திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தொல்லைத் தரும் தில்லை தீட்சதர்கள்



எனது மனைவியின் ஊரிலிருந்து 14 கி.மீ  தூரத்தில் இருக்கிறது தில்லை அம்பலத்தானின் ஆலையம். அதாவது சிதம்பரம். எங்கள் ஊர் மாயவரம் போக சிதம்பரம் தாண்டித்தான் போக வேண்டும். ஆயிரம் முறை சிதம்பரத்தை தாண்டி செல்வேன்.  ஆனால், ஒரு நாள் கூட அந்த ஆலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற என்னம் என்னுள் ஏற்பட்ட'தில்லை'.  


 எங்கள் திருமணம் முடித்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து இரு சக்கர வண்டியில் சிதம்பரம் கோயிலுக்குச் சென்றோம். பழையபாளையத்திலிருந்து குறுக்கு ரோட்டில் ஆச்சாள்புரம் தாண்டி, கொள்ளிடம் வந்து சிதம்பரத்தை அடைந்தோம். 

40 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமான இங்கு சிவன் கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர் என்று பற்பல பெயர்களில் காட்சித் தருகிறார்.

அங்கு சிற்றம்பல சபையை, தில்லை கூத்தனை  தரிசனம் முடித்து, கோயில் பிரகாரம் சுற்றுகையில் தலையின் பக்க வாட்டில் கொண்டைப் போட்ட இரண்டு இளம் வயது தீட்சதர்கள் எங்களை வளைத்தார்கள்.   எங்களை பார்த்தாலே வெளியூர் புது மண தம்பதிகள் போல் தெரிந்ததாலோ என்னவோ...கையில் ஒரு சீட்டை கொடுத்து கட கடவென்று ஒப்பிக்க ஆரப்பித்துவிட்டார்கள். இது நடந்தது 2002 வருடத்தில்.




எங்களது குலம் கோத்திரம் எல்லாம் குறித்துக் கொண்டார்கள்.   வீட்டுக்கு மாதம் மாதம் பிரசாதம் வரும் அதனால் ஒரு ஆயிரம் ரூபாய் கட்டுங்கள், உங்கள் குடும்பம் சுபீட்சமாக இருக்கும். உங்களுக்கு உடனே ஆண் குழந்தை பிறக்கும். என்று அடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்தக் குடுமிக்காரனிடம் தூக்கிக் கொடுக்க நான் ஒன்னும் அம்மாஞ்சி இல்லை.

அந்த இரண்டு தீட்சதர்களும் எங்களை விடுவதாக இல்லை. ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பித்த பேரம் கடைசியில் 250 ரூபாய்க்கு வந்து நின்றது. "கொடுத்துவிட்டு வாங்க....என்று "என் மனைவியின் நச்சரிப்பு வேறு.    இதற்கிடையில் இன்னும் இரண்டு  இளம்வட்ட தீட்சதர்கள் (?) வந்து சேர்ந்து கொண்டார்கள்.  வந்தவன் கையில் துணியால் சுற்றப்பட்ட  குவாட்டர் பாட்டில் இருந்ததையும் நாம் பார்க்க நேர்ந்தது.  வேண்டாம் என்று அவர்களை  தவிர்த்து தள்ளி வந்தாலும் தொடர்ந்து வந்து தொல்லை தந்தார்கள் அந்த தில்லை தீட்சதர்கள்.  இதை பிரகாரத்தில் நிறைய இடத்தில் காண முடிந்தது.


நானும் பணம் கொடுக்காமல் முரண்டுப் பிடித்துப் பார்த்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. அந்தக் கும்பல் அன்று என்னை 'குறி'வைத்து விட்டார்கள் போலும். அதோடு  இறைவனின் சன்னிதியிலா இந்த வழிப்பறி என்று மனம் குமைந்து, கடைசியில் 200 ரூபாயை அவர்களுக்கு கொடுத்து தொலைத்துவிட்டு வந்தேன். 'அது அன்றைய குவாட்டருக்கு ஆச்சி!'.

வெளியூரிலிருந்து வருபவர்களை சரியாக அடையாளம் கண்டுக் கொண்டு,  காலம் காலமாக  இப்படி பேசி பேசியே காரியம் சாதிக்கக் கூடியக் கலையை அவர்கள் (தீட்சதர்கள்) கற்று வைத்திருக்கின்றனர்?

முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை. அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக (அதாவது தங்கமாக?) அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம். பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம். என்ற கதை இங்கு  சொல்லப்படுகிறது. 

கோயில் சொத்தை கொள்ளை அடிப்பார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

டிஸ்கி:
 நல்லவேளை முந்தைய அரசு, பெரும் போரட்டாத்திற்கு இடையில்  சிதம்பரம் கோயிலை இந்து அற நிலையத் துறையின்  கீழ் கொண்டுவந்துவிட்டது.

ஆயினும் அதை பொருக்க முடியாத சிலர்  உண்டியலில் எண்ணையை கொட்டுவது, வாழைப்பழங்களை உள்ளே போடுவது போன்ற விஷயங்கள் சிதம்பரத்தில்  நடந்துக் கொண்டுதான் இருந்தது.

***இக்கட்டுரை எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினைக் கொண்டு எழுதப்பட்டது.  யார் மனதையும் புண்படுத்த அல்ல.

சுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சியாகிறது டிஸ்கவரி சேனல்.






தமிழகத்தில் 8 சதவீத பார்வையாளர்களைக் கொண்டு முன்னனி தொலைகாட்சியாக மாறிவுள்ளது டிஸ்கவரி.  

அதற்கு முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்கி வந்த டிஸ்கவரி சேனல் இந்தியாவின் முன்னணி மொழிகளை புறக்கணித்து வந்தது. இந்தியாவில் தனது மொழி மாற்று நிகழ்ச்சிகளை இந்தியில் மட்டுமே வழங்கி வந்தது. இதனால் இந்தி இல்லாத தென் மாநிலங்களில் டிஸ்கவரி அவ்வளவாக சோபிக்கவில்லை.

 நேஷனல் ஜீயோகிரப்பி, அனிமல் பிளானட், டூர்ஸ் அண்ட் டிராவல், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஆங்கிலத்தில்தான் வந்தது. இதனால் மக்கள் அதை ரசிக்க முடியாமல் இருந்து வந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் நிகழ்ச்சிகளை  மொழியாக்கம் செய்து வெளியிட்டது டிஸ்கவரி.  இது அனைத்து தரப்பு மக்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றது.  அது நாள் வரையில் வேற்று மொழிகளில் வந்த நிகழ்ச்சிகள் தங்களது மொழியில் வந்ததும், மக்கள் அமோக ஆதரவை டிஸ்கவரிக்கு தந்தனர்.

இயற்கை, வரலாறு, அறிவியல், பூகோளம், புதிய கண்டுபிடிப்புகள், சமையல், ஆன்மீகம், ஊற் சூற்றுதல் என்று அனைத்து துறைகளிலும் அற்புத நிகழ்ச்சிகளை வழங்கி தமிழக மக்களின் ஏகோபித்த  பெற்றுள்ளது.

இல்லத்தரசிகள் அழுதுவடியும் சீரியல்கள் பார்ப்பதும் டிஸ்கவரியின் வருகையால் குறைந்துள்ளது. மானவர்கள், நடுத்தட்டு மக்கள், பெரியவர் சிறியவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் டிஸ்கவரி பார்வையாளார்களானார்கள். இதனால் தமிழ் நாட்டில் அதன் TRP ரேட்டிங்க் கூடிக் கொண்டே இருந்தது., 

இதனை கருத்தில் கொண்டே டிஸ்கவரி நிர்வாகம் டிஸ்கவரி சேனைலை முழுக்க முழுக்க தமிழில் இன்று முதல் (14/08/2011) தொடங்குகிறது.

இனி நம்ம ஊர் செய்திகள் டிஸ்கவரியின் தனித் தன்மையுடன்  வெளிவரும்.  தொடர்ந்து நமது ஆதரவினை அதற்குத் தருவோம்.

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் முதல் வேலை. -பா.ம.க. நிறுவனர் ரமதாஸ்.


இந்த வார கார்டூன்.... 

வியாழன், ஜூலை 28, 2011

இஞ்சி கொத்தமல்லி காபி - எளிதாக தயாரிக்கலாம்



சுக்கு கொத்தமல்லி காபி போன்றுதான் இஞ்சி கொத்தமல்லி காபியும்.  பிளாக் டீ போன்று இதுவும் தாயரிக்க மிக எளிதானது. ஜீரண சக்திக் கொண்டது. இதில் பால் சேர்க்கவில்லை என்பதால் தேவையற்ற அஜீரண தொந்திரவும் இல்லை.   
இஞ்சி, கொத்தமல்லிவிதை (தனியா ), வெல்லம்
இப்படி கொதிக்க வைத்து...

இஞ்சி கொத்தமல்லி காபி தயாரிக்க சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லி விதை, அச்சுவெல்லம் அல்லது நாட்டு வெல்லம், தேவையான அளவு தண்ணீர் இது மூன்றும் போதும்.

கொத்தமல்லி விதையை தண்ணீரில் கழுவி பிழிந்து கொள்ளவேண்டும். இஞ்சியை அரிந்துக் கொள்ளவெண்டும். அடுப்பில் தண்ணீர் வைத்து கொதிக்க தொடங்கியதும். இஞ்சி கொத்தமல்லி விதை, வெல்லம் இந்த  மூன்றையும் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி இறக்க வேண்டும்.

இதில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையோ அல்லது ஜீனியையோ சேர்க்கவேண்டாம்.

தேவைப்பட்டால் கொஞ்சம் மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம், மூக்கடைப்பு உடல் சேர்வுக்கு சிறந்த உற்சாக டானிக் இது.

























புதன், ஜூலை 27, 2011

நண்டு கொழம்பு சாப்பிட்டா ஜலதோஷம் போகுமா...?



சனி புடிச்சாலும் புடிக்கலாம் சளி புடிக்கக் கூடாதும்பாங்க. அப்படித்தான் ஆகிப்போச்சுதுங்க. சும்மா 'ங்கொன...ங்கொன'ன்னு பேசாஆரம்பிச்ச நானு...போகப்போக வாயால மூச்சுவிட ஆரம்பிச்சிட்டேன்.  படுக்க முடியுல தூங்க முடியுல.  கை கால் வலி,  கொடச்சல், இரும்புனதுல்ல மாரு வலின்னு உடம்பு பூரா வலி நீக்கமற நிறைஞ்சிருக்கு. 

தெரு மொனையில இருக்கிற வைஷ்னவி மெடிக்கல் ஷாப்புல ரெண்டு வேளைக்கு மாத்திர வாங்கி சாப்புட்டதுல்ல கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது.  அப்படியும் ஒன்னும் சரியாவுல.  ஜலதோஷத்திற்கு மாத்திர சாப்பிட்டா ஒரு வாரத்தில சரியாகும். இல்லனா....ஏழு.ழு..ழு நாள் ஆகும்பாங்க. அப்படி ஆகிப்போச்சுதுங்க நம்ம நெலமை. 

சிந்தி சிந்தி மூக்கு ரணமா மாறுனதுதான் மிச்சம். அப்பதான் என் பொண்டாட்டி 'நண்டு ரசம் வச்சி சாப்பிட்டா ...சரியாபோயிடும்ன்னா'.  ஊராயிருந்தா நாட்டு நண்டு (வயல் நண்டு)  கிடைக்கும்.   இங்க சென்னையில கடற்கரை பிரதேசத்தில் எப்படி கிடைக்கும். 

நன்பர்கள்ட்ட யோசனை கேட்டதில....கட்டிங் போட்டா சரியாயிடும்ன்னாங்க. கூடுதல் தகவலா  ரம்முல மிளகுதூள் தூவி சாப்பிட்டா இன்னும் சூப்பருன்னாங்க. முதல்லமாதிரி இப்பபெல்லாம் 'ரம்மு' சல்லிசா கிடைக்காததால அந்த யோசனையை கைகழிவிவிட்டு, நண்டு வாங்க போனேன்.   மீன் கடை பாய்வேற... 'மூக்கடைப்புக்கு நண்டு குழம்பு "பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கும்ன்னார்' கூடவே 'ஹாட்டா வையிங்கோன்னு டிப்ஸ்வேற.

கடல் நண்ட சுத்தம் செய்து, மேல் ஓட்டை பிரித்து, சதைப் பகுதியை இரண்டு துண்டா ஒடித்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் கடாயை வைத்து எண்ணை விட்டு வெங்காயம், தக்காளி, பச்சமிளகா, மஞ்சள்தூள், மிளாகா தூள், கருவேப்பில்லை போட்டு வதக்கி நண்டையும் சேர்த்து,  கொஞ்சமா புளி கரைச்சி ஊத்தி கொதிக்க விடவும்.  நன்றாக சுண்டி வரும்போது  தண்ணீர் சேர்க்காமல் மிளகு பூண்டு (தேவைகேற்ப) அரைச்சி குழம்போடு சேர்த்துவிடவும். குழம்பு நல்லா காரம் சாரமா திரண்டு வரும். (தகவல் உபயம் என் மனைவி)   

அதேபோல நண்டு சூப்பும் இதற்கு ஏற்றதுதான்,   நண்டு குழம்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைப்பார்கள். ஆனால் இந்த முறையில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்... ஜலதோஷமும் பறந்திடும். 


சுட சுட சோத்தப் போட்டு...சூடான கொழம்பு ஊத்தி சாப்பிட... சாப்பிட... சும்மா  கண்ணு மூக்கிலயிருந்து 'ஜலம்' தாரை தாரையாக வடியும்.    கொரல்ல இருந்த கரகரப்பு கரைந்து தொண்டை சகஜ நிலமைக்குத் திரும்பும்.  உடம்புல இருந்த வலி போய் ஒரு முறுக்கு(?) ஏறு பாருங்க அப்பதான் உணருவிங்க நண்டோட மகத்துவத்த. அப்ப கெடைச்ச கேப்புல போட்டதுதான் இந்தப் பதிவு.

அப்புறம்..... நண்டு ரசத்துக்கு  இன்னொரு பவரும் உண்டு. அத நான் சொல்லமாட்டேன்!. 


**********












செவ்வாய், ஜூலை 26, 2011

இலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.




18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது.

இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாக செயதிகளை வெளியீட்டுவந்துள்ளனர் இங்குள்ள சில கருங்காலி பத்திரிகையாளர்கள். இந்த கொடுமையை செய்ய, அவர்கள் சிங்கள அரசுக்கு தனது மனைவியையும், மகளையும் கூட்டிக் கொடுத்து மாமா வேலை பார்த்து பணம் சம்பாதித்து இருக்கலாம்.



Thanks: http://www.vinavu.com/2009/09/04/spy/
தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.




இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும்திறமையாகக் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.
அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய்விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறதுஎன்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டுஎஸ்.ஆர்.எம்என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.


-புதிய ஜனநாயகம், செப்டம்பர்௨00௯



வெள்ளி, ஜூன் 03, 2011

புத்தூர் ஜெயராமன் கடையில் எறா குவியல்!






                ந்திரா புத்தூரில் எலும்பு            
      முறிவுக்கு கட்டு கட்டலாம்!!  
                                         


                                   ந்த புத்தூரில் நான் வெஜ்                                  அயிட்டத்தை  ஒரு கட்டு கட்டலாம்!!  
   

அடடா...! அரம்பமே கிறு கிறுக்குதே என்று நினைக்க வேண்டாம்.

சிதம்பரம் சீர்காழி சாலையில் இருக்கிறது புத்தூர்.  இங்கு புத்தூர் ஜெயராமன் கடை படு பிரபலம். சாலை ஓரத்திலேயே குடிசை போன்ற அமைப்பில் இருக்கும் கடையின் எதிரே பல உயர் வகையான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.  மதியம் ஒரு மணிக்கு உட்கார இடமில்லாமல் மனிதர்கள் வாசலில் தவம் கிடக்கிறார்கள். அப்படி சுவைக்கு சரித்திரம் படைக்கிறது புத்தூர் ஜெயராமன் கடை.
      
சுவையான எறா குவியல்


சில வருடங்களுக்கு முன்பு தினமலர் வாரமலரில் பா.கே.ப., பகுதியில் அந்துமணி இந்த கடையை பற்றி எழுதியிருந்தார்.  அப்போதே போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  போன வாரம்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.           


எறா (இறால்) தான் இங்கு   கதாநாயகன் அல்லது கதாநாயகி. கடையின் முகப்பில் பெரிய பெரிய தோசை கல்லில் அம்பாரமாக குவித்து வைத்து தயார் செய்கின்றனர்.  ஒரு ப்ளேட் 75 ரூபாய். இதுவே சென்னையாக இருந்திருந்தால் அதை நான்கு பங்காக போட்டு இருப்பார்கள். அந்த அளவிற்கு எறா குவியலாக கிடைக்கும்.   புத்தூர்;  கடற்கரையோர கிராமம் என்பதால் எறா சல்லிசாக கிடைக்கிறது.

மீன் மற்றும்  சிக்கன் வறுவல்


நல்ல தழை வாலை இலை, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, எறா குழம்பு என்று வகைக்கு ஒன்றாக கிடைக்கிறது.  கூடவே நேர்த்தியாக வறுத்த மீன். சற்றே அளவில் பெரிய கோழி வறுவல் என்று சமையல் சரித்திரம் படைக்கிறது.

அப்புறம் கெட்டி தயிர். ஒரு அண்டாவில் வைத்துக் கொண்டு நமக்கு கட்டிகட்டியாக வெட்டி போடுகிறார்கள். ஆஹா....அற்புதம்!
 கடை உரிமையாளர் ஜெயராமன்
கடை உரிமையாளர் ஜெயராமன்  அமைதியாக பரிமாறுகிறார்.  கூடவே வெங்காயப் பச்சடியில் திக்கான தயிரை விட்டு குழைத்துக்கச் சொல்கிறார்.
இங்கு சமையல் எல்லாமே  பாரம்பரிய முறையில்தான் தயார் ஆகிறது.  சமையலுக்கு விறகு அடுப்பைதான் பயன்படுத்துகிறார்கள்.

  சோறு பெரிய பெரிய பானையில், விறகு அடுப்பில்  வைத்து பொங்கப்படுகிறது.   கீற்று கொட்டகை என்பதாலும் சிறிய இடம் என்பதாலும் இட நெறுக்கடி நிச்சயம் உண்டு.  கொஞ்சம் காத்திருந்துதான் பசியாறணும்.

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருப்பதால், மாணவர்கள் பேராசிரியர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

அடுத்த முறை அந்தப் பக்கம் போனா.... அங்க போயிட்டு வாங்களேன்....?

மீன் குறிப்பு :   இங்கு மதியம் மட்டுமே ஹோட்டல் உண்டு என்பதை நான் சொல்ல மறந்தாலும் நீங்க...போகும் போது நினைக்க மறக்காதீங்க...!?

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...