வியாழன், ஏப்ரல் 17, 2014

'டிக்கியை திறந்து காட்டுங்க!'




                     கொள்ளிடம் ஆறு தாண்டி, கடலூர் மாவட்ட எல்லை தொட்டதும்  ஒரு தடவை திறந்து காட்டுங்க என்றார்கள். மஞ்சகுப்பம் தாண்டி புதுச்சேரி பார்டரில் முல்லோடை கென்னடி பார் அருகே வந்த போது மறுபடியும்  திறந்து காட்டுங்க என்றார்கள்.

பாண்டிச்சேரி டவுன்  நடு செண்டரில் வைத்து மறுபடியும் திறந்து காட்டுங்க என்றார்கள்.  பாண்டிச்சேரி பார்டரை தாண்டி திண்டிவானம் பைபாஸில் விழுப்புரம் எல்லைத் தொட்டதும்  மறுபடியும் வண்டியை நிறுத்தி,  "டிக்கியை திறந்து காட்டுங்க" என்றார்கள்.

தேர்தல் ஆணையத்தின் 'எந்திர துப்பாக்கி ஏந்திய வீரர்கள்'  காரை வழி மறித்து டிக்கியை திறந்து காட்டுங்க என்று சொல்வதும், நானும் பொறுமையாக வண்டியை நிறுத்தி,  டாஷ் போர்டு திறந்து, டிக்கியை திறந்து  ஏதோ வீட்டை வாடகைக்கு பார்க்க வரும் டெனண்டுக்கு காட்டுவது போன்று அவர்களுக்கு திறந்து காட்டிக் கொண்டே  வந்தேன்.  'நான் அந்த அளவிற்கு ஒர்த்து இல்லை ஏட்டைய்யா' என்று சொன்னாலும் கேட்பதாக  இல்லை. வைதீஸ்வரன் கோயில் ஏரியாவில் மட்டும் பிரஸ் என்றதும் விட்டுவிட்டார்கள்.

மாயவரத்திலிருந்து சென்னை வருவதற்குள் கிட்டதட்ட 10 இடத்திலாவது நம்மை சோதனை செய்திருப்பார்கள்.  இவர்கள் சோதனை சாமானிய மக்கள் மீதே இருந்ததே தவிர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அது பாதித்ததாக தெரியவில்லை.  தேர்தலுக்காக எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும் இப்படி பொத்தாம் பொதுவாக எடுத்துச் செல்வதில்லை என்பது ஊர் அறிந்த ஒன்று!.

இது நாள் வரையில் ஒரு வேட்பாளரிடமிருந்து இந்தளவிற்கு பணம் கைபற்றப்பட்டது என்ற செய்தியை நாம் கேட்கவில்லை பார்க்கவும் இல்லை. வாக்காளர்களுக்கு தலைவர்களின் பெயரை போட்டு புடவை விநியோகிப்பதும், பணத்தை பல்வேறு வழிகளில் பட்டுவாடா செய்வதும், பொது கூட்டதிற்கு வர... ஒரு நாள் படி 500 ரூபாய், சாப்பிட பிரியாணியும், குடிக்க குவார்ட்டர் கொடுப்பதும், கூட்டத்திற்கு ஆள் பிடிக்க தனியார் பேருந்துகளை திருப்பிவிடுவதும் நடந்துக் கொண்டுதானே இருக்கிறது.  இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா....?.

அப்பாவி ஜனங்கள் கொண்டு செல்லும் 50 ஆயிரம் 1 லட்சத்தை கணக்கு கேட்டு பிடிங்கி வைத்துக் கொண்டு அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஊர் பஞ்சாயத்துகளை கூட்டி எந்த "நீ கட்சியில் இருந்தாலும் சரி, சாதிக்கட்சிக்குதான் ஓட்டு போடவேண்டும்" என்று மிரட்டும் சாதிய கட்சிகளை தேர்தல் ஆணையத்துக்கு தெரியதா....?.  இல்லை எந்த ஒரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களுக்கு பணம் தரவில்லையா....?.   எதற்கு இப்படி சமானிய  பொது மக்களை வாட்டி வதைக்க வேண்டும்.  இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை வேண்டுமானால் மகிழ்விக்கலாம். நம்மை போன்ற சாமானிய மக்களை அல்ல.....?!

கொசுறு:

மதுரவாயில் பைபாஸிலிருந்து இறங்கி, அம்பத்தூர் OT  தாண்டி விவேகானந்தா  பள்ளிக்கூடம் வரும் போது,  திடீரென்று குறுக்கே பாய்ந்த இன்ஸ்பெக்டர் ...பின்னடியே ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.  "எதற்காக நிறுத்தாம போறீங்க, சீக்கிரம் வண்டிய விட்டு இறங்கி டிக்கியை திறந்து காட்டுங்க" என்றார் அதிகாரத்துடன்.

நானும் திறந்து காட்டினேன்.

() () ()

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இங்கும் இதே சிரமம் தான்... என்னமோ போங்க...

தி.தமிழ் இளங்கோ சொன்னது…


உங்களுக்கு வந்த சோதனையையும் ஒரு சுவையான பதிவாக போட்டு விட்டீர்கள். ஜர்னலிஸ்ட் என்றால் சும்மாவா? பஸ்ஸில் பயணம் செய்த போது எனக்கும் சோதனைதான்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விவரம் தெரியாமல் பணம் கொண்டு செல்லும் பொது மக்கள்தான் அவதிப் படுகிறார்கள்.

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Packirisamy N சொன்னது…

கடைசிவரைக்கும் எப்படி பணத்தைக் கொண்டுவந்தீர்கள் என்று சொல்லவே இல்லையே?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Packirisamy N.

பணத்தை பர்ஸில்தான் எடுத்து வந்தேன்.
50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் இருந்தாலும் பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...