ஞாயிறு, டிசம்பர் 26, 2010
ஒரு பிரசவ வேதனை !
இந்தவாரம் வந்த தினத்தந்தியின் குடும்பமலரில் 'நெகிழ வைக்கும் நிஜங்கள்' பகுதியில் வந்திருந்த செய்தி என்னை கவர்ந்ததால் உங்களுக்காக தந்திருகின்றேன்.
நூலகங்களில் நாளிதழ்களும், வாரயிதழ்களும் மேஜை மீது எப்போதும் சிதறியே கிடக்கும். படித்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு போய்விடுவர். படிக்க வருபவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்வர்.
ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மேஜையில் கிடந்த நாளிதழ்களை முறையாக அடிக்கிவைத்துவிட்டு, புத்தங்களை எப்படி பராமரிக்கவேண்டும் என்று கூறி அங்கு வருபவர்களிடம் துண்டு பிரசுரம் ஒன்றை விநியோகம் செய்துள்ளார்.
அதில்...சில வரிகள்:
பிள்ளை பேறுபோல் எந்தன் பிறப்பு
பொன்போல் கையாளுங்கள்!
பக்கங்கள் எனது அங்கங்கள்
மென்மையாக புரட்டுங்கள்!
அச்சிட்ட அத்தனையும் வடித்திட்ட கருத்துகள்'
இச்சையுடன் படித்து இன்புறுங்கள்!
பளிச்சிடும் படங்கள் எனக்கு மெருகூட்டும்
அலங்காரம் பார்த்து ரசித்து பரவசப்படுங்கள்....!
அவரின் தன்னலமற்ற தொண்டு என்னை கவர்ந்ததால்தான் இந்த பதிவு.
சனி, டிசம்பர் 25, 2010
மீண்டும் வரும் அதே ஞாயறு
![]() |
| மாங்ரோ காடுகள் |
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது அந்த கருப்பு ஞாயறு. உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி, உறவுகளை சிதைத்து, உலகின் பல நாடுகளின் மக்களை கபலீகரம் செய்த அந்த கருப்பு 26 ஞாயற்றுக் கிழமை நாளை மீண்டும் வருகிறது. ஆம் நளை டிசம்பர் 26.
![]() |
| கொத்துகொத்தாய் மடிந்தவர்கள் |
இந்த முறை சற்று பலமாகவே. அதற்குள் கீழியிருந்து சத்தம் கேட்டது. " கீழே.... ஓடுங்க...! ஓடுங்க... பூகம்பம்" என்று அலறல் சத்தம் கேட்டது. எங்கும் ஒரே அமளிதுமளி. குடியிருப்பே பரபரப்பாக கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. கட்டிலில் கிடந்த எனது மகளை தூக்கிக்கொண்டு, பைக் சாவி கூடவே பர்ஸையும் எடுத்துக் கொண்டு மனைவியோடு கிழே இறங்கி ஓடினால், மொத்த குடியிறுப்பும் 'கோட்டுவாயோடு' பிளாட்டையே பீதியோடு பார்த்துக் கொண்டு இருந்தது.
சில மணித் துளிகளில்... 'சென்னை முழுவதும் வீடுகள் குளுங்கின' என்ற செய்தி காட்டுத் தீ போன்று பரவியது. நாங்கள் பல்லுவிலக்கக் கூட... வீட்டுக்குள் செல்ல தயங்கி 1 மணி நேரம் வெளியிலேயே நின்றுக் கொண்டு இருந்தோம். அதுவரைக்கும் உன்மையாக என்ன நடந்தது என்ற விவரம் கூட தெரியவில்லை.
அதற்குள் எங்கள் அண்ணன் தாம்பரத்தில் இருந்து, தொலைபேசி...எங்களை அவரது வீட்டிற்கு வரச் செய்துவிட்டார்.
பிறகுதான் தெரிந்தது, ஜாவா சுமத்திரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்துமா கடலில் சுனாமி ஏறுபட்டுள்ளது என்று. அது வரையில் 'சுனாமி' என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது. அந்த பெயரும் புதிது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுனாமி ஜப்பானிய வார்த்தை.
![]() |
| சுனாமியின் போது சென்னை மெரீனா கடற்கரை |
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சுனாமி இந்துமகாச் சமூத்திரத்தில் உள்ள இந்தோனேஷியா, புங்கட் தீவுகள், அந்தமான், இலங்கை, இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டிவிட்டது. இங்கு தமிழகத்தில் சென்னையில் மெரீனா, நொச்சிக் குப்பம், ஸ்ரீனிவாச புரம், பட்டினப்பாக்கம், மகபலிபுரம், கடலூர் மாவட்டதில், கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம் மற்றும் புதுச்சேரி, நாகை மாவட்டத்தில் பழயாறு, புதுப்பட்டிணம், பூம்புகார், கொட்டாயமேடு, மடவாமேடு, கீச்சாங்க்குப்பம், வேளாங்கன்னி, நாகர்கோவில் கடற் பகுதி என்று தமிழகத்தையே ஒரு புரட்டு புரட்டியது ஆழிப் பேரலை.
இதில் அதிகப் பாதிப்பு நாகை மாவட்டத்திற்குதான். அதுவும் வேளங்கன்னியில் படுபயங்கரம். அங்கு பொதுவாகவே எப்பதும் கூட்டம் இருக்கும். அதுவும் கிருஸ்துமஸ் முடிந்த ஞாயறு என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு பத்திரிகையின் நிருபர் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துவிட்டு தனது குடும்பத்தோடு கடற்கரையில் இறங்கி, தண்ணீரை மொண்டு தனது மகன்களின் தலையில் தெளிக்கும் போது "ஹொ" வென பாய்ந்து வந்த ஆழிப் பேரலை அவரது இரு மகன்கள், மனைவி, மாமியார் என்று மொத்த குடுப்பத்தையும் சுருட்டிக் கொண்டு போனது. அதில் தப்பிய அவர் இன்றும் நடை பினமாக வாழ்த்துக் கொண்டு இருக்கிறார். இப்படி குடும்பம் குடும்பமாக காவு வாங்கியது சுனாமி.
அந்தமான் போன்ற தீவுகளில் மக்கள் ஓட... ஓட... அவர்களுக்கு முன்பாக கடல் நீர் 'குமிழ்' விட்டு, 'குமிழ்' விட்டு, ஊரையும் மக்களையும் சூழ்ந்துள்ளது. அங்கும் பாதிப்பு மிக அதிகம். இப்படி சென்ற இடமெல்லாம் தனது கொடிய கரங்களால் மக்களை கொன்று குவித்தது ஆழிப்பேரலை.
புன்னைவனக் காடுகள்
இதில் அதிசயமான ஒரு உண்மை என்னவென்றால், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை சுனாமி தாக்கவில்லை என்பதுதான். புன்னைவனக் காடுகள் என்றும் மாங்க்ரோ காடுகள் என்று கூறக் கூடிய மரங்கள், கடற்கரை முழுவதும் அந்தப் பகுதியில் ஏக்கரா கணக்கில் இருப்பதுதான். அது மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து அந்த பகுதியை காத்துள்ளது. இத்தகைய புன்னைவனக் காடுகள் கடற்கரை ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்து கடல் அரிப்பு மற்றும் கடல் அலைகளை ஊருக்குள் வரவிடாமல் செய்துவிடுகிறது. அதனால் மிகப் பெரிய ஆழிப் பேரலைகலிருந்து இந்த பகுதி முற்றிலுமாக பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் கல்கத்தா மற்றும் தமிழத்தில்தான் இந்தகைய மாங்க்ரோ காடுகள் இருக்கின்றன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு.
இப்படி இயற்கையே நமக்கு பல வழிகளில் நாம் பாதுகப்பாக வாழ வழிசெய்திருக்கின்றன். அத்தகைய பாதுகாப்புகளை நாம் கண்டுணர்ந்து, அதன் மரபுத்தன்மை கெடாமல் நாம் அதனை பாதுகாக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் மனித குடியிருப்புகளை அமைப்பதை தவிர்த்து, கடல் ஓரங்களில் சவுக்கு, புன்னை போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் சுனாமி ஊருக்குள் வருவதை தவிர்க்கலாம், குறைந்தபட்சம் நாம் தப்பிப்பதற்காகவாவது நேரம் கிடைக்கும்.
இனியாவது இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கு நலம் உண்டு.
புதன், டிசம்பர் 15, 2010
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதிய ஆசிரியர். பிரபு சாவ்லா!
பிரபு சாவ்லா இந்தியாவின் குறிப்படத்தக்க அரசியல் புலனாய்வு பத்திரிகையாளர்களில் ஒருவர். ஆளும் ஆட்சியாளர்கள் கம் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்துவரும் பிரபு சாவ்லா தற்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியா டுடே வாசர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபு சாவ்லா, இந்தியா டுடே மாநில மொழிகளில் வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார். அதுநாள் வரையில் வழவழப்பான தாளில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்தது, இவரின் முயற்சியால் பிராந்திய மொழிகளிலும் வரத் தொடங்கி பெரிதும் வரவேற்பைப் பெற்றுது.
டெக்கான் கிரானிகல் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம் ஜே அக்பர் இந்திய டுடே க்கு தாவுவதால், அங்கிருந்த பிரபு சாவ்லா இந்தியன் எக்ஸ்பிரசுக்கு வருகிறார்.
இதற்கு முன்பே எண்பதுகளில் இந்தியன் எக்ஸ்பிரசில் ஆசிரியராக இருந்துள்ளார். அதோடு தினமணி நாளிதழுக்கும் ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றிவுள்ளார் என்பதும்குறிப்படத்தக்கது.
1946 இல் பாகிஸ்தானில் உள்ள தேரா காசி கானில் பிறந்தவர். தனது கூர்மையான எழுத்துகளால் அவப்போது அரசியல்வாதிகளைக் குத்திக்கொண்டு இருக்கும் பிரபு சாவ்லாவின் பேனா இன்னும் அதிக வேகத்துடன் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
இதில் கொஞ்சமமும் சளைத்தது அல்ல இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அரசியல் புலனாய்வுச் செய்திகளுக்கு எப்போதும் பேர்போனது இந்தியன் எக்ஸ்பிரஸ். அதன் துடிப்பு மிக்க விமர்சனங்களின் வீச்சுகளை தாங்கமுடியாத இந்திராகாந்தி போன்ற அரசியல்வாதிகள் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிராக நெருக்கடி நிலையை அமல்படுத்தி அதை தடுமாறச் செய்தனர். ஆனால் இன்றும் அதே போர்குனத்தோடு, ஆட்சியாளர்களுக்கு எதிராக வாளை சுற்றுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
குழப்பமான இந்த அரசியல் சூழ்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பிரபு சாவ்லாவின் வருகை நிச்சயம் இந்திய அரசியலை ஒரு கைப்பார்க்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
திங்கள், நவம்பர் 15, 2010
இ-மெயில் சேவையை துவக்கியது பேஸ்புக்
என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ் cnn !
திங்கள், அக்டோபர் 25, 2010
இப்போதெல்லாம் யாரும் குளத்தில் குளிப்பதில்லை...
கோட்டானே கோட்டான் *
நம்மை போன்றே பறவைகளும் குளத்தின் பயனை அடைய முடியாமல் போய் விடுகிறது. இது எத்தகைய ஒரு இயற்கை இழப்பு, என்பதை என்னைப் போன்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அதோடு இல்லாமல் மீன்களுக்கு போடும் செயற்கை உணவு மற்றும் கழிவுகள், மருந்துகள் தண்ணிரின் இயற்கை தண்மையை பாதித்து எதிர்காலத்தில் நாம் அதை பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பதுதான் நிஜம்.
வெள்ளி, செப்டம்பர் 10, 2010
தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழி - தினமணி
ஆனால், தமிழனுக்கே உரிய தாய் மொழி பற்று, அதை தவிடிப் பொடியாக்கி தமிழை நாம் இன்றளவும் வாழவைத்துள்ளும். தமிழ் கூறும் நல் உலகில் தமிழுக்கு முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் பலர் முயற்சி செய்து வரும் வேளையில் இந்த தலையங்கம் நமக்கு பெரும் ஆறுதலை தருகிறது.
....இனி தலையங்கம்.
ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா? -நன்றி தினமணி.
புதன், ஆகஸ்ட் 18, 2010
இதற்கும் உமாசங்கரே காரணமாக இருந்துவிடுவாரோ...!
தனியாக மாட்டிக் கொண்ட மாணவர்களை போக்குவரத்து ஊழியர்கள் வெளுப்பதும், மாணவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, நடத்துனர், ஓட்டுனர்களை திருப்பி தாக்குவதுமாக, கலவரம் ஒரு வாரமாக மயிலாடுதுறையின் சுற்று வட்டாரங்களில் நடந்துக் கொண்டு இருந்தது. கல்லூரிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுவிட்டார்கள்.
புத்தகம் வைத்துக் கொண்டு ரோட்டில் எவன் நடந்தாலும் அடி, நானெல்லாம் போலீஸ் நிலையத்தில் நுழைந்து தப்பி வந்தது தனி கதை!.
அப்போது மயிலாடுதுறையில் சப் கலக்டராக இருந்தவர் உமாசங்கர். இந்திய ஆட்சி பணி முடிந்து, முதன் முறையாக துணை ஆட்சியராக அங்கு பதவியேற்றிருந்தார். குள்ளமான உருவம், சற்றே அரும்பிய தாடி என்று அவரும் ஒரு மாணவரைப் போல்தான் இருந்தார்.
கலவரத்தின் நிலவரத்தை உணர்ந்த உமாசங்கர், மாணவர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களை அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தை அவரது கலெக்டர் பங்களாவில் நடைப் பெற்றது. அப்போது இரு தரப்பும் ஆயுதங்களோடுதான் குழுமினார்கள். நாங்கள் எல்லாம் லாரியில், மாணவர்களை திரட்டி பேச்சு வார்த்தைக்கு சென்றோம்.
பேச்சு வார்த்தையின் போது முரண்டு பிடித்த இரு தரப்பையும் சமாதானம் செய்து, சுமுகமாக பேசி, பெரும் கலவரம் நடக்காமல் தடுத்தார் உமாசங்கர். அதிலிருந்து மாணவர்களின் ஹீரோவாகிவிட்டார். அவரது முயற்சி, மற்றும் அணுகுமுறை மாணவர்களிடையே பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.
திங்கள், ஜூன் 28, 2010
செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்
நடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும். மற்றபடி ரோஜா, டேரிப்பூ, லில்லி, போகன்வில்லா, டிசெம்பர், பட்ரோஸ் போன்ற பூக்களின் பெயர்கள் அத்துப்படி. தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களை கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பாடியிருப்பார். அதைதான் நடிகர் சிவகுமார் மனனம் செய்து மேடைதோறும் முழங்கினார். அதனாலேயே தமிழர்களுக்கு நமது மண்ணின் பூக்கள் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது.

நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு வெளியிட்ட 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' மலரில் அந்த தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்களை படங்களோடு வெளியிட்டுள்ளது.
இனி தமிழ் மண்ணின் பெருமை மிகு பூக்களின் பெயர்கள்....

- செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கோடுவேரி
- தேமா
- மணிச்சிகை (செம்மணி)
- உந்தூழ் (பெருமூங்கில்)
- கூவிளம் (வில்வம்)
- எறுழம்
- கள்ளி
- கூவிரம்
- வடவனம்
- வாகை
- குடசம் (வெட்பாலை)
- எருவை (கோரை)
- செருவிளை (காக்கணம், சங்கு)
- கருவிளை
- பயினி
- வாணி (ஓமம்)
- குரவம்
- பசும்பிடி (இலமுகிழ்)
- வகுளம் (மகிழம்)
- காயா
- ஆவிரை
- வேரல் (சிறு மூங்கில்)
- சூரல்
- பூளை
- கன்னி (குன்றி மணி)
- குருகிலை (முருங்கிலை)
- மருதம்
- கோங்கம்
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல் (புனலி)
- சண்பகம்
- கரந்தை
- குளவி (காட்டுமல்லிகை )
- கலிமா
- தில்லை
- பாலை
- முல்லை
- குல்லை
- பிடவம்
- மாறோடம்
- வாழை
- வள்ளி
- நெய்தல்
- தாழை (தென்னம்பாளை)
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மொவ்வல்
- கொகுடி
- சேடல் (பவளமல்லிகை)
- செம்மல்
- செங்குரலி
- கோடல்
- கைதை (தாழை)
- வழை (சுரபுன்னை)
- காஞ்சி
- நெய்தல்
- பாங்கர்
- மரா (கடம்பு)
- தணக்கம் (நுணா)
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி
- அவரை
- பகன்றை
- பலாசம்
- பிண்டி
- வஞ்சி
- பித்திகம்
- சிந்துவாரம் (நொச்சி)
- தும்பை
- துழாய் (துளசி)
- தோன்றி
- நந்தி ( நந்தியாவட்டம் )
- நறவம்
- புன்னாகம்
- பாரம் (பருத்தி)
- பீரம் (பீர்க்கு)
- குருக்கத்தி
- ஆரம் (சந்தனம்)
- காழ்வை (அகில்)
- புன்னை
- நரந்தம் ( நாரத்தம்)
- நாகம்
- நள்ளிருள் நாறி (இருவாட்சி)
- குருந்து (காட்டு எலுமிச்சை)
- வேங்கை
- புழகு (மலை எருக்கு)
மேற்கண்ட தகவல்களை தினமணி நாளிதழ் தனது செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் படத்தோடு வெளியிட்டுள்ளது.
பி கு : தினமணியின் 'செம்மொழி கோவை' புத்தகம் விரிவான விமர்சனம் விரைவில்.
ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !
ஜே.ரங்கராஜன் இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...









