த.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம் |
புதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.
இலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
()()()()()
"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'
தமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-
போருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
வேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.
பால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை?. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.
பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.
18/03/2016.
4 கருத்துகள்:
அடப் பாவமே. மனது தவிக்கின்றது. ஆவண செய்யுங்கள் சகோ. அவரை எப்படியும் வெளியில் கொண்டு வந்து வேறு நாட்டுக்கு அனுப்புங்கள்.
அவசியம் உதவுங்கள் ஐயா
@ Thenammai
கண்டிப்பாக சகோ, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் .
@ கரந்தை ஜெயக்குமார்
நன்றி அய்யா.. பத்திரிகையில் ஒரு ஓரமாக வெளிவந்த செய்தி அது. நிச்சயம் அந்த இளைஞன் காப்பாற்றப்படவேண்டும்.
கருத்துரையிடுக