திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சியாகிறது டிஸ்கவரி சேனல்.






தமிழகத்தில் 8 சதவீத பார்வையாளர்களைக் கொண்டு முன்னனி தொலைகாட்சியாக மாறிவுள்ளது டிஸ்கவரி.  

அதற்கு முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்கி வந்த டிஸ்கவரி சேனல் இந்தியாவின் முன்னணி மொழிகளை புறக்கணித்து வந்தது. இந்தியாவில் தனது மொழி மாற்று நிகழ்ச்சிகளை இந்தியில் மட்டுமே வழங்கி வந்தது. இதனால் இந்தி இல்லாத தென் மாநிலங்களில் டிஸ்கவரி அவ்வளவாக சோபிக்கவில்லை.

 நேஷனல் ஜீயோகிரப்பி, அனிமல் பிளானட், டூர்ஸ் அண்ட் டிராவல், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஆங்கிலத்தில்தான் வந்தது. இதனால் மக்கள் அதை ரசிக்க முடியாமல் இருந்து வந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் நிகழ்ச்சிகளை  மொழியாக்கம் செய்து வெளியிட்டது டிஸ்கவரி.  இது அனைத்து தரப்பு மக்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றது.  அது நாள் வரையில் வேற்று மொழிகளில் வந்த நிகழ்ச்சிகள் தங்களது மொழியில் வந்ததும், மக்கள் அமோக ஆதரவை டிஸ்கவரிக்கு தந்தனர்.

இயற்கை, வரலாறு, அறிவியல், பூகோளம், புதிய கண்டுபிடிப்புகள், சமையல், ஆன்மீகம், ஊற் சூற்றுதல் என்று அனைத்து துறைகளிலும் அற்புத நிகழ்ச்சிகளை வழங்கி தமிழக மக்களின் ஏகோபித்த  பெற்றுள்ளது.

இல்லத்தரசிகள் அழுதுவடியும் சீரியல்கள் பார்ப்பதும் டிஸ்கவரியின் வருகையால் குறைந்துள்ளது. மானவர்கள், நடுத்தட்டு மக்கள், பெரியவர் சிறியவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் டிஸ்கவரி பார்வையாளார்களானார்கள். இதனால் தமிழ் நாட்டில் அதன் TRP ரேட்டிங்க் கூடிக் கொண்டே இருந்தது., 

இதனை கருத்தில் கொண்டே டிஸ்கவரி நிர்வாகம் டிஸ்கவரி சேனைலை முழுக்க முழுக்க தமிழில் இன்று முதல் (14/08/2011) தொடங்குகிறது.

இனி நம்ம ஊர் செய்திகள் டிஸ்கவரியின் தனித் தன்மையுடன்  வெளிவரும்.  தொடர்ந்து நமது ஆதரவினை அதற்குத் தருவோம்.

7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என் வீட்டு தொலைக்காட்சியில் சானல் நம்பர் 1-யை ஆக்கிமித்துள்ளது டிஸ்கவரி..

ராஜ நடராஜன் சொன்னது…

டிஸ்கவரி தமிழ் சரி!அது என்ன டிஸ்கவரி சயின்ஸ் சேனலில் சன் தொலைக்காட்சி?

கடந்த வாரங்களிலிருந்து டிஸ்கவரியில் சன் மற்றும் பாக்ஸ் நியுஸில் உதயா வும் ஒளிபரப்ப படுகின்றன.

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்கள் இந்த வார நட்சத்திரமென்று தலையை மேலே நிமிர்த்திய போதே தெரிந்தது.நட்சத்திர வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அருமையான செய்தி, நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.இதை இனையத்தூடு கட்டணத்துடன் பார்க்க வழிசெய்வார்களா??நசனல் யீயோகிரபியும் கொடுத்தால் பல மாற்றம் பார்வையாளரில் ஏற்படும்.
பலருக்கு மொழி தடையாக இருந்தது உண்மையே!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சௌந்தர். டிஸ்கவரி தமிழில் வருகிறது என்பது நாம் கொடுத்து வைத்தது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி யோகன் பாரிஸ் . அளப்பரிய தகவல்களை நேர்த்தியான மொழி மாற்றத்துடன் வெளியீட்டு எமது இல்லங்களை ஆட்சி செய்து வருகிறது டிஸ்கவரி சானல். அதன் மேன் vs ஒய்ல்ட், ஸ்வார்ட், டர்ட்டி ஜாப், டைம் வார்ப் (நேரத்தின் குறுக்கு வெட்டு தோற்றம்), தி கங்காஸ், How do they do it போன்ற நிகழ்ச்சிகள் மக்களின் யோகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ராஜ நடராஜன் தங்களது வாழ்த்திற்கு.
//அது என்ன டிஸ்கவரி சயின்ஸ் சேனலில் சன் தொலைக்காட்சி?//
இப்படி நான் எங்கும் கூறவில்லையே....?

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...