375வது பிறந்த நாளை கொண்டாடிவிட்டது சென்னை!. ஆண்டுகள் முன்னுறைக் கடந்தாலும் இன்னும் முதுமை தட்டவில்லை சென்னைக்கு. என்றும் இளமை, என்றென்றும் புதுமை என்பது போல், இன்றும் தனது இளமையை காத்து வருகிறது. சென்னை என்றொரு நகரம் இல்லையென்றால் நானெல்லாம் எங்கே பிழைப்பு தேடி ஓடி இருப்பேன் என்று தெரியவில்லை. 1995ல் கல்லூரி முடிந்ததும் 20 நாட்களில் சென்னைக்கு பஸ் ஏறிவிட்டேன். அன்றிலிருந்து சென்னை என்னை அன்னையைப் போல் காத்துவருகிறது.
மிக உயர்வான மனித நேயம் கொண்ட ஒரு நகரம் சென்னை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடக்கு கிழக்கு மேற்கு என்று பல திசைகளிலும் மனிதர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். மார்க்கெட்டிங் மனிதனான எனக்கு சென்னையை சுற்றுவதுதான் வேலை. நான் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
பார்த்து மகிழுங்கள்!. வணக்கம் சென்னை!.
-தோழன் மபா.
மிக உயர்வான மனித நேயம் கொண்ட ஒரு நகரம் சென்னை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடக்கு கிழக்கு மேற்கு என்று பல திசைகளிலும் மனிதர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். மார்க்கெட்டிங் மனிதனான எனக்கு சென்னையை சுற்றுவதுதான் வேலை. நான் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
பார்த்து மகிழுங்கள்!. வணக்கம் சென்னை!.
-தோழன் மபா.
8 கருத்துகள்:
Photoவை கோர்த்து அதிலேயே விளக்கவுரை அருமை தோழரே...
கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண்க... நன்றி.
படங்கள் ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!!!!!
தேன், தேன், ரசித்தேன்!
படத்திற்கான விளக்கங்கள் சேர்த்தது கூடுதல் அழகு!
ஒருசில தட்டச்சுப்பிழைகளை அகற்றினால் இன்னும் மெருகேறும்!
எ.கா: உரைவிடம் = உறைவிடம்
படங்கள் அருமை
தங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப் பூவில் சந்திக்கும் வாய்ப்பு
நன்றி ஐயா
அருமை.
வாழ்த்துகள்.
@ KILLERGEE Devakottai.
நன்றி கில்லர்ஜி!.
வருகைக்கும் வாழ்த்திற்கும்.
தங்களது கவிதை படித்தேன் ரசித்தேன்.
அருமை! வாழ்த்துகள்!
@துளசி கோபால்
மிக்க நன்றி துளசி கோபால்.
கோவா டூர் போகும் அவசரத்தில் இந்த வீடியோவை பதிவேற்றும் செய்தேன். பதிவேற்றம் செய்த பின்தான் பிழை இருப்பதை உணர்ந்தேன். அதனால் அதை சரி செய்ய முடியவில்லை. தவறுக்கு வருந்துகிறேன்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!.
@ கரந்தை ஜெயக்குமார்
மிக்க நன்றி அய்யா!.
தொடர் வேலை பளுவால் வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை.
நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன் அய்யா!.
@Rathnavel Natarajan
மிக்க நன்றி அய்யா!.
கருத்துரையிடுக