திங்கள், நவம்பர் 26, 2012
செவ்வாய், அக்டோபர் 30, 2012
கோவலன் தலையை புதைத்த இடம் 'கோவலன் பொட்டல்'
மதுரையில் பழங்கனாதம் என்ற சிற்றூரில்தான் கோவலனின் தலை புதைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்.
சனி, அக்டோபர் 20, 2012
குமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
குமுதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல்!. கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது. வெகுஜன வார இதழில் ஏ ஜோக் வருவது கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும், அதை நேரடியாக படிக்கக் கொடுக்காமல் உட்டாலக்கடி செய்து, முகம் பார்க்கும் கண்ணடியில் காட்டித்தான் படிக்க முடியும் என்ற மிரர் இமேஜில் தந்திருக்கின்றனர்.
ஏ ஜோக் என்றாலும் குமட்டல் அளவில் இல்லாமல், விழுந்து விழுந்து சிரிக்கும் அளவில் இருப்பது இதன் சிறப்பு.
சாம்பிளுக்கு சில....
கதை 1
இரவு 12 மணி.
அந்த டாக்டருக்கு போன் வருகிறது.
"டாக்டர்... டாக்டர்.. என் பையன் காண்டத்தை முழுங்கிட்டான். பள பள காகிதத்தில் இருந்ததால், சாக்லெட்டுன்னு நெனைச்சி முழுங்கிட்டான் டாக்டர். கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர்" என்ற பதறல் குரல் எதிர் முனையில் கேட்டது.
டாக்டரும் கலவரமாகி,"சரி...சரி பயப்படாதிங்க இதோ வந்திடுறேன். பையன பத்திரமாக பர்த்துக்குங்க" என்றார்.
எதிர் முனையில் பேசியவருக்கு இவர்தான் குடும்ப மருத்துவர். அதனால் அரக்க அரக்க இடிக்கி மற்றும் சில மருத்துவ கருவிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகும் போது, மீண்டும் போன் மணி அடிக்கிறது.
முன்பு பேசியவனிடமிருந்தான் போன்.
" டாக்டர்....நீங்க வர வேண்டாம். நானே எடுத்திட்டேன்"
"சபாஷ், நீங்களே பையன் வாயில கைய விட்டு எடுத்திட்டுங்களா....? "
"இல்ல டாக்டர், பீரோ கீழே.... துணிகளுக்கிடையே இன்னொரு காண்டம் இருந்துச்சி. அத எடுத்துட்டேன் டாக்டர்"
".............?!"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதை 2
ஆள் அரவம் அற்ற பாலைவனம்.
பல நாள் காஞ்சி கிடந்த அந்த ராணுவ வீரனுக்கு சுயேச்சையா நின்னு... நின்னு... போரடித்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணாத அவனுக்கு ஓட்டகம்தான் கண்ணில் தென்பட்டது.
அதை பிடித்து இழுத்து வந்த அவனுக்கு ஒட்டகத்தின் உயரம் பெரும்பாடாய் இருந்தது.
அதனால், ஒட்டகத்தின் பின் பக்கம் மணலை குமித்து வைத்து, ஏறி நிற்கும் போது ஒட்டகம் நகர ஆரம்பித்தது.
மீண்டும் மீண்டும் அதே மாதிரி முயற்சி செய்யும் போது, ஒட்டகம் நகர்ந்துக் கொண்டே இருந்தது.
அப்போது...
தூரத்தில் ஒரு பெண் இவனைப் பார்த்து " காப்பாத்துங்க...காப்பாத்துங்க...." என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். மூன்று பேர் அவளை கற்பழிக்க துரத்திக் கொண்டு வந்தனர்.
இவன் அந்த மூன்று ரவுடிகளையும் சண்டைபோட்டுஅடித்து விரட்டிவிட்டு, அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.
அந்த பெண், இவனிடம் கண்ணீர் மல்க " என்னை அந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை காப்பாத்துனதுக்கு பிரதிஉபகாரமா நீங்க என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கிங்க. என் உடல் பொருள் எல்லாதையும் தர்ரேன் என்றாள்"
அதற்கு அந்த ராணுவ வீரன்.
"மேடம், ஒரு சின்ன ஹெல்ப்.
இந்த ஒட்டகத்த கொஞ்சம் ஆடாம பிடிச்சுக்குங்க?!" என்றான் கெஞ்சலாக!.
ஞாயிறு, அக்டோபர் 07, 2012
"சசிகுமாரு......என்னப்பு இப்டி பண்ணிப்புட்டியே.....???"
"அண்ணே வணக்கம்னே.... !"
"நேத்துதான் நம்ம அம்பத்தூர் ராக்கி தியேட்டர்ல சுந்தரபாண்டியன் படத்த பார்த்தேன்னே. பொண்டாட்டி புள்ளக்குட்டியோட படம் பாக்க போயிருந்தேன்னே. சும்ம சொல்லக் கூடாதுன்னே...அந்த போஸ்டர் ஒட்டுற சீன்லயே புரிஞ்சிடுச்சின்னே, ஓ....இவிங்க... அவிங்கலான்னு?!".
"நல்லவேளையின்னே, உள்ளாற போறப்ப யாரும் கேக்கல. "நீ எங்கிட்டேருந்து வர்றன்னு. இல்லேன்னா சூது வாது புரியாம நானும் தஞ்சாவூர்காரன்னுட்டு சொல்லிப்புட்டேன்னு வச்சிகீங்க, கொண்டே புடுவாய்ங்கள்ல. அப்படி இருந்தன்னே தியேட்டரு. பூரா உசிலம்பட்டிகாரயிங்க போலயிருக்கு...சசிகுமாரு வர்றப்பயெல்லாம் சும்மா 'விசிலு' தூள் பறக்குது. சசிகுமாருக்கு அரசியல் ஆசை வந்திடிச்சின்னே. பாட்டு பில்டப்பும் படம் பில்டப்பும் அததான் சொல்லுது. பிரேமுக்கு பிரேமு அண்ணனோட அரசியல் ஆசை தெரியுதன்னே....?!".
"இப்படிதான்னே இரண்டு மூனு வருஷத்துக்கு முன்னாற, காமடி நடிகர் கருனாஸ், முத்துராமலிங்க தேவரோட இருக்குறாப்புல போஸ்டர் அடிச்சி ஒட்டினாருன்னே. அப்புறம் எஸ்.ஜே.சூர்யா வந்தாருன்னே. இப்போ நம்ம சசிகுமாரும் சொல்லிபுட்டாரும்னே".
"இப்பாதான்னே பயலுவ, அக்கம்பக்கம் பக மறந்து, வேலு கம்பு, வீச்சரிவாள தூக்கி எரிஞ்சி, தாயாபுள்ளயா பழகிகிட்டு இருக்காங்க... இப்பம்போயி மறுபடியும் முதல்லேருந்தான்னே....? நல்லதா நாலு கருத்த சொல்லலாம்னே....? அத விட்டுட்டு இப்படி சாதி பெரும ஏன்னே....? ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க, கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே...? நல்லா வெளங்கும்னே ....??"
"சசிகுமாரு அண்ணே... எல்லாம் நம்ம பயங்கதான்னு, பொத்தாம் பொதுவா படம் எடுங்க....? இப்படி வேணாம்டியேய்!?".
"நல்லவேளையின்னே, உள்ளாற போறப்ப யாரும் கேக்கல. "நீ எங்கிட்டேருந்து வர்றன்னு. இல்லேன்னா சூது வாது புரியாம நானும் தஞ்சாவூர்காரன்னுட்டு சொல்லிப்புட்டேன்னு வச்சிகீங்க, கொண்டே புடுவாய்ங்கள்ல. அப்படி இருந்தன்னே தியேட்டரு. பூரா உசிலம்பட்டிகாரயிங்க போலயிருக்கு...சசிகுமாரு வர்றப்பயெல்லாம் சும்மா 'விசிலு' தூள் பறக்குது. சசிகுமாருக்கு அரசியல் ஆசை வந்திடிச்சின்னே. பாட்டு பில்டப்பும் படம் பில்டப்பும் அததான் சொல்லுது. பிரேமுக்கு பிரேமு அண்ணனோட அரசியல் ஆசை தெரியுதன்னே....?!".
"இப்படிதான்னே இரண்டு மூனு வருஷத்துக்கு முன்னாற, காமடி நடிகர் கருனாஸ், முத்துராமலிங்க தேவரோட இருக்குறாப்புல போஸ்டர் அடிச்சி ஒட்டினாருன்னே. அப்புறம் எஸ்.ஜே.சூர்யா வந்தாருன்னே. இப்போ நம்ம சசிகுமாரும் சொல்லிபுட்டாரும்னே".
"இப்பாதான்னே பயலுவ, அக்கம்பக்கம் பக மறந்து, வேலு கம்பு, வீச்சரிவாள தூக்கி எரிஞ்சி, தாயாபுள்ளயா பழகிகிட்டு இருக்காங்க... இப்பம்போயி மறுபடியும் முதல்லேருந்தான்னே....? நல்லதா நாலு கருத்த சொல்லலாம்னே....? அத விட்டுட்டு இப்படி சாதி பெரும ஏன்னே....? ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க, கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே...? நல்லா வெளங்கும்னே ....??"
"சசிகுமாரு அண்ணே... எல்லாம் நம்ம பயங்கதான்னு, பொத்தாம் பொதுவா படம் எடுங்க....? இப்படி வேணாம்டியேய்!?".
திங்கள், செப்டம்பர் 17, 2012
தில்லியில் தினமணி நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு பற்றிய சிறப்பு தொகுப்பு
![]() |
| மாநாட்டு மலரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்ட போது எடுத்தப் படம். |
தமிழ் தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் மற்ற நாளிதழ்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது தினமணி. சென்னையை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் தனது 8 வது பதிப்ப்பினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தொடங்கியது. தொடங்கியது முதற்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கி களப்பணி ஆற்றி வருகிறது தினமணி.
தமிழ் நாடு இல்லம் முதற்கொண்டு பாண்டிச்சேரி ஹவுஸ் வரை தினமணி தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் டில்ல்லியில் நடை பெற்ற அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு சிதறி இருந்த தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டியுள்ளது.
தமிழகம்,புதுச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்னாடகாம், மும்பாய், டெல்லி என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அமைப்புகள் இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளன....!
இனி மாநாட்டு உரைகள்:
'அறிவார்ந்த சமுதாயம்தான்
போரில்லா உலகைப் படைக்கும்!'
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்.
நாம் செய்யும் எந்தப் பணி, இந்த நாட்டை, அறிவார்ந்த நல்ல மக்களுடைய நாடாக மாற்ற விதை விதைக்கிறதோ, அந்தப் பணிதான் நாம் சமுதாயத்திற்குச் செய்யும் நற்பணியாகும். எனவே, இன்றைக்கு தமிழ்ச் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயம் மலரச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
தில்லித் தமிழ்ச் சங்கமும் "தினமணி' இதழும் இணைந்து புதுதில்லியில் நடத்தும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியது:
இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்த விழா சிறப்பு பெறுகிறது. தமிழுக்கும், தமிழர்தம் சமுதாய நல்வாழ்வுக்கும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி விவாதிக்க இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குரிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளைப் படைக்கும் திறன் பெற்ற வாழ்வு. அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் வளர்ச்சி குறித்து எண்ணும்போது புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல், அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று.அதாவது அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே எமனாக மாறி அழித்திவிடும் என்பது பொருள்.
எனவே, இந்தக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம்தான், அடுத்த தலைமுறைகளைப் போரில்லா ஓர் உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும். கம்பன் சொல்கிறார்:
"யாரொடும் பகை கொள்ளலன் எனின், போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின், வேரொடும் கெடல், வேண்டல் உண்டாகுமோ'
இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர்.
நண்பர் கவியரசு வைரமுத்து, சமீபத்தில் எழுதிய "மூன்றாம் உலகப் போர்' என்ற ஓர் அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோம். நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம் என்றார் அப்துல் கலாம்.
வைரமுத்து உரை அடுத்தப் பதிவில்.....
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
"நினைவுகள் மடியும் பொழுது....?!"
"எவ்வளவோ மக்க(ள் )வர்றாங்க போறாங்க அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இருக்க மாட்டங்குது. நல்லா இருக்காங்க, திடீருன்னு எப்படி இருக்காங்க என்னு, ஊருக்கு போறப்ப கேட்டா, உனக்கு விசயமேதெரியாதா, அவரு போயி மாசம் இரண்டாகுதுன்னு ரொம்ப அசால்ட்டாக சொல்றாங்க."
ராமச்சந்திரன் நைனா, ஓங்குதாங்கா இருந்த நாராயணசாமி மாமா, மேரி அக்கா, எங்க வூட்டுக்கு பால் ஊத்துன இருளாயி அக்கா, 'டகு' அண்ணன்னு எல்லாம் சட்டு சட்டுன்னு போறாங்க. அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இல்ல. எவ்ளோ பேரு ஒன்னுமே இல்லாம செத்து போறாங்க. போனதடவ ஊருக்கு போறப்ப பாக்குறவுங்க அடுத்த தரவ போறப்ப இருக்க மாட்டாங்கறாங்க...?
நெனச்சி நெனச்சி மனசு ஆத்து போவுது...! இப்ப கூட எழுதறப்ப கண்ணுல தண்ணி முட்டுது. என்ன வாழ்க்கைடா சாமி!.
-தோழன் மபா
Thanks Photo: http://xavi.wordpress.com/net/
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012
இருதடமான 'இருதயம்'
இருதயம் என்பது ஒரு காரணப் பெயர். 'இருதடம்' என்பது மருவி இருதயம் ஆனது. தடம் என்பதற்கு பாதை
அல்லது வழி என்று பொருள். இருதயத்தில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல
ரத்தம் செல்லும் பாதை மற்றொன்று அசுத்த ரத்தம் செல்லும் பாதை. அதனால்தான்
அதற்கு இருதடம் என்று பெயர் வந்தது. அதைதான் நாம் இருதயம் என்று அழைத்து
பின்னர் 'இதயம்' என்று ஷர்ட் கட் செய்துவிட்டோம்.
- பேராசிரியர் சர்.இரா. இராமகிருஷ்ணன்.
இருதய நோய் நிபுணர். சென்னை.
- பேராசிரியர் சர்.இரா. இராமகிருஷ்ணன்.
இருதய நோய் நிபுணர். சென்னை.
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
பகல் நேரத்து பஸ் பயணமும் புத்தக வாசிப்பும்!
இப்போதெல்லாம் பகல் நேரத்து பஸ் பயணத்தையே மனம் விரும்புகிறது. சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதாக இருந்தாலும் சரி பகல் நேர பஸ் பயணமே வசதியாக இருக்கிறது.
வீடு, அலுவலகம் என்று எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இச் சூழ்நிலையில், புத்தகம் படிக்க நல்லதொரு வாய்ப்பு எங்கே கிடைக்கிறது?. வீட்டில் படிக்கலாமென்றால் ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் என்று பிய்த்து எடுத்துவிடுகிறார்கள். பேருந்து பயணம்தான் புத்தகங்களை படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. முன்பெல்லாம் பேருந்து பயணத்தின்போது ஜூவி அல்லது ஆவி என்று ஏதாவது ஒன்று கைகளில் படபடக்கும். இப்போதெல்லாம் அந்த தப்பை செய்வதில்லை. ஆவியை வீட்டில் பி(ப)டிப்பதோடு சரி!.
போகும் தூரத்தை கணக்கில் வைத்து புத்தகங்களின் எண்ணிக்கையும் அமைகிறது. கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு சனிக் கிழமையும் சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம். சனிக்கிழமை அரை நாள்தான் வேலை நாள் என்பதால், மதியம் ஒரு மணிக்கே அலுவலக கேண்டினில் சாப்பிட்டுவிட்டு பைக்கை உருட்டினால், அடுத்த அரை மணி நேரத்தில் கோயம்பேடு. மாயவரம் செல்லும் ஏதாவது ஒரு சிறப்பு (?) பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்துக் கொண்டால் போதும், புத்தகம் படிக்க ஏதுவான சூழல் உருவாகிவிடும்.
ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பர்பி அல்லது பிஸ்கெட் பாக்கெட். இது போதும் புத்தகம் படிக்க....! இடையிடையே கொஞ்சம் ஆயாசம் ஏற்படும், அப்போது புத்தகத்தை நெஞ்சோடு வைத்து மூடிவிட்டு,கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது நல்லதொரு தூக்கம் போடலாம். இடையே பேருந்தை எங்கேயாவது ஓரங்கட்டுவார்கள், அங்கே இறங்கி சும்மா சூடாய் ஒரு டீ (அது வென்னீராய் இருந்தாலும் அமுதமாக இருக்கும்) குடிக்கலாம். முடிந்தால் ஒரு 'தம்' போடலாம்.
பயணத்தின் போது வள வளவென்று பக்கத்து சீட்டு காரரிடம் பேச வேண்டாம். நம் குலம் கோத்திரத்தை அவர் விசாரிக்க, பதிலுக்கு நாம் விசாரிக்க...என்று மொக்கை போடவேண்டாம். முடிந்தால் சிறு இடைவேளையில் எஸ். ராமகிருஷ்ணன் போல் பயணிகளிடம் பாடம் படிக்கலாம்.
இப்படிதான் கபூர் குல்யாம் எழுதிய 'குறும்பனை' ஒரு பஸ் நேர பயணத்தில்தான் படிக்க முடிந்தது. திருச்சி போகும் போது அலமாரியில் பொத்தாம் பொதுவாய் எடுத்ததில் 'குறும்பன்' கைக்கு அகப்பட்டான். அப் அண்ட் டவுனில் அந்த 300 பக்க நாவலை முடித்தேன். (என்னமோ... எழுதினா மாதிரி பீத்திக்கிறியேன்னு கேட்கப்படாது?! இதெல்லாம் ஒரு ஜாலி பதிவுதான்)
கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்', சாருவின் 'எக்சைல்', கீரனூர் ஜாகிர் ராஜவின்'கருத்த லப்பை', பாமாவின் 'வன்மம்', சன்முகம் எழுதிய 'சயாம் மரண ரயில்', பல்லவி ஐயர் எழுதிய 'சீனா- விலகும் திரை', வைக்கம் முகமது பஷீரின் தொகுப்புகள், சு.கி.ஜெயகரனின் 'மூதாதையரைத் தேடி', கரசூர் பத்மா எழுதிய 'குறவர் இன வரைவியல்' வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' என்று படிக்கும் பட்டியல் பஸ் பயணத்தை பொறுத்து நீண்டுக் கொண்டே இருக்கிறது.
தட தடக்கும் பேருந்து பயணத்தில் 'குற்றப்பரம்பரை' பெரிய பிரயாசையையே ஏற்படுத்தியது. லைட் ரீடிங்காய் இருந்தால், பக்கங்கள் படபடவென்று நகரும். இது கொஞ்சம் ஹாட் ரீடிங். அதன் கதையின் கனம் தாங்கமல் அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். கதை இன்னும் மிச்சமாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது?!
நான் கொஞ்சம் பொறுமையான வாசிப்பாளிதான். பிடித்த வரிகளை இரண்டு மூன்றுதரம் மறுபடியும் வாசித்துவிட்டு, பிறகுதான் அடுத்த வரிக்கு தாவுவேன். முழுசாய் ஐந்தாறு பக்கம் முடிந்ததும், அதைப் பற்றிய பிரமிப்போ அல்லது 'சை என்னடா...இது!' என்ற என்னமோ எழும். புத்தகத்தை மூடிவிட்டு கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்ப்பேன். பிறகு மறுபடியும் எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். வேடிக்கை பார்ப்பதும் வாசிப்பதும் பஸ் பயணத்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கும்.
சின்ன குழந்தைகள் காராசேவை வைத்து.... வைத்து.... சாப்பிடுமே அப்படி!.
அதுவும் பகல் நேரத்து பயணம் ஒரு கவிதைதான்.
எங்கேயோ ஒரு ஆள் இல்லா வனாந்திரத்தில் உள்ள மோட்டலில் பஸ்ஸை நிறுத்துவார்கள். சொற்பமாய் இருக்கும் பயணிகள் இறங்கி அங்கொன்றாய் இங்கொன்றாய் நிற்க, வெயில் சுள்ளென்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை காய்ந்துக் கிடக்கிறது. தூங்குமூஞ்சு மரத்தின் கீழ் நிற்கும் பேருந்தில் கொஞ்சம் வெக்கையோடு மனிதர்கள் தண்ணீர் பாட்டிலைத் திறக்க, கடைசி சீட்டிற்கு முந்தைய சீட்டில் உள்ள குழந்தை எதையோ கேட்டு அடம் பிடிக்கிறது. மோட்டல் ஓரத்தில் ஒன்னுக்கு போக போனவரை, காவலாளி துரத்திக் கொண்டு இருக்க.... ஸ்பீக்கரில் "எத்தன முறதா காப்பி கொடுப்பா எங்கக்கா. எத்தன முறதான் பாட்டு பாடுவா எங்கக்கா" ன்னு பாடிக் கொண்டு இருந்தார் சின்னபொண்ணு.
நின்றிருந்த பேருந்து புழுதியை வாரி இறைத்துவிட்டு சின்ன குலுக்களோடு பைபாஸ் ரோட்டில் ஏறியது. புழுக்கம் குறைந்து காற்று சுள்ளென்று முகத்தில் மோதியது!. சன்னலுக்கு வெளியே உலகம் கழுவி துடைத்தது போல் பளிச்சென்று நகர்ந்துக் கொண்டு இருக்க..... பகல் நேர பஸ் பயணம் படிக்கவும், உணரவும் நல்லதொரு இலக்கியமாகவே என்னுள் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
படங்கள் உதவி: http://voipadi.blogspot.in/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !
ஜே.ரங்கராஜன் இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...








