எங்கள் கல்லூரி வாட்ஸ்ஸப் குரூப்பில்... இந்தப் படத்திற்கு கவிதை எழுதச் சொல்லி எனது கல்லூரி கால நண்பர்கள் கேட்டார்கள். நான் நான்கு கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
இப் படத்திற்கு கவிதை எழுத சொல்லி நமது முகநூல் கவி நட்புக்களையும் உரிமையோடு அழைத்திருந்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் இதோ.....
**********************
மபா
1) காற்றறியுமோ...
குடை பிடித்தது
காகமென்று ?!
**********************
2) மழை நாளில்
காக்கைக்கும் தேவை
குவார்ட்டர் வாங்க
குடை !
***********************
3) உறவின்றி
தனித்து வாழ்தல்
அந்தோ
காக்கைக்கும்
குடை சாயும்.
******************
4) இரண்டுமே
கறுப்பு
ஒன்று கரையும்
மற்றொன்று
நனையும் !
----------------------------
வரதன்
மரம் வளர் மனிதா!
குடையே வேண்டாம்.
நானமரக் கிளையாகும்
நீ அமர நிழலாகும்
---------------------------------------------
இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan)
படர்ந்திருந்த மரமொன்று
காணாமல் போனதால்
நடு சாலையில் கவிழ்ந்த குடையில் ந
நின்றுகரைந்து கரைந்து தேடுகின்றேன்!!!
எனக்கு நிழல் கொடுக்கும்
அந்த மரத்தைப் போல் மாந்தருக்கு
நிழல் கொடுக்கும் இக்குடை
ஏனோ எனக்கு தர மறுக்கிறது!!!
மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்!!!
--------------------------------------------------
ரூபன் ஜாய் (Ruben Jay)
மயிலுக்கு போர்வை தந்தவனே,
இதோ,
காக்கைக்கு குடை கொடுத்தவனைப் பார்,
இவனல்லவா கொடை வள்ளல்.
------------------------------------------------------
விசுவநாதன் கணேசன் (Viswanathan Ganeshan)
தாத்தாவின் குடை தடுமாறுகையில்
காக்காவுக்கு வைத்த சாதம் செய்த கைமாறு..
-------------------------------------------------------------
-வெங்கட் ராமானுஜன்.
சரிந்த குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன் எங்கே ..
வீழ்த்தபட்ட ஜனநாயகம் இங்கே..
காக்க போராடியவன் எங்கே..
தலைகவிழ்ந்த தன்மானம் இங்கே..
தடியடித்த கொலை செய்த படுபாவிகள் எங்கே..
கரைகிரனே காகம் நான்
கேக்கவில்லையா அதிகாரம் புசிக்கும் பூதர்க்கு ..
குற்றம் செய்கிலா கோவலனுக்கு
நீதிகோரி எரித்தனளே கண்ணகி மதுரையை
குற்றமற்றவர்களின் மர்ம உறுப்புகள்
சிதைக்கபட கதறிய
வலிகளின் நடுநிசி ஓலங்களில்
எரியாமல் ஏன் இருண்டது #சாத்தான்குளம் ..
கா கா கா கா
எனறால் நான் வருவேன்
வா வா வா வா
எனறாலும் வர ஏன் நீ மறுக்கிறாய் ...
உன் சரிந்த குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன் நீ எங்கே ..?
பி.கு1 :
முகநூல் தமிழ் சொத்து Mahesh Babu Padmanabhan அவர்கள் படம் பார்த்து கவிதை சொல்லும் கேள்விக்காக ..
பி.கு2 : இறந்த நம் சகோதரர்களுக்கு #JusticeForJayarajAndFenix 🙏🙏
----------------------------
ஷண்முகம் எம்.பி (Shanmukham Mb)
Kuudu kata maram indri thavitha kagathirkaga kudaiyayi kudutha kudaivallal vazhga endru kagam karaithadhu
கூடு கட்ட மரம் இன்றி தவித்த காகத்திற்காக குடையையே கொடுத்த குடை வள்ளல் வாழ்க என்று காகம் கரைந்தது
()()
Shanmukham Mb
Mullaiku theyer kuduthaan paarivalar endha kakaiku kudai kudutan andha koudaivalar
--------------------------------------------
சாண்டியல்யன் (S Sandilyan)
உட்கார்ந்த இடம்
குடையின்
கொடை
()()
--------
காக்கை உட்கார
குடை சாய்ந்தது!!
()()
காக்"கை(யில்)"
குடை
----------------------
பாதையில்
குடை
காகம் உட்கார
எது தடை????
--------------------------
வேடியப்பன் எம் முனுசாமி (Vediyappan M Munusamy)
..
தாத்தாவின் குடைமீது காக்கா
உட்காந்திருக்கிறது என்றேன்.
தளுதளுத்த குரலில் சொன்னார் பாட்டி..
இல்லை.., தாத்தாவேதான் உட்காந்திருக்கிறார்.
----------------------------------------------------------------------------------
மனோஜ் கிருஷ்ணா (Manoj Krishna)
அர்த்த ராத்திரி
அற்பர்கள் மத்தியில்.....
குடை பிடிக்கத்
தெரியாத காகம்.!
---------------------------------------------
தேவ தேவா (Deva Deva)
மனிதனால்
தூக்கி வீசப்பட்ட
கைக்குடை
அந்த கைக் குடையின்
முதுகெலும்பின் உச்சியில்
ஒரு கருநிறக் காகம்
பார்ப்பதற்கு என்னவோ
விளையாடுவதற்கு
உட்கார்ந்தது போல்
தெரியவில்லை
எல்லாமே தற்காலத்தில்
வினையாகி விட்டது
என்பதை உணர்த்துவதற்காக
உட்கார்ந்து போல் தெரிகிறது !!!
நம்மை விட
சில அறிவு குறைவான
ஆகாயத்துப் பறவைதானே
என்றெண்ணுவதா
அல்லது
புத்தி கெட்ட மனிதனுக்கு
இறைவனால் அனுப்பப்படும் இறுதித் தூதனென்று
எண்ணுவதா
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
கூக்குரலை நிச்சயமாய்
நானறிவேன்
தன் இனமே
அழிந்து போகிறதென்கிற
இறுதி செய்தியைச் அறைக்கூவல் செய்கிறதோ
அல்லது
தன் வாழிடங்களை
அழித்துப் போட்ட மானுடனத்தை பார்த்து
உங்களுடன் எப்பொழுதும் வேண்டுமானாலும்
போர் செய்வேன்
என்ற எச்சரிக்கை
தொனியை
உயர்த்துகிறதோ
இப் பூமியில் நடக்கும்
அநீதிகளை கண்டு
இதற்கெல்லாம் காரணம்
இப்பாழாய்ப் போன
மனிதன் தானென்று
கடவுளை நோக்கி
அபயமிடுகிறதோ
மனிதமே...
உன்னால் தலைகீழான இயற்கையின் விதிகளை
என்னால்
நிலைநிறுத்த இயலும்
என்று
சவால் விட்டு அழைக்கிறதோ...
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
பாடுகளை நானறிவேன்
---------------------------------------------
கதிரவன் திருநாவுக்கரசு (Kadhiravan Thirunavukkarasu)
குடைக்குள் காகம்..
கரு மேகம்..
மழைக்கு காகமோ , குடையோ..
----------------------------------------------
பாலசுப்ரமணியன் சுதாகர் (Balasubramanian Sudhakar)
லாக்டவுன் நேரத்தில்
யாரும் வெளியில் வராதீர்கள்ன்னு
எச்சரிக்கை செய்கிறதோ,
தனித்திருக்கும் காகம்!!
---------------------------------
ஜான் தம்பிதுரை (John Thambidurai George)
நான் காகம் தானே...
கரைய மட்டும் தான் இயலும்!
குடை சாய்ந்து போனதே இந்த பூமி...
என் செய்வேன்?
---------------------------------------------------
பரமானந்தம் யோகானந்தம் (Paramanandam Yoganandam)
மழை வரும் என்று
நம்பாத மனிதன்
சாலையில் வீசிய குடையை,
நம்பிக்கையுடன்
பிடித்திருக்கும் காகம்.
-------------------------------------------
வித்யா சுரேஷ் (Vidhya Suresh)
தருவில்லா தெரு
குடைக்குள்
கூடடைவோம்
-------------------------------------
பன்னீர் செல்வம் (Panneer Selvam)
மரங்களை
அழித்த மாபாதக செயலில்...கூடே,
எனது குடையாகும்...
உங்களின் குடையோ..கொடையோ...
எமக்கு.கூடாகுமோ..!?!
---------------------------------------------
அகிலா பரணி (Akila Bharani)
குடை இருக்கு...
மழை இருக்கு....
மனுஷன காணோமே...
----------------------------------------------
பிரான்சிஸ் (P.J. Francis)
குடிமகன் விட்டுசென்ற குடைகூட போதையில்
கவிழ்ந்து காக்கை குடித்தனம்
செய்யும் இடமானது
----------------------------------------
எ.ராஜமாணிக்கம் வழக்கறிஞர்.
மழையின் கரங்கள்
பூமியை அறைந்து கொண்டிருக்க...
வானத்தின் கண்ணீரில்
நிலை தடுமாறிய குடை....
நீதிகேட்டு வானத்தை
நோக்கி
வழக்காடும்
காகம்......
------------------------------------
எனது வேண்டுகோளை ஏற்று கவிதைப் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றியும் பேரன்பும்!
அன்புடன்
தோழன் மபா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக