ஞாயிறு, டிசம்பர் 11, 2011

இந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்!.

பார்சிக்களின் வரலாறும் - வாழ்க்கையும் !


 பார்சிக்களின்  வழிபாடு
வீன இந்தியாவில் பார்சிக்களின் பங்களிப்பு மகத்தானது. சுதந்திரதிற்குப் பிறகான வர்த்தக விரிவாக்கத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பார்சிக்கள்.  மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிகை கொண்ட பார்சிக்கள், ஜவுளி, எஃகு, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்களது பங்களிப்பை இந்தியாவிற்காக இதய சுத்தியுடன் ஆற்றியுள்ளனர். அவர்கள் பங்களிப்பின்றி இந்திய வர்த்தக உலகம் முழுமை அடைவதில்லை!. 


அடிப்படையில் வியாபாரிகளான பார்சிக்கள், தங்களது உயர்வான வியாபார அனுகுமுறையால் இந்திய வர்த்தக உலகை எப்போதும் காப்பாற்றி வருகின்றனர். இந்தியாவின் வர்த்தக தலைநகராக  மும்பையை மாற்றியது பார்சிக்கள்தான்.

1951ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  1.12 லட்சம் பார்சிக்கள் இருந்துள்ளனர்.   2001ம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அதுவே 70 ஆயிரமாக குறைந்துவிட்டது.  வர்த்தகத்தை பெறுக்கத் தெரிந்த பார்சிக்களுக்கு, தங்களது வர்க்கத்தை பெறுக்கத் தெரிந்திருக்கவில்லை?  என்பது ஆச்சரியமான விஷயம்தான்!.

யார் இந்த பார்சிக்கள்? அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் இயல்பாக எழும்? அவர்கள் இந்தியாவிற்காக என்ன செய்துவிட்டார்கள்....? என்ற கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடும்?.

பார்சிக்களின் வியாபார சாம்ராஜ்ஜியத்திற்கு  "டாடா"   ஒரு சோறு' பதம்!.


டாடாவிற்கு புதிய தலைவர். 

'சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி

இந்தியாவில் முக்கால்வாசி இந்தியர்கள், தினந்தோறும் எப்படியாயினும் இந்த வார்த்தையை உச்சரிக்காமலேயோ, அல்லது பயன்படுத்தாமலேயோ இருக்க மாட்டார்கள்.  நகரம் முதற்கொண்டு சிறு கிராமம் வரை டாடாவின் ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது ஒரு இந்தியன் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பான்.  உப்பு, ரசாயனம், ஜவுளி, நிதி, உருக்கத் துறை, மோட்டார் வாகனத் தயாரிப்பு, தகவல் தொழிற்நுட்பம், மின் உற்பத்தி என பல்வேறு  வர்த்தக நடவடிக்கையில்  டாடா குழுமம் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் 143 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 379,675 கோடி (83 பில்லியன் டாலர்) வர்த்தகம் கொண்ட டாடா சாம்ராஜ்ஜியத்திற்கு 'சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி' புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   43 வயது கொண்ட சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் 6வது தலைவராவர். இளம் வயதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இவரே...!

கட்டுமான வியாபாரத்தில் மிக முக்கிய புள்ளியான பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்தான் இந்த   சைரஸ் மிஸ்திரி. ஃபோர்பஸ் பத்திரிகையின் கூற்றுப்படி 8.8 பில்லியன் டாலர்  சொத்துமதிப்பு கொண்ட,  பார்சி சமூதாயத்தின் 'ரிச்சஸ்ட் பார்சி'யாவார்.   டாடா குடும்பத்தை சாராத இரண்டாவது தலைவரும் இவரே!. சைரஸ் மிஸ்திரியை நியமித்ததன் மூலம் தனது பார்சி தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது டாடா குழுமம்  என்கின்றது தி நியு இந்தியன் எஃஸ்பிரஸ் நாளிதழ்.  டாடா குழுமத்தின் அதிகப்படியான பங்குளை கொண்ட முதலீட்டாளர் மிஸ்திரி, என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரத்தன் டாடா

73 வயதான ரத்தன் டாடா  ஓய்வுபெற்றுவிட்டார். ரத்தன் டாடாவின் தலைமையில், உலக அளவில் மிகக் குறைந்த விலையில் நானோ காரை தயாரித்து,  உலக மக்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்தது டாடா நிறுவனம்.  பல புதிய சாதனைகளை உலக அளவில் செய்தது டாடா குழுமம். தனிமை விரும்பியான  ரத்தன் டாடா, திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நவீன இந்தியாவின் கட்டமைப்பில் 'டாடா' என்ற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்று!. சுதந்திரத்திற்குப் பிறகான, இந்தியாவின் வளர்ச்சியில் டாடா குழுமத்தின் பங்கு மகத்தானது.  86 நாடுகளில் டாடா குழுமம் கிளை பரப்பி இருக்கிறது. உலக அளவில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் டாடா குழுமத்தில் பணிபுரிகின்றனர், என்கின்றபோதே... அதன் பிரம்மாண்டம் நமக்கு புரிந்திருக்கும்!.


பார்சிக்கள் யார்? / பார்சிக்களின் வரலாறு. 

 வழிபாடு


இந்தியாவில் பார்சிக்களின் வரலாறு 9 மற்றும் 10ம்  நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது.  அடிப்படையில் ஈரான் நாட்டை சார்ந்த  ஜொரொஸ்டியன்  மதத்தை சார்ந்தவர்கள் பார்சிக்கள்.  அரேபியர்கள் ஈரானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, தங்களை இனரீதியாகக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.


 அரேபியர்கள் ஈரானில் தங்களது மதமான இஸ்லாத்தை, பரப்பினார்கள். இஸ்லாம் மதத்தை பின்பற்றாதவர்களுக்கு 'ஜசியா' என்ற வரியை விதித்தனர்.  கடுமையான அந்த சட்டம்  ஜொரொஸ்டியன் மதத்தை பின்பற்றி வந்த பார்சிக்களை கடுமையாக பாதித்தது. வரி கட்டாதவர்களுக்கு சாட்டை அடியும், கடுமையான சிறை தண்டனையும், அடிமையாக நாடு கடத்தவும் செய்தனர்.  சில நேரங்களில் மரணதண்டனையும் வழங்கப்பட்டது.

 வரி கட்டாதவர்களுக்கு இந்த நிலை என்றால், வரி கட்டுபவர்களையும்  கேவலமாக நடத்தினார்கள் வரி வசூல் செய்வர்கள்.

ஜொரொஸ்டியன் மத கோயில்கள் இடிக்கப்பட்டு, அங்கு மதரஸாக்கள் கட்டப்பட்டு இஸ்லாம் போதிக்கப்பட்டது.  ஜொரொஸ்டியன் மத குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு, குரான் கற்றுத்தரப்பட்டது.  அரேபியர்களின் நோக்கம் ஜொரொஸ்டியன்களை  கொல்வதல்ல!, மாறாக அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதுதான் முக்கியமான வேலையாக இருந்தது.

பார்சிக்களின் மதச் சின்னம்

 ஜொரொஸ்டியன் மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் அதிக ஒற்றுமைகள் காணப்பட்டன. சொர்க்கம் நரகம், ஆண்டவரின் இறுதித் தீர்ப்பு, தினமும் 5 வேளை தொழுகை (ஜொரொஸ்டியன் கீக்ஸ் - similar to the five Zoroastrian Gehs) போன்றவை இரு மதத்திற்கும் பொதுவானவையாக இருந்தன.   இதனாலேயே சில ஜொரொஸ்டியன்களுக்கு  மதம் மாறுவது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.  ஆனால் பெரும்பாலான ஜொரொஸ்டியன்கள் அன்னிய மதத்தை ஏற்காமல், தங்களது மதத்தையே பின்பற்றிவந்தனர். தங்களது பிள்ளைகளுக்கு தமது மதத்தின் உயரிய கோட்பாடுகளைக் கூறி வளர்த்தனர்.

இரு மதங்களுக்கும்  சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும் வழிபடும் முறைகளில் மாற்றம் இருக்கத்தான் செய்தது. ஜொரொஸ்டியன்கள் கொழுந்து விட்டு எரியும் புனித நெருப்பையே கடவுளாக வணங்கினார்கள்.  மெக்கா திசை நோக்கி தொழுகை நடத்தவும், மண்டியிட்டு அல்லாவை வணங்கவும் அவர்கள் தயாரில்லை. இதனாலயே கலிபாக்களின் ஆட்சியில், அவர்களுக்கு மரணதண்டனைகள்  வழங்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில், ஈரானில் இஸ்லாம் தீவிரமாகப் பரப்பப்பட்டது.  புனிதர் முகமதின் வழி வந்த கலிபாக்கள்  ஈரானை ஆண்டு வந்தனர். இஸ்லாம் அல்லாத அல்லது மதம் மாறாத  பிற மதத்தினர் அங்கு வாழ்வது கடினம் என்ற  சூழல் ஏற்பட்டது. மதம் மாறாத பிற மதத்தினருக்கு கடும் இன்னல்கள்  தரப்பட்டன.  மதம் மாறாதவர்கள், செத்து ஓழிய வேண்டும் அல்லது சொந்த நாட்டை விட்டு ஓட வேண்டும், அல்லது அன்னிய மதத்திற்கு மாற வேண்டும். இதுதான் ஈரானின் அப்போதைய நிலை?

இனியும் இங்கு வாழ்ந்தால் தங்களையும் தங்களது மதத்தையும் காப்பாற்ற முடியாது என்றுணர்ந்த ஜொரொஸ்டியன்கள், 10ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு அடைக்களம் தேடி புறப்பட்டனர்.  ஒரு குழுவாக புறப்பட்ட அவர்கள்,  இந்தியாவில் மேற்கு கடற்கரையோரம் ஒரு தீவில் இறங்கினார்கள்.

-தொடரும் 


உலகில் சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் எது தெரியுமா....?
பிறந்த மண்ணைவிட்டு பிரிவதுதான்.6 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

தொடர்கிறேன்..

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சூர்யா ஜீவா, தொடருங்கள்!. தங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

துளசி கோபால் சொன்னது…

சுவாரசியமான தகவல்கள்.

தொடர்கின்றேன்.

என் பார்ஸி தோழிகள் பலர் 'பஹாய் ஃபெயித்' என்னும் மதத்ததை(???!!!!) இப்போது பின்பற்றி வருகின்றனர்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி துளசி கோபால் முதன் முறையாக வந்து கருத்திட்டமைக்கு.

தொடருங்கள்....தொடர்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

இதுநாள் வரை பார்சிக்கள் பற்றித் தெரியாமல் இருந்தது. உங்கள் கட்டுரை அதை தீர்த்து வைக்கிறது. தொடருங்கள்.

பெயரில்லா சொன்னது…

உண்மை , பஹாவுல்லா ஈரானில் தோன்றினார். அவர் தன்னுடைய அவதார வருகையை அறிந்த பின்னர் இந்த உலகில் எல்லா மதங்களும் எதிர்பாரத்திருக்கும் அவதாரம் தானே என்று பிரகடனப்படுத்தினார்.

அறியப்படாத ஆலம்பரைக் கோட்டை

தினமணியில் வந்த எனது கட்டுரை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையானது இந்தியாவின் மிக அழகான கடற்கரை சாலை என்று வர...