வெள்ளி, நவம்பர் 04, 2011

"நூலகத்தை மூடு...டாஸ்மாக்கை திற"


ஜெ அரசின் கொள்கை

'ஒரு பக்கம் நூலகங்களை மூடும் ஜெயலலிதா மறுபக்கம், தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்கிறார்.'


'ரோம் நகரம் தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தானாம்.'   அப்படி இருக்கிறது ஜெயலலிதாவின் செயல். 
 
தமிழகமே தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டு இருக்க...இவர் அரசு இயந்திரத்தை முடுக்கி நிவாரண உதவிகளை செய்யாமல், வீன் வேலைகளில் கவனம் செலுத்தி தமிழக  மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். .

"விதை ஒன்னு போட்டா, சொர ஒன்னா முளைக்கும்?"  என்று கிராமத்தில் கேட்பார்கள்.  மனதில் துவேஷமும், பழி தீர்க்கும் உணர்ச்சியும் இருப்பவர்களால் இதற்கு மேல் நல்ல ரிசல்ட்டை தர முடியாது. 

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, முதலில் செய்த  காரியம் 'செம்மொழி நூலகத்தை' செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தூக்கி வீசியது.  

மூவாயிரம் வருடம் தாண்டி இன்றும் பேச்சு மொழியாக இருக்கக் கூடிய மொழி செம் மொழியாகும். ( படிக்க:  செம்மொழி என்றால் என்ன ? கவிக்கோ அப்துல் ரஹ்மான்)  அந்த வகையில் அன்றையை முதல்வர் கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாட்டை கூட்டினார்.   மொழிக்காக ஒரு மாநாடா என  உலகினோர் வியக்கும் அளவிற்கு அம் மாநாடு நடைபெற்றது.

மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, அதற்காக ஒரு நூலகத்தை பிரத்யேகமாக அமைக்க வேண்டும், என்ற உயரிய என்னத்தில்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 'செம்மொழி நூலகத்தை' சிறப்புடன் அமைத்தார் கருணாநிதி.  கோட்டையில் சட்டபேரவை வளாகத்தில் அழகுடன் அமைக்கப்பட்டது அன் நூலகம்.

வந்தார் மகராசி. முதல் வேலையாக அந்த செம்மொழி நூலகத்தை தூக்கிக் கடாசினார்.  இன்று அந்த  அரிய வகை நூல்கள் டிபிஐயில் மூலைக்கொன்றாய் குவித்து வைக்கப் பட்டுள்ளன.


அடுத்த கை அரிப்புக்கு இதோ இப்போ 'அண்ணா நூற்றாண்டு  நினைவு நூலகம்'.  

சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 180 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்' திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால்  இன்று மருத்துவமனையாக மாற்ற உத்திரவிட்டுள்ளார் ஜெயலலிதா. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.


ஒரு பக்கம் நூலகங்களை மூடும் ஜெயலலிதா மறுபக்கம், தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்கிறார். குடிக்க வழி செய்து  தமிழர்களை குடிக்கு அடிமையாக்குகிறார்.  (படிக்க: குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்)  தமிழர்கள் படிக்க வழியில்லாமல், குடிக்கு அடிமையாகி அறிவு வளர்ச்சியின்றி முடங்கி போக வேண்டும் என்று நினைக்கின்றாரோ  என்னவோ தெரியவில்லை?. 

ஆட்சிக்கு வந்த உடனே....புதிய சட்டசபை வளாகத்தை பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என்றார்.  இது நாள் வரையில் ஒரு சிறு வேலைகூட அங்கு தொடங்கவில்லை. ஆட்சிக்கு வந்த இந்த 7 மாதத்தில்,  தமிழகத்தில் ஒரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. 

சிலருக்கு படித்தவர்களையும் பிடிக்காது. படிப்பவர்களையும் பிடிக்காது. ஏன்னா... படிச்சு அறிவு வளர்ந்திடுச்சின்னா, ஒரு அடிமையும் முதுகு வளைய நமஸ்காரம் பன்ன மாட்டானே...?  அப்புறம், பொழப்பு நாறிடுமே.... என்ன செய்வது என்று நினைக்கின்றார்களோ என்னவோ.....?

காழ்புணர்ச்சியாலும் பழி வாங்கும் என்னத்தாலும் ஜெயலலிதா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு எதிராகத்தான் முடியும் என்பது சமச்சீர் குளறுபடியின்போதே நாம் புரிந்துக் கொண்ட ஒன்று. நீதிமன்றம் அவர் தலையில் தட்டிய ஒன்று!.


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லப் பதிவு!அருமை விளக்கம்!
வாழ்த்துக்கள் நண்பரே!
நானும் கவிதை வன்னு எழுதியுள்ளேன் நேரமிருப்பின்
பாருங்கள்!

புலவர் சா இராமாநுசம்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றென சொன்னீர்
நயம்பட உரைத்தீர்.
உள் அகத்தை மாற்றி
நூல் அகத்தே இருத்தல்
நயம் என்றீர்.

நல்லதும் ஏறாது
நனி தமிழில்
சொன்னாலும் புரியாது,
நாளொரு நாடகம்
நாளும் நடத்திடும்.

பொருத்தருளா மனமுண்டு
பொல்லாங்கே செய்திடும்.
அய்ந்து வருடங்கள் ஆயினும்
அழிந்து போகுமோ....
அம்மாவின் இக்குணம்...?

(ஐயா!, தங்களது கவிதைக் கண்டு இன்புற்றேன். அதைப்போலவே கொஞ்சம் எழுதியும் பார்த்தேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்)
-அன்புடன் தோழன் மபா.

வவ்வால் சொன்னது…

தோழர் மாபா,

நூலகத்தை மூடக்கூடாது சொன்னிங்க ரைட்டு, மூடக்கூடாது(துக்ளக் சோவ பக்கத்தில வச்சு இருந்தா துக்ளக் புத்தி தான் வரும்) தான்,ஆனா என்னாத்துக்கு சரக்கு கடைக்கு வரிங்க, அது நம்ம ஏரியா, விட்டுருங்க , சரக்கு கடைல சுகாதாரம் இல்லை, உட்கார நல்ல சேர் இல்லை அதை எல்லாம் சரி செய்ய சொல்லுங்க அம்மாவ :-((

ஒரு 1/4 க்கு 5 ரூபா கூடுதலா கேட்கிறாங்க கெவர்மெண்ட் கடைல...அந்த அநியாத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா....
விரைவில் இப்படிலாம் கூட அறிவிப்பு வரலாம்,

தமிழ் நாட்டின் தலை நகரம் கொட நாட்டுக்கு மாற்றம்,

கூடன் குளம் அணு உலையை கோபாலபுரத்துகு இடம் மாற்ற செய்ய வேண்டும் சட்ட சபையில் அம்மா தீர்மானம்!

அண்ணா அறிவாலயத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா இடம் மாற்றம் செய்ய வேண்டும்!

கோயம்பேடு,கத்திப்பாரா மேம்பாலங்களில் ரூப் டாப் ரெஸ்டாரண்ட் திறக்கப்படும்!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...