சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் தி நியூவ் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற மூன்று ஆங்கில பத்திரிகைகளும், தனித்தனியே விதவிதமான கண்காட்சிகளை நடத்துகின்றன.
இது ஒரு அதிசயமான நிகழ்வு என்றே சொல்லாம்!.
பத்திரிகை விற்பனை மற்றும் விளம்பரங்களில் போட்டிக் போட்டுக் கொண்டு இயங்கி வரும் இந்த மூன்று நாளிதழ்களும் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துவது வித்தியாசமானதுதானே.....?!
தி நியூவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் 'எக்ஸ்பாண்டிங் மெட்ரோபாலிஸ்' என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பிளாட் புரோமோட்டர்ஸ் கலந்துக் கொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். அதோடு பெரிய மற்றும் நடுத்தர பட்ஜெட் அடுக்குமாடி விற்பனையாளர்களும் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.
நிலத்தில் முதலீடு செய்யக்கூடிய வகையில், நமது பட்ஜெட்டில் வாங்கக்கூடிய மனை விற்பனையாளர்களும் தங்களது அரங்குகளை இக் கண்காட்சியில் அமைத்துள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உபயோகமான கண்காட்சி இது!.
தி ஹிண்டு நாளிதழ் தனது 'ஹோம் டெக்கார்' என்ற கண்காட்சியை இங்கு நடத்துகிறது. இதில் வீடு உள் அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் ஸ்டால்கள் இக் கண்காட்சியில் இடம் பெருகின்றன.
தி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஹோம் அப்ளையன்ஸஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ற ''கண்சுயூமர் குட்ஸ்' கண்காட்சியை நடத்துகிறது.
இந்த மூன்று கண்காட்சிகளும் இன்றும் நாளையும் மட்டுமே நடைபெறுகிறது.
வாங்க.....போங்க....!
-தோழன் மபா.
6 கருத்துகள்:
ஆச்சரியம் தான்...! தகவலுக்கு நன்றி...
நன்றி DD!
அந்த எக்ஸ்போலதான் கால்கடுக்க நின்றுக் கொண்டு இருக்கிறோம்!.
ஆச்சரியம் ஆனால் உண்மை
@ கரந்தை ஜெயக்குமார். நன்றி அய்யா!
மூன்று பேருமே சொல்லிவைத்துக்கொண்டுதான் நடத்துகின்றன என்பது பார்த்தாலே தெரிகிறதே! முதல் ஆசாமி, புதிய வீடுகளை அறிமுகப்படுத்துவார். இரண்டாமவர் அவ்வீட்டில் போடுவதற்கு மேஜை நாற்காலி சோபாக்கள் தருவார். அதில் உட்கார்ந்து அனுபவிக்க LED TV வாங்க மூன்றாவது ஆசாமி ஆலோசனை தருவார். நல்ல ஆசாமிகள் நீங்கள்! முதலில் பணம் சம்பாதிக்க வழி சொல்லுங்களய்யா!
@ Chellappa Yagyaswamy. சார், அப்படி எல்லாம் இல்லை இது எதேச்சையாக நிகழ்ந்தது.
கருத்துரையிடுக