புதன், நவம்பர் 23, 2011

சென்னைக்கு அழகு சேர்க்கபோகும் மெட்ரோ ரயில். படங்கள் இணைப்பு.

 எம்எம்டிஏ சிக்னல் அருகில்                                                                                                                               




                 சென்னையில் திரும்பிய திசையெல்லாம்  போக்குவரத்து நெரிசல் முழி பிதுங்கி கிடக்கிறது.  நகரின் அனைத்து பாகங்களிலும் பெரிய பெரிய தூண்களும், டைனோசர் சைசுக்கு இருக்கும் கிரேன்களும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று நம்மை பயமூட்டுகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நகரின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதால் சென்னை முழுவதுமே போக்குவரத்து ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது. 

பொறுமைசா
லிகளான   சென்னை வாசிகள், இன்றைய  சிரமம் நாளைய வசதிக்காக என்று இந்த சிரமத்தை பொறுத்துக் கொண்டு உள்ளனர்.

சென்னையின் நாளைய அடையாளமாய் மாறப்போகும் மெட்ரோ ரயில் திட்டப்  பணிகளைப் பற்றிய நான் எடுத்த  புகைபடங்களும் சில விபரத் துளிகளும்.....

  பிரமாண்டமான தூண்கள்!


இணைப்புக் கிராதி


இணைப்புக் கிராதி

    
    இனி கோயம்பேடு பேருந்து நிலையதிற்குள்ளேயே...  ரயில் வரும்!
  • சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முந்தையை திமுக அரசு கொண்டு வந்ததுதான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். 

  • சுமார்  ரூ.14,600 கோடி இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

  • துணை முதல்வர் ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

  • இத்திட்டம் 2014ம் ஆண்டில் முடிவடைந்து ரயில் ஓடத் துவங்கும்.

  • இதற்கான முயற்சிகள் 2006ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டன.

  • 2006 ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவை இந்த தி்ட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

நீண்டு செல்கிறது பாலம்
  • இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.14,600 கோடி. இதில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். மீதித் தொகையை ஜப்பான் அரசு    ( Japan International Cooperation Agency (JICA)) கடனாக வழங்குகிறது.
-படங்களும் செய்திகளும் தொடரும்.

4 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

அழகன் சொன்னது…

ஐயா, நீங்க வேற 'அம்மா'வுக்கு ஏன் இதை நினைவூட்டுகிறீர்கள்?. அவர் முன்பே இந்த மெட்ரோ சரியில்லை, மோனோ ரயில் தான் சரி என்று ஒரு வெடிகுண்டு வீசினார். எப்போ இந்த மெட்ரோ திட்டமும் ஒரு முதியோர்/சிறுவர் மருதுவமனைக்கு நோயளிகளை எடுத்துச் செல்லும் அதிவிரைவுப் பாதையாக அறிவிக்கப் போகிறார்களோ!!. தலைஎழுத்து.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தோழரே....தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி அழகன். உண்மையை நாம் ரொம்ப நாளைக்கு மறைக்கமுடியாது. நல்லதை தவிர்க்கவும் முடியாது. மோனோ ரயில் உலகில் தோல்வியடைந்த திட்டம். அம்மா என்ன மந்திரம் போட்டாலும் மோனோ ரயில் இங்கு வெற்றியடைய சாத்தியக் கூறுகள் குறைவு.

கருத்திட்டமைக்கு நன்றி!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...