புதிய வார்ப்புகள்!
தினமணி தீபாவளி மலர் வேலை தெடங்கியபோதே, இம் முறை வலைப்பதிவர்கள் பற்றி எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
தீபாவளி மலர் தயாரிப்புத் தொடர்பாக, மீட்டிங் நடைபெறும். இதில் தினமணி ஆசிரியர், மலர் குழுவினர், விளம்பர பிரிவு, பத்திரிகை விற்பனை பிரிவு, அச்சகப் பிரிவு போன்ற பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, மலரின் பக்கங்கள் தொடங்கி, எத்தனை பிரதி அச்சிடவேண்டும்,எப்போது சந்தைப்படுத்த வேண்டும், எந்த வகையான அச்சு, பேப்பர் தரம், எத்தனை பக்கம் விளம்பரம், எடிட் ரேஷியோ போன்றவை விவாதிக்கப்படும்.
இரண்டாம் பக்கம் |
முதல் பக்கம் |
கிட்டத்தட்ட 15 நாள் அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, புகைப்படங்களைப் பெற்று கட்டுரையை முழுமைப்படுத்தி அளித்துவிட்டேன்.
தினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.
தினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.
எல்லோருக்கும் போனை போட்டு சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் சொல்லபோக, எல்லோரும் ஓகே என்றார்கள்.
பிறகு வலைப் பதிவர்கள் கட்டுரையை தினமணி கதிரில் வெளியிடுவது என்று எடிட்டோரியலில் முடிவு செய்து, தயார் நிலையில் இருக்க, மீண்டும் ஒரு ட்விஸ்ட் 4 பக்கத்திற்குப் பதிலாக இரண்டு பக்கம்தான் கிடைத்தது . இரண்டு பக்கம் என்பதால் 12 வலைப்பதிவர்களிலிருந்து 6 வலைப்பதிவர்கள் என்றானது.
மீண்டும் போன்... மீண்டும் எஸ்கியூஸ்....!
அந்தா இந்தா என்று கடந்த வாரம் ஞாயிறு (17/11/2013) அன்று தினமணி கதிரில் 'புதிய வார்ப்புகள்' என்ற வலைப்பதிவர்கள் பற்றிய எனது கட்டுரை வெளியானது. இதில் 'யாழிசை' வலைத்தளம் மட்டும் 'தினமணி ஞாயிறு கொண்டாடத்தில்' முதல் பக்கத்தில் வெளிவந்தது.
இணையத்தில் படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்....
http://epaper.dinamani.com/185393/Kadir/17112013#dual/6/1
http://epaper.dinamani.com/185381/Kondattam/17112013#page/1/1
இக் கட்டுரையின் முக்கிய நோக்கமே இணைய எழுத்தாளர்களை, அச்சு ஊடகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். வலைப் பதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி!.
மிக நேர்த்தியான முறையில் பிரபல எழுத்தாளர்களுக்கு சவால் விடும் வகையில் எழதும் இவர்களது எழுத்துகளே, வருங்காலத்தை ஆள போகிறது. என்னாலான சிறு முயற்சி இது. விடுபட்ட வலைபதிவர்கள் பற்றிய கட்டுரை, இனி வரும் வாரங்களில் ஞாயிறு கொண்டாடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இம் முயற்சி தொடரும்!. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!.
அன்புடன்
-தோழன் மபா.
32 கருத்துகள்:
உங்களின் சேவைக்கும் பாராட்டுக்கள் பல... நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வலைபதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி!
இனிய் வாழ்த்துகள்..!
வணக்கம் நண்பரே.
தங்கள் உயரிய நோக்கத்திற்கு முதலில் வணக்கங்கள். வலைப்பக்க எழுத்தாளர்களின் படைப்புகள் ஊடகத்துறையிலும் ஆட்சி செய்ய வேண்டும் எனும் தங்களது உயரிய நோக்கம் வெற்றி பெற (பெறும்) வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை..
வணக்கம்
தங்களின் சேவைக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல வலைப்பதிவுகளின் அறிமுகங்கள் தொடரட்டும்
ஆஹா... ஆஹா...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான செய்தி...
தொடரட்டும் தங்கள் சேவை...
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்குத்தான் முதல் வாழ்த்துகளை சொல்ல வேண்டும். தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள்.
வலைப்பதிவுக்கும் அச்சு ஊடகத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் சொல்லிவிட்டீர்களே! அதாவது இட நெருக்கடி! எப்படியாயினும், 'வாரம் சில பதிவர்கள்' என்று அறிமுகப்படுத்தினாலும் அது தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
தங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது. வாழ்த்துக்கள் ஐயா.தொடருங்கள் தங்கள் சேவையினை
தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற தங்களது சீரிய பணிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் நன்றி!
// இம் முயற்சி தொடரும்!. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!. //
தங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
மற்றவர்களை முன் நிறுத்தவும் நல்ல மனம் வேண்டும். திறமையாளர்களை அடையாளப்படுத்தம் உங்கள் நோக்கம் சிறந்தது. மிக்க நன்றி! தொடருங்கள்...
@ திண்டுக்கல் தனபாலன்.
நன்றி தித.
வழக்கம்போல் உங்களிடமிருந்துதான் முதல் கமெண்ட் வந்திருக்கிறது. வலைப்பதிவர்களின் அறிமுகம் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள் பல... !
வணக்கம் பாண்டியன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றி!.
முயற்சியை தொடருவோம்!.
@2008rupan,
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.
@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.
@ NIZAMUDEEN
மிக்க நன்றி நிஜாம்.
வலைப்பதிவர்களை பத்திரிகை உலகிற்கு அறிமுகப் படுத்தவே இந்த முயற்சி!.
@ Avargal Unmaigal.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!.
@ ஜோதிஜி திருப்பூர்.
நன்றி ஜோதிஜி!.
முந்தைய பதிவிற்கான விமர்சனத்திற்கே உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தொடர் வேலைப் பளூவால் முடியாமல் போய்விட்டது. இரண்டுக்கும் சேர்த்து, எனது மனமார்ந்த நன்றிகள்.
@Chellappa Yagyaswamy கூறியது...
நன்றி சார்,
அச்சு ஊடகத்தில் இட நேருக்கடி என்பது மிகவும் வழக்கமானது. எத்தனையோ செய்திகள் இட நெருக்கடியில் மாண்டு போய் யார் பார்வைக்கும் வராமல் அமிழ்ந்து போயிருக்கின்றன. சில நேரங்களில் 'செருப்புக்காக காலை வெட்டக் கூடிய நிகழ்வும்' அங்கு நடக்கக்கூடியதுதான். அதிலிருந்து தப்பிப்பிழைப்பதே ஒரு செய்திதான்.
பெரும்பாலான வலைப்பதிவர்கள் மிகச் சிறப்பான பதிவுகளை தருகின்றனர். அவர்களுக்கான மேடையை அமைத்துதருவதும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.
@கரந்தை ஜெயக்குமார்.
நன்றி அய்யா!.
தங்களது வாழ்த்திற்கு நன்றி!. சக வலைப்பதிவர்களுக்காக தொடர்ந்து முயற்சிப்போம்.
@ தி.தமிழ் இளங்கோ.
தங்களது வாழ்த்திற்கு நன்றி அய்யா, ஊடகத்தில் இருப்பதால், என்னால் முடிந்த சிறு உதவி.
தொடர்ந்து முயற்சிப்போம் அய்யா!
தங்கள கருத்திற்கு மிக்க நன்றி உஷா அன்பரசு.
உண்மைதான் நாம் அங்கு பணிபுரிவதால் நமது வலைத்தளத்தை பற்றி எழுத முடியாது. இங்கு பக்கத்து இலைக்குதான் பாயசம் கேட்க முடியும். நமது தளத்தைப் பற்றி வேற யாராவது எழுதினால்தான் உண்டு.
உங்கள் முயற்சிக்கு வாழ்ததுக்கள் நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.
நன்றி தோழர் ம.பா.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்......
கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்......
பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது ,ஒவ்வொரு வாரமும் தொடரப் போவதைச் சொல்கிறேன் ...உங்கள் பரந்த மனசுக்கு நன்றி !
நல்ல பணி! தங்கள் முயற்சி மேலும்
தொடர வாழ்த்து!
கருத்துரையிடுக