வியாழன், டிசம்பர் 22, 2011

சென்னை புத்தகக் காட்சி விளம்பர தூதுவராக நடிகர் சூர்யா!


சூர்யா

       தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா  சென்னையில் தொடங்க இருக்கும், 35வது சென்னை புத்தகக் காட்சிக்கு விளம்பர தூதுவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22/12/2011) மதியம் சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, புத்தக  அரங்க ஒதுக்கீடு நிகழ்ச்சியில் பப்பாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) இத் தகவலை தெரிவித்தார். 20 வினாடிகள் வரும் இந்த விளம்பரத்தில், சூர்யா... மக்களிடையே புத்தக வாசிப்பின் மகத்துவத்துவத்தை   அறிவுறுத்தும்வகையில்  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது...


சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு விருது!

"பொதுவாக மாடர்ன் ரைட்டர்ஸ்க்குதான் புத்தகக் காட்சியின் போது விருதுகள், பாராட்டுகள் வழங்கப்படுகிறது என்றும், சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர்கள் சென்னை புத்தகக் காட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உள்ளது. அதனால், அதை துடைக்கும் வகையில்,  இந்த வருடம் சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு விருதுகள் வழங்கப்படும். 

இந்த வருட கலை நிகழ்ச்சியில் மாற்று நிறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.  அதோடு,   புத்தகத் துறையில் 30 வருடங்கள் பணி நிறைவு செய்தவர்களுக்கு  பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும்.   புத்தகக் காட்சி அரங்கிற்குள் LCD டிவிக்கள் வைத்து குறந்த கட்டணத்தில்,  பதிப்பாளர்களுக்கு விளம்பரம் செய்துத் தரப்படும்."  என்றார்.


எழுத்தாளர்களுடன் நேரடி உறையாடல்.
 
எழுத்தாளர் ஞானி
    

அடுத்து பேசிய எழுத்தாளர் ஞானி "இந்த முறை வாசகர்கள் எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்கும் பொறுட்டு, தினந்தோறும் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நடத்தப்படும். இதில் மொத்தம் 18 எழுத்தாளர்கள் பங்கேர்ப்பார்கள்.   எந்தந்த எழுத்தாளர்கள், வாசகர்களை சந்திப்பார்கள் என்பதை பின்னர் முடிவு செய்வோம்.  இந்த முயற்சியில் நான், பாரதி புத்தகலாயம் நாகராஜன், மற்றும் கிழக்கு பதிப்பகம் பத்திரி சேஷாத்ரி ஆகியோர் ஈடுப்பட்டுள்ளோம் " என்றார்.


முடிக்கும் போது...."இந்த முயற்சி எல்லாம் என்னுடையது அல்ல, இது முழுக்க முழுக்க பப்பாசியினுடையது" என்றார்...   தப்பிக்கும் நோக்கில். தேர்வில் விடுப்பட்ட எழுத்தாளர்கள் தம் மீது கோபப்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். 

எப்போதும் பேண்ட் ஜிப்பாவில் வரும் ஞானி, இன்று வேஷ்டி ஜிப்பாவில் வந்திருந்தார்.  அதற்கே ஒரு ஷொட்டு கொடுக்கலாம். 


நன்றி: சூர்யா புகைப்படம் சவுத் ட்ரீம்ஸ்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...