செவ்வாய், அக்டோபர் 11, 2011

'தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை' -ஷாருக்கான்.




              தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. பல திறமையான தொழிற் நுட்பக் கலைஞர்கள் தமிழ் சினிமா உலகில் உள்ளனர்.

 பாலிவுட்டின் முன்னணி நச்சத்திரமான ஷாருக் கான் நடித்துள்ள ரா ஒன் ஹிந்திப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  மொழிமாற்றத்துடன் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.


'ரா ஒன்' பாடல் வெளியீட்டு விழா

ரா ஒன் ஒரு புதிய முயற்சி. இந்தப் படத்தை தென்னிந்திய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறோம். தமிழ் தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பது சிரமம். எனினும், மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் கேட்டால் தமிழில் நடிப்பேன். உலகின் தலைசிறந்த சினிமா நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழகத்தில் உள்ளனர். தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது சிறு வயதில், மும்பையில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு ரசிகனாக தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். அப்போது அவருடன் நடிப்பேன் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ரஜினி மாதிரி இன்னொருவர் நடிக்க முடியாது. அவரைப் போன்ற மனிதநேயம் மிக்க ஒரு பண்பாளரைப் பார்ப்பது அரிது.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் திறமையானவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. ரஜினியின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது. ராணா படப்பிடிப்பை விரைவில் தொடங்க வேண்டும் என்ற துடிப்பில் ரஜினி இருக்கிறார். விரைவில் அவர் நடிப்பார். அந்த நாளுக்காக மற்றவர்களைப் போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

ரஜினியுடன் சந்திப்பு
                                     
    

பாடல் சி.டி. வெளியீட்டு விழா முடிந்தவுடன் திங்கள்கிழமை மதியம் 12.40 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்துக்குச் ஷாருக் கான் சென்றார்.

அங்கு ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற ஷாருக் கான், சுமார் 40 நிமிஷங்கள் அவருடன் பேசினார். அதன் பிறகு பிற்பகல் விமானம் மூலம் மும்பை சென்றார்.

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...