திய பத்திரிகையாளர்களும் சுறு சுறுப்பாய் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
    நேரடி ஒளிபரப்பு
  • கடந்த 2011 ஆம் ஆண்டு உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர்   கிர்சன் இல்யும்சிநோவ் ஜெயலலிதாவை  தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டியினை சென்னையில் நடத்துமாறு  கேட்டார். தமிழக அரசும் ரூபாய் 20 கோடி இதற்கென ஒதுக்கீடு செய்தாது. .  பின்னர் ரஷ்யா அதிக அளவில் ஏலம் கேட்டதால், 2012ம் ஆண்டு சதுரங்க சாம்பியன் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது..
  • 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டியினை நடத்த தமிழ்நாடு முன் வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த (2013) ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக சதுரங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
  • உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளினை ஏற்று, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க சாம்பியன்  போட்டியினை சென்னையில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.  
  • இப்போட்டிக்கென ரூபாய் 29 கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.  
  • சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
ஹோட்டலில் குழுமியிருந்த சிறுவர்கள் .
  • போட்டி நடந்த தேனாம்பேட்டை ஹயாட் நட்சத்திர ஹோட்டலில் இருந்து 20 நிமிட பயணத்தில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்றாலும், ஹோட்டலிலேயே தங்கினார் ஆனந்த். தேவையில்லாத நெருக்கடிகளைத் தவிர்க்க ஆனந்த் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்.
மெகா சைஸ் போர்டில் குதூகல ஆட்டம்!.
  • இந்தத் தொடர் தொடங்கும் முன் ஆனந்த்-கார்ல்ஸென் மோதலை, தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் என்றும், 1972ல் நடந்த பாபி ஃபிஷர்- ஸ்பாஸ்கிக்கு இடையிலான மோதலுடனும் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. 
  •  "நூற்றாண்டின் போட்டி' என வர்ணிக்கப்பட்ட ஃபிஷர்- ஸ்பாஸ்கி மோதலில் வெற்றிபெற்று, செஸ் உலகில் ரஷியர்கள் மட்டுமே செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமெரிக்காவின் ஃபிஷர். 
சென்னை மெரினா பீச்சில் வைத்திருந்த மெகா சைஸ் சதுரங்க போர்ட்
  •  சமீபத்திய தொடரில் ஆனந்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கார்ல்ஸென்.
  •  இந்தியர்களும் செஸ்ஸில் ஆதிக்கம் செலுத்த முடியும் என உலகுக்குப் புரிய வைத்தவர் ஆனந்த். 
  •  ரஷியர்களின் பிடியில் இருந்த செஸ் கோட்டையைத் தகர்த்த முதல் ஆசிய நாட்டுக்காரர்; குறிப்பாக தமிழர் என்பது பெருமைக்குரியது. 
ஹோட்டலின்  அழகிய காட்சிகள் !
ராஜா-ராணி
  •   அன்னிய மண்ணில் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் அதிகம் என்றால், ஆனந்துக்கு ரஷியாவில் ரசிகர்கள் ஏராளம்.
  • மூளைக்கான விளையாட்டு என்பதால், ஒரு மவுனப் படம் பார்ப்பது போன்றே போட்டி நடைபெறும்.
  •   சென்னையில் நடந்த தொடரில் ஆனந்த் சாதிக்கத் தவறியதை கேரி காஸ்பரோவின் வார்த்தைகளில் சொல்வதானால் "ஆனந்த் தோல்வியடைந்தார்; வீழ்ந்துவிடவில்லை'
  •   திங்கள் கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் விழாவில், கார்ல்சனுக்கு செஸ் சாம்பியன் பரிசும், ரூ.8 கோடியே 40 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும். 
  • உலக செஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
  •  
புகைப்படம் மற்றும் கட்டுரை:  தோழன் மபா. 
தகவல் உதவி : கூகுள், தினமணி.

10 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்களும் பதிவும் அருமை ஐயா. போட்டி அரங்கிற்கே எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றி ஐயா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

செய்திகளை சிறு சிறு வாக்கியங்களில் வழங்கியவிதம், படிக்க சுவையாய் இருந்தது.

//ஹோட்டலில் குழம்பியிருந்த சிறுவர்கள்//

குழம்பியியிருந்த - குழுமியிருந்த
-எது சரி சார்?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.
தங்களது பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா!

வவ்வால் சொன்னது…

//சென்னையில் நடந்த தொடரில் ஆனந்த் சாதிக்கத் தவறியதை கேரி காஸ்பரோவின் வார்த்தைகளில் சொல்வதானால் "ஆனந்த் தோல்வியடைந்தார்; வீழ்ந்துவிடவில்லை'//

கார் கேஸ்பரோவ் இப்போ போட்டி அமைப்பு நடத்தலை ,நடத்திக்கொண்டிருந்தால், இதில் வெற்றிப்பெற்றவர்களை உலக சேம்பியன் என்றே ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் ,இந்த போட்டியும் உலக சேம்பியன்ஷிப்பே இல்லைனு ஒரே அடியா நிராகரிச்சு இருப்பார் அவ்வ்.

இப்போ அவர் சொல்லி இருப்பது "சம்பிரதாய " பாராட்டு, ஆனந்தின் செஸ் கேரியர் எப்பவோ முடிவுக்கு வந்தாச்சு, சச்சின் போல ரிடயர் ஆகமா இழுத்துக்கிட்டு இருக்கார், அனேகமா கூடிய சீக்கிரம் ரிடயர்மெண்ட் சொல்லிடுவார்னு நினைக்கிறேன்.

உலக அளவில பெரிய கிராண்ட் மாஸ்டர்கள் எல்லாம் ரொம்ப ஜூனியரான ஆளுங்கக்கிட்டே தோற்க ஆரம்பிக்கும் நிலை வர ஆரம்பிச்சுதுனா "ஓய்வு அறிவிச்சுடுவங்க. அப்படி செய்வது தான் கவுரவமானது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ NIZAMUDEEN

தவறாக பிரசுரமாகியிருக்கிறது. 'குழுமியிருந்த' என்ற வார்த்தைதான் சரி!.

திருத்திக்கொண்டு விட்டேன்.
தங்களது கருத்திற்கு நன்றி நிஜாம்.

இராய செல்லப்பா சொன்னது…

அருமையான நேரடி வருணனை. அடுத்த விளையாட்டுப் போட்டிகளில் எமக்கு ஓசியில் டிக்கட் கிடைக்குமா? பதிவர் கோட்டாவில்?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல அறியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... படங்களும் அருமை... நன்றி...

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்கள் கருத்திற்கு நன்றி வவ்வால்.


உண்மையாகச் சொல்லப் போனால் ஆனந்துக்கான மரியாதை இந்தியாவில் தரப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர் சச்சினுக்கு நிகரான ஒரு விளையாட்டு வீரர். அதே அமைதி, சச்சரவில் சிக்கிக்கொள்ளாதது என்று இருவருக்கான பொதுத்தன்மை நிறையவே இருக்கிறது. தனக்கான பங்களிப்பை எப்போதுமே மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் எளிமையான 'காமென் மேன்' என்ற பிம்பத்தையே அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் ஓய்வு அறிவிக்க இதுவே சரியான தருணம். செய்வாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தித.

படங்கள் எடுத்தப் பிறகுதான் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எடுத்த படங்களை வீணாக்காமல் பதிவிட்டேன்.
நன்றி!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Chellappa Yagyaswamy

சார், முன்னேடியே சொல்லி இருந்தால் உங்களை அழைத்துப் போயிருப்போன். போகட்டும், மார்கழி சீசன் வருகிறது. சபா பாஸ் வேண்டும் என்றால் சொல்லுங்கள். வாங்கி அனுப்புகிறேன்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...